Sunday, April 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: பிரதமர்

கக்கூஸ் போறதுக்கும் ஜிஎஸ்டி வரியா?;  சமூகவலைத்தளங்களில் வைரல்

கக்கூஸ் போறதுக்கும் ஜிஎஸ்டி வரியா?; சமூகவலைத்தளங்களில் வைரல்

அரசியல், இந்தியா, ஈரோடு, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெருந்துறையில் உள்ள ஓர் உணவகத்தில், கழிப்பறையை பயன்படுத்திய வாடிக்கையாளரிடம் பத்து ரூபாய் கட்டணமும், அதற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், பார்சல் கட்டணமும் வசூலித்துள்ள நிகழ்வு, சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்துவதற்காக பெரும்பாலான உணவகங்களில் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால், ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு, சில உணவகங்கள் கழிப்பறை பயன்பாட்டுக்கும் தனியாக கட்டணம் வசூலிக்கின்றன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ருக்குமணி அம்மாள் ஹோட்டல் என்ற பெயரில் பிரபலமான ஓர் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகம், ஜூனியர் குப்பண்ணா உணவக உரிமையாளர்களுக்குச் சொந்தமானது. இந்த உணவகத்திற்கு வந்த ஒரு வாடிக்கையாளர் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்தியுள்ளார். அதற்காக அந்த உணவக நிர்வாகம், 10 ரூபாய் கட்டணம் வசூலித்ததோடு, அதற்கு மாநில ஜிஎஸ்டி,
ஜியோ விளம்பரத்தில் மோடி; ஆர்டிஐ தலைவர் பிரதமர் அலுவலகத்திற்கு கடும் எச்சரிக்கை!

ஜியோ விளம்பரத்தில் மோடி; ஆர்டிஐ தலைவர் பிரதமர் அலுவலகத்திற்கு கடும் எச்சரிக்கை!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் ரிலையன்ஸ் ஜியோ விளம்பரங்கள் வெளியிடப்பட்டது குறித்த விவகாரத்தில், இந்திய தகவல் ஆணையத் தலைவர் ஆர்.கே. மாத்தூர், பிரதமர் அலுவலகத்தை கடுமையாக எச்சரித்துள்ளார். ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் அதிபர் முகேஷ் அம்பானி ஓராண்டுக்கு முன்பு, ஜியோ நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தினார். அது தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. பிரதமரின் புகைப்படத்துடன் கூடிய ஜியோ விளம்பரங்கள் நாடு முழுவதும் உள்ள முன்னணி நாளிதழ்கள், டிவி சேனல்களில் தொடர்ந்து வெளியாகின. அம்பானி, அதானி போன்ற தொழில் அதிபர்களுக்காகவே பிரதமர், வேலை செய்வதாக ஏற்கனவே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், இந்த விளம்பரங்கள் மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஜியோ விளம்பரத்தில் பிரதமரின் புகைப்படம் வெளியிட முறையான அனுமதி வழங்கப்பட்டதா? என்பது க
இந்திய வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 9.50 லட்சம் கோடியாம்!

இந்திய வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 9.50 லட்சம் கோடியாம்!

இந்தியா, முக்கிய செய்திகள்
இந்திய வங்கிகளின் செயல்படாத சொத்துக்களின் மதிப்பு 9.50 லட்சம் கோடியாக உயரும் என்று அசோசெம் எனப்படும் இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அசோசெம் அறிக்கையில் மேலே சொல்லப்பட்ட ஒரு வரி தகவல்தான், புதிய செய்தி. அதற்கு முன்பாக செயல்படாத சொத்துக்கள் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியதாகிறது. வாராக்கடன் (Bad Debt) மற்றும் வாரா அய்யக்கடன் (Bad and Doubtful Debt) என்ற சொற்கள் எல்லாம் கணக்குப்பதிவியலை ஒரு பாடமாக படித்தவர்கள் நன்கு அறிவர். அந்த வாராக்கடன் சொல்லுக்குதான் புதிய மூலாம் பூசி, 'செயல்படாத சொத்துக்கள்' (NPA - Non Performing Asset) என்கின்றனர். இந்த புதிய சொல்லாடல் எல்லாமே 1991க்கு பிறகுதான் நடைமுறைக்கு வருகிறது. அதாவது, உலகமயம் கொள்கையை கையில் எடுத்த பிறகு. அப்போது இருந்துதான் தாராளமயம், தனியார்மய கொள்கைகளும் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டன.
கர்ப்பமாக இருப்பதாக சொன்ன பிரதமர்!

கர்ப்பமாக இருப்பதாக சொன்ன பிரதமர்!

