Monday, September 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

ஐபிஎல் கிரிக்கெட்: பிரியாணிதான் உண்மையான சாம்பியன்; ஸ்விக்கி வேடிக்கையான ட்வீட்!

ஐபிஎல் கிரிக்கெட் சீசனில்
ஸ்விக்கி நிறுவனத்துக்கு அதிகளவில்
ஆர்டர் கொடுக்கப்பட்ட உணவு வகைகளில்
பிரியாணிதான் முதலிடம் பிடித்துள்ளது.
அந்த நிறுவனமே கண்டு வியக்கும் அளவுக்கு
12 மில்லியன் பிரியாணி ஆர்டர்கள்
குவிந்துவிட்டதாக கூறுகிறது.
அந்த வகையில், இந்த ஐபிஎல் சீசனில்
கோப்பையை வென்றது உண்மையில்
பிரியாணிதான் என்றும் அந்த நிறுவனம்
பகடியாக கூறியுள்ளது.

உணவு டெலிவரி வர்த்தகத்தில்
முன்னணியில் உள்ள ஸ்விக்கி நிறுவனம்,
ஐபிஎல் கிரிக்கெட் இறுதி ஆட்டம்
நடந்த நாளன்று இந்தியர்கள் என்னென்ன
ஆர்டர் செய்தார்கள் என்பது குறித்து
சில சுவாரஸ்யமான தரவுகளை
வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் மீது
இந்தியர்களிடையே எப்போதும்
பேரார்வம் உண்டு. ஒவ்வொரு ஐபிஎல்
சீசனையும் அவர்கள் கொண்டாட்டமாக
பார்க்கின்றனர். எந்த அணி வெல்லும்,
யார் யார் எத்தனை ரன் குவிப்பார்கள்,
ஆரஞ்ச் நிற தொப்பியை கைப்பற்றுவது
யார் என பந்தயம், கேளிக்கைகளுடன்
தங்களுக்குப் பிடித்த உணவு வகைகளையும்
ஆர்டர் செய்து கொண்டாடுகின்றனர்.

ஸ்விக்கி நிறுவனம் உணவு டெலிவரி மட்டுமின்றி ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் மளிகை உள்ளிட்ட இதர பொருள்களையும் டெலிவரி செய்து வருகிறது. இந்த நிறுவனம் ஐபிஎல் இறுதிப் போட்டி நாளான மே 29ம் தேதி, ஒரு வித்தியாசமான ஆர்டரையும் பெற்று இருந்தது.

அன்றைய தினம், 2423 ஆணுறைகளை (காண்டம்) கிரிக்கெட் ரசிகர்களுக்கு விற்பனை செய்துள்ளது. இதை ஸ்விக்கி நிறுவனம், ஐபிஎல் இறுதி ஆட்டக்களத்தில் 22 வீரர்கள் விளையாடினாலும், நாங்கள் டெலிவரி செய்த ஆணுறைகளை வைத்துப் பார்க்கையில், அன்று இரவு 22 வீரர்களுக்கும் மேற்பட்டோர் களத்தில் Ôஆக்டிவ்Õ ஆக இருப்பார்கள் எனத் தெரிகிறது என்று குசும்பாக ட்வீட் செய்துள்ளது.

அதேநேரம்,
குஜராத்தி உணவு வகையான
ஜிலேபி மற்றும் ஃபாஃப்டா ஆகியவை
இந்த சீசனில் அதிகம்
விற்பனை ஆகியுள்ளன.
368353 ஜிலேபி மற்றும் ஃபாஃப்டா
ஆர்டர்கள் பெறப்பட்டதாக
ஸ்விக்கி கூறுகிறது. இந்த ஆர்டர்கள்
பெரும்பாலும் குஜராத் உள்ளிட்ட
வடக்கத்தியர்கள் தரப்பில்
இருந்து வந்திருக்கலாம்.

சென்னையில் இருந்து
வித்தியாசமான உணவு வகைகள்
கணிசமாக ஆர்டர் தரப்பட்டுள்ளன.

டிவியில் ஐபிஎல் கிரிக்கெட்டை
கண்டு ரசிக்கும் சென்னைவாசிகள்
தயிரையும் சர்க்கரையும் கலந்து
சாப்பிட்டுக் கொண்டே
பார்த்திருப்பார்கள் போலிருக்கிறது.
நம்ம ஊரில் இருந்து 3641 யூனிட் தயிர்
(யோகர்ட்) கோப்பைகளும், 720 சர்க்கரை
கோப்பைகளும் ஸ்விக்கி நிறுவனம்
டெலிவரி செய்துள்ளது.

இறுதி ஆட்டத்தில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,
முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
இதை ஸ்விக்கி நிறுவனம்,
அஹமதாபாத் ரசிகர்களுடன்
ஒப்பிடுகையில் சென்னை ரசிகர்கள்
மூன்று மடங்கு அதிகமாக
தயிர் கோப்பைகளுக்கும் (பவுல்),
சூப் கோப்பைகளுக்கும் ஆர்டர்
செய்துள்ளதாக இரண்டையும்
வேடிக்கையாக கனெக்ட் செய்துள்ளது.

பிரியாணியே வென்றது:

டிவி வழியாக ஐபிஎல் கிரிக்கெட்டை
பார்த்து ரசித்த ரசிகர்கள்,
தங்கள் அணிகளை உற்சாகப்படுத்தியதன்
ஊடாக ஒரு சமையல் சாம்பியனும் உருவானது.
அந்த சாம்பியான் வேறு யாரோ,
எதுவோ அல்ல… அதுதான், பிரியாணி.

நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில்
இந்திய அளவில் ஸ்விக்கிக்கு ஆர்டர்
செய்யப்பட்ட உணவு பண்டத்தில்
பிரியாணிக்குதான் முதலிடம் கிடைத்துள்ளது.
கிட்டத்தட்ட 12 மில்லியன் பிரியாணி
பொட்டலங்களை அந்நிறுவனம்
டெலிவரி செய்துள்ளது. அதாவது,
நிமிடத்திற்கு 212 பிரியாணி ஆர்டர்
வந்துள்ளதை எண்ணி அந்த நிறுவனமே
வியந்து போயிருக்கிறதாகவும்
சொல்கிறது.

மழை குறுக்கிட்ட இறுதி ஆட்டத்தில்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
பெற்றிருக்கலாம். ஆனாலும்,
பிரியாணிதான் அன்றைய தினத்தின்
உண்மையான சாம்பியன் என்றும்
ஸ்விக்கி வேடிக்கையாக
ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளது.

 

– பேனாக்காரன்