Wednesday, December 4மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: syndicate

தீராப்பழியைச் சுமக்கப் போகிறீரா துணைவேந்தரே?

தீராப்பழியைச் சுமக்கப் போகிறீரா துணைவேந்தரே?

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலை உதவி பேராசிரியர் பிரேம்குமார் மீதான, சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளுக்கு தீர்வு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற பரபரப்பான கட்டத்தில் இன்று (நவ. 22) 116ஆவது சிண்டிகேட் கூட்டம் நடக்கிறது.  சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் பிரேம்குமார். பல்கலை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். துடிப்பான இளைஞரான இவர், மாணவர்களுக்கும் நூலகத்திற்கும் இடையே அறுபட்டு இருந்த தொடர்பை மீண்டும் புத்துயிரூட்டினார். மாணவர்கள் அன்றாடம் நூலகத்தைப் பயன்படுத்துவதை நடைமுறைப் படுத்தியதோடு, போட்டித் தேர்வுகளுக்கும் தயார்படுத்தி வந்தார். மாணவர்கள் சிலருக்கு தேர்வுக்கட்டணம் கூட செலுத்தி இருக்கிறார். பல்கலையில் நடக்கும் விதிமீறல்கள், முறைகேடுகள் குறித்து அவ்வப்போது வெளிப்படையாக பேசி வந்ததை துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்ட...
பெரியார் பல்கலை ஆட்சிக்குழுவில் ‘காலாவதி’ உறுப்பினர்கள்; ஆசிரியர்கள் அதிருப்தி

பெரியார் பல்கலை ஆட்சிக்குழுவில் ‘காலாவதி’ உறுப்பினர்கள்; ஆசிரியர்கள் அதிருப்தி

கல்வி, சேலம், தமிழ்நாடு
சேலம் பெரியார் பல்கலை. ஆட்சிக்குழு உறுப்பினர்களாக உள்ள ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற்ற பிறகும், அதே பதவியில் தொடர்வதற்கு பல்கலை ஆசிரியர் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வரும் பெரியசாமி, வேதியியல் துறைத்தலைவர் ராஜ் ஆகியோர் தற்போது ஆட்சிக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வருகின்றனர். இவர்கள் பேராசிரியர் பிரிவில் இருந்து இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இருவரும் அக். 9ம் தேதியுடன் மூத்த பேராசிரியர் ஆக பதவி உயர்வு பெற்று விட்டனர். பல்கலை சாசன விதிப்படி, ஒருவர் எந்த பிரிவில் இருந்து ஆட்சிக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அவர் அந்த நிலையில் இருந்து பதவி உயர்வு பெற்றுவிடும் பட்சத்தில், முந்தைய வகைப்பாட்டிலேயே ஆட்சிக்குழு உறுப்பினராக தொடர முடியாது. அதன்படி, மூத்த பேராசிரியராக ப...
‘செருப்படி’ பேராசிரியருக்கு மீள்பணி! பரபரப்பு பின்னணி அம்பலம்!!

‘செருப்படி’ பேராசிரியருக்கு மீள்பணி! பரபரப்பு பின்னணி அம்பலம்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலையில், பதவி உயர்வுக்காக நடந்த செருப்படி சண்டையில் பரபரப்பு கிளப்பிய பேராசிரியர் குமாரதாஸூக்கு மீள்பணியமர்வு வழங்க சிண்டிகேட் ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் பின்னணி குறித்த பரபரப்பு தகவல்கள் அம்பலமாகி உள்ளன. சேலம் பெரியார் பல்கலையில் இயற்பியல் துறைத் தலைவரா£க பணியாற்றி வருபவர் குமாரதாஸ். இவர், வரும் ஜூன் 30ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இவரை, ஓய்வுக்குப் பிறகும் 'ரீ அப்பாயின்ட்மெண்ட்' எனப்படும் மீள்பணியமர்வு செய்ய சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சிண்டிகேட்டின் இந்த முடிவுதான், பெரியார் பல்கலையை மீண்டும் சர்ச்சை வளையத்திற்குள் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.   ஓய்வு பெற்றவர்களுக்கு மீள் பணியமர்வு கூடாது என்று அரசாணை உள்ளது. ஏற்கனவே இதே பல்கலையில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் ராஜேந்திரன், முருகேசன் ஆகியோருக்கு மீள்பணி வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது. &nb...
சிண்டிகேட் ரகசியம் கசிவு; புரபசரை செக்ஸ் புகாரில் சிக்க வைக்கும் பெரியார் பல்கலை! பகடை காயான மாணவி!!

சிண்டிகேட் ரகசியம் கசிவு; புரபசரை செக்ஸ் புகாரில் சிக்க வைக்கும் பெரியார் பல்கலை! பகடை காயான மாணவி!!

சேலம், முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலை சிண்டிகேட் தீர்மானத்தை முன்கூட்டியே வெளியிட்ட உதவி பேராசிரியரை பழிதீர்க்க, பட்டியல் சமூக மாணவி மூலம் பாலியல் புகாரில் சிக்க வைக்கும் பல்கலை நிர்வாகத்தால் ஆசிரியர்கள் கொதிப்படைந்து உள்ளனர்.   சேலத்தை அடுத்த கருப்பூரில் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலையுடன் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி என 105 கல்லூரிகள் இணைவு பெற்றுள்ளன.   பேராசிரியர்கள் நியமனத்தில் ஊழல், தேர்வில் தில்லுமுல்லு, கவுண்டர் சமூக ஆதிக்கம், காவி அரசியலுக்கு ஆதரவு என பல்வேறு முறைகேடு புகார்களில் சிக்கித் திணறி வரும் பெரியார் பல்கலை மீது, அண்மையில் கிடைத்த ஏ++ அங்கீகாரம் சற்றே நன்மதிப்பைக் கூட்டியது. ஆனால், நடுநிலையாக இருக்க வேண்டிய பல்கலை நிர்வாகமே, ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில் ...