உலகம், முக்கிய செய்திகள்
இந்தியாபோல் அல்லாமல் மேற்கு உலக நாடுகளில் பிரதமர் பதவியில் இருப்பவர்கள்கூட குடும்பத்துடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிப்பதும் மிக இயல்பாக அரங்கேறும் நிகழ்வுகள். இங்கிருப்பதுபோல், எந்த நேரமும் உயர் பாதுகாப்பு படையினருடன் உலா வருவது கிடையாது. தங்களைப் பற்றிய சொந்த தகவல்களையும்கூட அடிக்கடி பொதுவெளியில் பகிர்ந்து கொள்கின்றனர். இப்போது நியூஸீலாந்து பிரதமராக இருக்கும் ஜெசிந்தா ஆர்டர்ன், தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். தானும், தனது கணவருமான கிளார்க் கேஃபோர்ட்டும் தங்களுடைய குழந்தை ஜூன் மாதம் பிறக்குமென்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அச்சமயத்தில் தான் ஆறு வாரகால விடுப்பு எடுக்கவுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார். '2017-ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது என்று எண்ணியிருந்தோம்' என்று தனது இன்ஸ்டாகி
ரஜினி அரசியல்; பின்னணியில் பாஜக?

ரஜினி அரசியல்; பின்னணியில் பாஜக?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்குவது குறித்த முடிவின் பின்னணியில் பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் இருப்பதாக பரபரப்பு யூகங்கள் கிளம்பியுள்ளன. ஆன்மிக அரசியல் என்றதுகூட பாஜகவைத்தான் மறைமுகமாக ரஜினிகாந்த் முன்னிலைப்படுத்துகிறார் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 24, 2017) ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு மூலம் டிடிவி தினகரன்தான் அன்றைய நாளை பரபரப்பில் வைத்திருந்தார். இன்றைய ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 31, 2017) நடிகர் ரஜினிகாந்துக்கானதாக ஆகியிருக்கிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என கடந்த 21 ஆண்டாக நிலவி வந்த எதிர்பார்ப்புக்கு ஒருவழியாக இன்று முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. ''நான் அரசியலுக்கு வருவது உறுதி. ஆன்மிக அரசியல்தான் எனது பாதை. உண்மை, உழைப்பு, உயர்வு அதுதான் என் கொள்கை. கடந்த ஓராண்டாக அரசியல் கெட்டுவிட்டது. இந்த சிஸ்டத்தை
குஜராத் தேர்தல் முடிவு தமிழகத்தில் எதிரொலிக்குமா?; பாஜகவை ‘தாளிக்கும்’ மீம் கிரியேட்டர்கள்!

குஜராத் தேர்தல் முடிவு தமிழகத்தில் எதிரொலிக்குமா?; பாஜகவை ‘தாளிக்கும்’ மீம் கிரியேட்டர்கள்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
குஜராத், ஹிமாச்சல் பிரதேச மாநில தேர்தல் முடிவுகளின் தாக்கம் தமிழகத்திலும் எதிரொலிக்கும் என்ற பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா ஆகியோரை மீம் கிரியேட்டர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். தமிழகத்தில் ஒருபோதும் மதவாத அரசியல் எடுபடாது என்றும் சூடாக பதிலடி கொடுத்துள்ளனர். நடந்து முடிந்த குஜராத் மற்றும் ஹிமாச்சல்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. ஒரு வாக்கு அல்லது ஒரு தொகுதி முன்னிலை பெற்றாலும் வெற்றிதான். அதனால் வேண் டுமானால் தேர்தல் வெற்றியை பாஜக கொண்டாடலாமே தவிர, சட்டை காலரை தூக்கிவிட்டுக்கொள்ளும் வெற்றி அல்ல. குறிப்பாக, குஜராத் மாநிலத்தில். குஜராத் மாநிலத்தில் ஒட்டுமொத்த காபினெட் அமைச்சர்களையும் களமிறக்கி, தேர்தல் வேலை பார்த்தது பாஜக. காங்கிரஸின் மணிசங்கர அய்யர், பாகிஸ்தானுடன் சேர்ந்து கொண்டு தன்னை கொல்ல சதி செய்வதாகவெல்லாம் உச்சக
குஜராத், ஹிமாச்சலில் பாஜக வெற்றி!; காரணம் என்ன?; சரிகிறதா  மோடி இமேஜ்?

