சென்னையில் சுடுகாட்டில் படுத்துக்கிடந்தேன்!: சீமானின் அறியப்படாத பக்கங்கள்
கனல் தெறிக்கும் உரை வீச்சும், அனல் பறக்கும் அரசியலுமாகவே திரைப்பட இயக்குநரும், 'நாம் தமிழர்' கட்சித் தலைவருமான சீமானை அறிந்து வைத்திருக்கிறார்கள் வெகுசன மக்கள். அவருடைய தனிப்பட்ட வாழ்வின் அறியப்படாத நிகழ்வுகளையும், நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி, தனியார் தொலைக்காட்சியில் இன்று (மார்ச் 18, 2018) ஒளிபரப்பானது.
இயற்கை வெளியில் நடந்து கொண்டே உரையாடுவது போன்ற நிகழ்ச்சியின் வடிவம் என்பது, பல ஆண்டுகளாக ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் பின்பற்றி வரும் நடைமுறைதான். அப்படித்தான் இருந்தது சீமான் உடனான சந்திப்பும்.
சீமானின் மேடைப் பேச்சுகளைத் தொடர்ந்து அவதானித்து வருபவர்களுக்கு, அவர் சமகால உலக அரசியல் போக்கை உடனுக்குடன் 'அப்டேட்' செய்து கொள்ளக்கூடியவர் என்பது நன்றாகவே தெரியும். ஆழமான புத்தக வாசிப்பாளர் என்பதையும் அறியலாம்.
அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் சீமானின் இளம் பிராய வாழ...