
‘காவிகளின்’ ஆட்சியில் கலவர பூமியானது இந்தியா! “பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில்தான் அதிக வன்முறையாம்”
இந்தியா முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் இனவாத, வகுப்புவாத போராட்டங்கள், குற்றச் சம்பவங்கள் அதற்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 41 விழுக்காடு அதிகரித்து உள்ளதாக நடுவண் அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மத்திய உள்விவகாரத்துறை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், கடந்த 2017 ஜூலை 25-ம் தேதியன்று பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். அதில் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற வகுப்புவாத மற்றும் இனவாதக் கலவரங்கள் குறித்த புள்ளிவிவரக் கணக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை கிட்டத்தட்ட மோடி அரசின் மூன்றாண்டு ‘சாதனைகளின்’ ஒப்புதல் வாக்குமூலமாக அமைந்துள்ளது.
தேசிய குற்றப் பதிவுத்துறை (NCRB) வெளியிட்டுள்ள தகவல்களின் படியே அந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதாலும், அதை மத்திய அமைச்சரே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாலும் அந்தப் புள்ளிவிவரங்களை மோடியின் பக்தாள்கள் யாரு