குஜராத், ஹிமாச்சலில் பாஜக வெற்றி!; காரணம் என்ன?; சரிகிறதா மோடி இமேஜ்?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
குஜராத் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்ததிலும், ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியதிலும் பாஜக அபாரமாக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், சொந்த மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு வெகுவாக சரிந்திருப்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தொடர்ந்து 6வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. சுயேட்சைகளுக்கு 6 இடங்கள் கிடைத்து இருக்கின்றன. ஹிமாச்சல்பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜக 44 இடங்களிலும், ஆளுங்கட்சியான காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வென்றுள்ளனர். ஹிமாச்சல் பிரதேசத்தை க
தூய்மை இந்தியா ‘மணம் வீசும்’ மோடியின் சொந்த கிராமம்!

தூய்மை இந்தியா ‘மணம் வீசும்’ மோடியின் சொந்த கிராமம்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பளபளவென்று கண்ணாடி போல மின்னும் சாலைகள், கைகளால் துடைத்துவிட்டு சாலையிலேயே சோறள்ளிப் போட்டு சாப்பிடலாம்; எங்கு பார்த்தாலும் பூத்துக் குலுங்கும் மலர்ச்சோலை; மூடப்பட்ட சாக்கடைக் கால்வாய்; வீடுகள்தோறும் கழிவறைகள் என்றெல்லாம் பாராட்டலாம்தான். ஆனால், நிலைமை அப்படி இல்லையே! தூய்மை இந்தியா பிரச்சாரத்தில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தான் பிறந்த ஊரை மட்டும் தரம் உயர்த்தாமலா இருப்பார்? என்று எல்லோருமே சாதாரணமாக கேட்டுவிட்டு நகர்ந்து விடலாம். ஆனால், களநிலவரம் அப்படி இல்லை என்கிறது. குஜராத் மாநிலம் மெக்சனா மாவட்டத்தில் இருக்கும் வாட்நகர் நகராட்சியில்தான், பிரதமர் நரேந்திர மோடி பிறந்தார். அவருடைய வாழ்வின் தொடக்கப் பகுதி அங்குதான் கழிந்தது. பிரதமரின் சொந்த ஊர் என்பதால், அதுவும் டீ விற்ற ஒருவர் உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தின் சக்கரவர்த்தியாக ஆகியிருக்கிறார் என்பத
ஓபிஎஸ்: தர்ம யுத்தம் ‘2.0’!

ஓபிஎஸ்: தர்ம யுத்தம் ‘2.0’!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
எடப்பாடி பழனிசாமி மீது உச்சக்கட்ட அதிருப்தியில் இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எப்போது வேண்டுமானாலும் தர்ம யுத்தத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கலாம் என்ற ஊசலாட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா, ஜானகி அணி என உடைந்த கட்சி, பிறகு ஜெயலலிதா தலைமையில் வீறு கொண்டு எழுந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என மூன்று அணிகளாக உடைந்து இருக்கிறது. டெல்லி ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இப்போது அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. ஆறு மாத காலம் தர்ம யுத்தம் நடத்தி வந்த ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் பதவியைப் பெற்றுக்கொண்டு, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டார். துணை முதல்வர் பதவி என்றபோது அவருக்குள் ஒரு சிந்தனை ஓடியிருக்க வேண்டும். ''ஜெயலலிதா 'உள்ளே' சென்றபோதெல்லாம் நாம்தான் நம்பர்-1 ஆக இருந
ஓபிஎஸ் – மோடி திடீர் சந்திப்பு; பின்னணி என்ன?; ”ஒப்புக்கு சப்பாணியாக இருக்க முடியாது”

ஓபிஎஸ் – மோடி திடீர் சந்திப்பு; பின்னணி என்ன?; ”ஒப்புக்கு சப்பாணியாக இருக்க முடியாது”

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று டெல்லியில் பிரதமர் மோடியை இன்று (அக். 12, 2017) நேரில் ச ந்தித்து இருப்பதன் பின்னணியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்டுள்ள பனிப்போர் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகக்குள் பிளவுகள் ஏற்பட்டன. சசிகலாவுக்கு எதிராக திடீரென்று போர்க்கொடி தூ க்கிய ஓ.பன்னீர்செல்வம், 12 எம்எல்ஏக்களுடன் தனி அணியாகச் செயல்பட்டார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா சிறை செல்வதற்கு முன்பாக, தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்துவிட்டுச் சென்றார். தமிழகத்தில் காலூன்ற துடித்துக் கொண்டிருந்த பாஜக, சிதறிக்கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைத்தால்தான் தனக்கு பெரிய அளவில் ஆதாயம் எனக்கருதி, இணைப்புக்கான வேலைகளில் இறங்கியது. பாஜவின் அஜன்டாவை அதிமுகவுக்குள் இருக்கும் மைத்ரேயன் எம்பி மூல