நாமக்கல் மாவட்டம்: தேர்தல் களத்தில் முந்துவது யார்?
தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரை நேற்று மாலையுடன் ஓய்ந்த நிலையில், நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தின் இறுதிக்கட்ட தேர்தல் கள நிலவரங்களை விசாரித்தோம்.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி), பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாதக, தவெக கட்சிகள் களத்தில் இருந்தாலும் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது.
நாமக்கல்:
திமுக தரப்பில் மகளிர் தொண்டரணி நிர்வாகி ராணி, அதிமுகவில் தொழில் அதிபர் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் நேரடியாக மோதுகின்றனர்.
முன்னாள் மா.செ.க்கள் காந்திசெல்வன், 'பார்' இளங்கோவன் ஆகியோருக்கு வேறு தொகுதிகளில் தேர்தல் பணிகள் வழங்கப்பட்டதால் அவர்களுடைய ஆதரவாளர்களும், சிட்டிங் எம்எல்ஏ ராமலிங்கமும் வேட்பாளர் ராணிக்கு ஆதரவாக பரப்புரைக்குச் செல்லவில்லை என்...









