11400 கோடி ரூபாய் வங்கி கொள்ளை மோடிக்கு தெரிந்தே நடந்ததா? அதிர்ச்சி தகவல்கள்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 11400 கோடி ரூபாய் மோசடி செய்த பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட டாவோஸ் மாநாட்டில் பங்கேற்றதன் மூலம் பாஜக மேலிடத்தின் ஆசியுடன் இந்த முறைகேடு நடந்திருக்கலாம் என்ற அய்யத்தை காங்கிரஸ் எழுப்பி இருக்கிறது.
யார் இந்த நீரவ் மோடி?:
குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் நீரவ் மோடி (46). 'ஃபயர் ஸ்டார் டைமண்ட்' என்ற பெயரில் கச்சா வைரங்களை கொள்முதல் செய்து, அதை ஆபரணங்களாக வடிவமைத்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருவதுதான் அவருடைய தொழில்.
இந்தியாவில் டெல்லி, மும்பை, சூரத் ஆகிய இடங்களில் அவருக்கு பங்களாக்கள், நகைக்கடைகள் உள்ளன. தவிர, லண்டன், சிங்கப்பூர், நியூயார்க், லாஸ் வேகாஸ், ஹவாய் தீவுகள், பெய்ஜிங் ஆகிய இடங்களிலும் கடைகள் உள்ளன. பெரும்பாலும் வெளிநாட்டுப் பயணங்களிலேயே நேரத்தை செலவிடுபவர் நீரவ் மோடி.
பால...