Sunday, April 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

பாஸ்போர்ட் மட்டும் போதும்… இந்தியர்கள் இனி 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்!

இந்திய பாஸ்போர்ட் மூலம் இனி மலேஷியா, இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட 62 நாடுகளுக்கு விசா இல்லாமலேயே இந்தியர்கள் பயணிக்க முடியும். 

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகள் இடம் பிடித்துள்ளன.

சர்வதேச வான் போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) அளித்த தகவலின்படி, உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் குறித்த பட்டியலை ஹென்லே பாஸ்போர்ட் குறியீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதில், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் பாஸ்போர்ட் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நாடுகளின் குடிமக்கள் அவர்களின் பாஸ்போர்ட் மூலம் 194 நாடுகளுக்கு விசா இல்லாமலேயே செல்ல முடியும். இவற்றில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் ஜரோப்பிய நாடுகள் ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளன. பின்லாந்து, ஸ்வீடன், தென் கொரியா நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து நாடுகள் மூன்றாவது இடத்தில் உள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் 192 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

இந்த பட்டியலில் இந்தியா 80வது இடத்தில் உள்ளது. உலகளவில் உயர்ந்து வரும் இந்தியா பொருளாதாரம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்திய பாஸ்போர்ட் சக்தி வாய்ந்ததாக வரையறுக்கப்பட்டு உள்ளது. இனி, இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். நமது பக்கத்து நாடான பாகிஸ்தான் இந்த பட்டியலில் 101வது இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது. இதன் பாஸ்போர்ட் மூலம் 29 நாடுகளுக்கும், சிரியா பாஸ்போர்ட்டை பயன்படுத்தி 29 நாடுகளுக்கும், ஈரோக் பாஸ்பார்ட் மூலம் 31 நாடுகளுக்கும், பாகிஸ்தான் பாஸ்போர்ட் மூலம் 34 நாடுகளுக்கும் விசா இல்லாமல் பயணிக்க முடியும்.

இந்தியர்கள் விசா இல்லாமல் எந்தெந்த நாடுகளுக்குப் பயணிக்க முடியும் என்ற முழுமையான பட்டியல் இதோ…

1. அங்கோலா
2. பார்படாஸ்
3. பூடான்
4. பொலிவியா
5. பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்
6. புரூண்டி
7. கம்போடியா
8. கேப் வெர்டே தீவுகள்
9. கொமோரோ தீவுகள்
10. கூக் தீவுகள்

11. டிஜிபவுட்டி
12. டொமினிகா
13. எல் சால்வடார்
14. எத்தியோப்பியா
15. பிஜி
16. கபோன்
17. கிரீனடா
18. கினியா பிசாவு
19. ஹைதி
20. இந்தோனேஷியா

21. ஈரான்
22. ஜமைக்கா
23. ஜோர்டான்
24. கஜகஸ்தான்
25. கென்யா
26. கிரிபாட்டி
27. லாவோஸ்
28. மகாவோ
29. மடகாஸ்கர்
30. மலேஷியா

31. மாலத்தீவுகள்
32. மார்ஷல் தீவுகள்
33. மொரிஷியானா
34. மொரீஷியஸ்
35. மைக்ரோனேஷியா
36. மான்ட்செரட்
37. மொசாம்பிக்
38. மியான்மர்
39. நேபாளம்
40. நையூ

41. ஓமன்
42. பலாவு தீவுகள்
43. கத்தார்
44. ருவாண்டா
45. சமோவா
46. செனகல்
47. செஷல்ஸ்
48. சியாரா லியோன்,
49. சோமாலியா
50. இலங்கை

51. செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ்
52. செயின்ட் லூசியா
53. செயின்ட் வின்சென்ட் அண்டு தி கிரினடின்ஸ்
54. தான்சானியா
55. தாய்லாந்து
56. தைமூர்
57. டோகோ
58. டிரினாட் மற்றும் டொபாகோ
59. துனிஷியா
60. துவாலு

61. வானூடு தீவுகள்
62. ஜிம்பாப்வே

ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செல்லலாம்.