மருத்துவ படிப்பில் சேரணுமா? நீட் தேர்வுக்கு மார்ச் 9ம் தேதிக்குள் விண்ணப்பிங்க…
இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு, மே மாதம் 5ம் தேதி நடக்கிறது. இத்தேர்வுக்காக, வரும் மார்ச் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக்
கல்லூரிகளில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்.,
மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி,
ஹோமியோபதி படிப்புகள், கால்நடை மருத்துவப்
படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு
நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில்
வெற்றி பெறுவது கட்டாயம்.
இந்திய ராணுவக் கல்லூரிகளில்
பி.எஸ்சி., நர்சிங் படிக்கவும், நீட் தேர்வு
கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
தேசிய தேர்வு முகமை எனப்படும்
என்.டி.ஏ., ஆண்டுக்கு ஒருமுறை
நீட் தேர்வை நடத்துகிறது.
ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்பட
13 மொழிகளில் இத்தேர்வு நடக்கிறது.
நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு
பிப். 9ம் தேதி தொடங்கியது.
மார்ச் 9ம் தேதி வரை ஆன்ல...