திரவுபதி – திரை விமர்சனம்! சரக்கு முறுக்கு பசங்க மட்டும்தான் நாடகக்காதல் செய்கிறார்களா?
கிராமத்தில் செல்வாக்குடன்
விளங்கும் ஒரு குடும்பத்தை
பழிவாங்குவதற்காக அந்த
வீட்டுப் பெண்ணுக்கும் இளைஞர்
ஒருவருக்கும் திருமணம் நடந்ததாக
போலியாக பதிவுச்சான்றிதழ் பெற்று
சமூக வலைத்தளங்களில்
உலாவவிடுகிறது ஒரு கும்பல்.
அதைப்பார்த்த பெண்ணின் தந்தை,
அவமானம் தாளாமல் தற்கொலை
செய்து கொள்கிறார்.
அந்தப்பெண்ணையும் அவருடைய
அக்காவையும் அந்த கும்பல்
கொன்றுவிட்டு, கொலைப்பழியை
பெண்ணின் அக்காள் கணவர் மீது
போட்டு விடுகிறது. கொலை
முயற்சியில் தப்பிக்கும் அப்பெண்ணின்
அக்கா திரவுபதி, தன் கணவர் மூலம்
கொலைகாரர்களை பழி வாங்கினாரா?
இல்லையா? என்பதுதான் திரவுபதி
படத்தின் மையக்கதை.
'சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற மகாகவி பாரதியின் வரிகளை மறுதலித்து, 'சாதிகள் உள்ளதடி பாப்பா' என்று திரவுபதி படத்தின் டிரைலரில் குறிப்பிட்டு இருந்தார் இயக்குநர் மோகன். டிரைலரில் வந்த சில வசனங்கள