Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Medical College

மருத்துவ படிப்பில் சேரணுமா? நீட் தேர்வுக்கு மார்ச் 9ம் தேதிக்குள் விண்ணப்பிங்க…

மருத்துவ படிப்பில் சேரணுமா? நீட் தேர்வுக்கு மார்ச் 9ம் தேதிக்குள் விண்ணப்பிங்க…

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு, மே மாதம் 5ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்காக, வரும் மார்ச் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம். இந்திய ராணுவக் கல்லூரிகளில் பி.எஸ்சி., நர்சிங் படிக்கவும், நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. தேசிய தேர்வு முகமை எனப்படும் என்.டி.ஏ., ஆண்டுக்கு ஒருமுறை நீட் தேர்வை நடத்துகிறது. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்பட 13 மொழிகளில் இத்தேர்வு நடக்கிறது. நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு பிப். 9ம் தேதி தொடங்கியது. மார்ச் 9ம் தேதி வரை
அரசு மருத்துவமனை: முதல்வர் ஆன மூவர்; ஐவருக்கு இடமாற்றம்!

அரசு மருத்துவமனை: முதல்வர் ஆன மூவர்; ஐவருக்கு இடமாற்றம்!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் ஐந்து பேரை திடீரென்று இடமாறுதல் செய்தும், மூன்று மருத்துவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும் சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். யார் யாருக்கு இடமாறுதல்?   சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் வனிதா, மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக மாறுதல் செய்யப்பட்டு உள்ளார். இதற்கு முன் இந்த இடத்தில் பணியாற்றி வந்த முதல்வர் மருதுபாண்டியன் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அனிதா ஓய்வு பெற்றதை அடுத்து, அந்த இடமும் காலியாக இருந்தது. இதையடுத்து, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வரும் சாரதா, திருச்சி அரசு மருத்துவமனைக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். &nb
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்?; அதிர்ச்சிகர தகவல்கள்!

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சீறிப்பாய்ந்தது ஏன்?; அதிர்ச்சிகர தகவல்கள்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நான்கு பேர் திடீரென்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சீறிப்பாய்ந்த விவகாரத்தின் பின்னணியில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் உச்சபட்ச அதிகாரம் படைத்தது உச்சநீதிமன்றம். நிர்வாக ரீதியாக எத்தனை காழ்ப்புணர்வுகள் இருந்தாலும் ஆளும்தரப்புடனான ரகசிய லாபியுடன் சுமூக முடிவு எடுக்கப்பட்டு, விவகாரம் அமுக்கப்பட்டு விடும். ஆனால், உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று (ஜனவரி 12, 2018) திடீரென்று ஊடகங்களைச் சந்தித்தது, இதுவரை இந்தியா வரலாற்றில் நிகழாதது. அவர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டமே, நாடு முழுவதும் பெரும் விவாதங்களையும், பரபரப்பையும் எழுப்பிய நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது சொல்லப்பட்ட குற
நீட் தேர்வு: போராட்டக் களமானது தமிழகம்!

நீட் தேர்வு: போராட்டக் களமானது தமிழகம்!

கல்வி, கோயம்பத்தூர், சென்னை, தஞ்சாவூர், தமிழ்நாடு, திருவாரூர், முக்கிய செய்திகள், விழுப்புரம்
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பரவலாக மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. உள்கட்சி பிளவுகளால், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ளவே தடுமாறிக் கொண்டிருக்கும் தமிழக அரசு, போராட்டங்களைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் கையறு நிலையில் இருக்கிறது. முத்துக்குமார், செங்கொடி ஆகியோரின் உயிர் தற்கொடைகளைத் தொடர்ந்து தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. அதேபோல், மருத்துவப் படிப்பு கானலான விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணம் காரணமாக, தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. கடந்த சில நாள்களாகவே வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக 'மெரீனாவில் ஒன்றுகூடுவோம்' என்ற பெயரில் தகவல்கள் பரவின. இதனால் உஷார் அடைந்த தமிழக காவல்துறை, மெரீனா கடற்கரையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. கடற்கரை பகுதியில் குழுக்களாக சுற்றுவோ