இந்தியாபோல் அல்லாமல் மேற்கு உலக நாடுகளில் பிரதமர் பதவியில் இருப்பவர்கள்கூட குடும்பத்துடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிப்பதும் மிக இயல்பாக அரங்கேறும் நிகழ்வுகள். இங்கிருப்பதுபோல், எந்த நேரமும் உயர் பாதுகாப்பு படையினருடன் உலா வருவது கிடையாது.
தங்களைப் பற்றிய சொந்த தகவல்களையும்கூட அடிக்கடி பொதுவெளியில் பகிர்ந்து கொள்கின்றனர். இப்போது நியூஸீலாந்து பிரதமராக இருக்கும் ஜெசிந்தா ஆர்டர்ன், தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
தானும், தனது கணவருமான கிளார்க் கேஃபோர்ட்டும் தங்களுடைய குழந்தை ஜூன் மாதம் பிறக்குமென்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அச்சமயத்தில் தான் ஆறு வாரகால விடுப்பு எடுக்கவுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
‘2017-ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது என்று எண்ணியிருந்தோம்’ என்று தனது இன்ஸ்டாகிராம் சமூகவலைதளத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
தற்போது, 37 வயதாகும் ஜெசிந்தா ஆர்டர்ன், 1856-ஆம் ஆண்டுக்கு பிறகு, நியூசிலாந்தின் இளம் வயது பிரதமராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்ப்பமாக இருப்பதாக ஆர்டர்ன் அறிவிப்பு வெளியிட்டபிறகு, அவரது சமூகவலைதள கணக்குகளில் ஏரளாமானோர் வாழ்த்து செய்திகளை குவித்துள்ளனர்.