விஜய் போட்ட குண்டு; கலக்கத்தில் ஆளுங்கட்சி!
''தமிழக வெற்றிக்கழகத்துடன்
கூட்டணி வைப்போருக்கு ஆட்சி,
அதிகாரத்தில் பங்கீடும்,
அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்,'' என்று
அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய்
கூறியிருப்பது, தமிழக அரசியல் களத்தில்
பெரும் சூட்டைக் கிளப்பி இருக்கிறது.
தமிழ்த்திரை உலகின்
சூப்பர் ஸ்டாரான நடிகர் விஜய்,
கடந்த பிப்ரவரி 2ம் தேதி,
தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில்
புதிய கட்சியைத் தொடங்கினார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு,
விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை
தொடங்கியபோதே அவரின் அரசியல்
வருகை தொடர்பான பேச்சும்
தொடங்கி விட்டது.
இன்றைய தேதியில்,
இந்தியாவில் 200 கோடி ரூபாய்
சம்பளம் பெறும் வெகுசில
நடிகர்களில் விஜய்யும் ஒருவர்.
அதிகபட்ச சம்பளம், புகழின் உச்சத்தில்
இருக்கும் ஒருவர் முழுநேர
அரசியல்வாதியாக களம் காண வருகிறார்
என்றபோதே பலரின் புருவங்களும் உயர்ந்தன.
கட்சி தொடங்கியபோதே,
நமது இலக்கு 2026 ச