Monday, December 11மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: MP

மீண்டும் மொழி அரசியலில் பாஜக அரசு!; தமிழை தகர்க்க முயற்சி?

மீண்டும் மொழி அரசியலில் பாஜக அரசு!; தமிழை தகர்க்க முயற்சி?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஐ.நா. மன்றத்தில் ஹிந்தி மொழியை அலுவல் மொழியாக கொண்டு வருவதில் முனைப்பு காட்டும் பாஜக அரசு, தமிழ் மொழியின் வளர்ச்சியை முடக்குவதிலும், மாநில உரிமைகளை பறிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறது. இந்திய அளவில் மொழிக்காக புரட்சி வெடித்தது என்றால், அந்த பெருமை தமிழ் மொழிக்கு மட்டுமே பொருந்தும். அத்தகைய போராட்டத்தை முன்னெடுத்ததில் திராவிட இயக்கங்களுக்கு பெரும்பங்கு உண்டு. 1963 மற்றும் 1965களில் உலகமே ஆச்சர்யப்படத்தக்க வகையில் ஹிந்தி மொழித் திணிப்புக்கு எதிரான போராட்டம் நடந்தது. ஆயினும், இந்தப் போராட்டம் திடீரென்று உருவெடுத்து இல்லை. இப்போராட்டங்களுக்கான விதை 1937லேயே விதைக்கப்பட்டு விட்டது. ஹிந்திக்கு எதிராக அப்போது துவங்கியதுதான் முதல் போராட்டம். தற்போது, மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பாஜக, தொடக்கத்தில் இருந்தே மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளை பறிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறத
ஆர்.கே.நகர்: ஜெயலலிதாவின் சாதனையை விஞ்சிய டிடிவி தினகரன்!

ஆர்.கே.நகர்: ஜெயலலிதாவின் சாதனையை விஞ்சிய டிடிவி தினகரன்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கி வெற்றி பெற்ற டிடிவி தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை விட கூடுதல் வாக்குகள் வித்தியாசத்தில் எதிர் வேட்பாளரை தோல்வி அடையச் செய்துள்ளார். மக்கள் செல்வாக்குமிக்க தலைவராக கருதப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து, திமுக சார்பில் சிம்லா முத்துச்சோழன் நிறுத்தப்பட்டார். அந்த தேர்தலில் ஜெயலலிதா 97218 வாக்குகளும், திமுக வேட்பாளர் 57673 வாக்குகளும் பெற்றனர். சிம்லா முத்துச்சோழனை விட 39545 வாக்குகள் அதிகம் பெற்று ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றார். இப்போது நடந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன், ஆளும் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். தேர்தல் களத்தில் எதிர்த்துப் போட்டியிட்ட பிரத
லவ் ஜிஹாத் பெயரில் இளைஞரை  உயிருடன் எரித்து கொல்லும் சங்பரிவார் காட்டுமிராண்டி!; பின்னோக்கிச் செல்லும் இந்தியா!!

லவ் ஜிஹாத் பெயரில் இளைஞரை உயிருடன் எரித்து கொல்லும் சங்பரிவார் காட்டுமிராண்டி!; பின்னோக்கிச் செல்லும் இந்தியா!!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
லவ் ஜிஹாத் பெயரில் ராஜஸ்தானில் ஓர் இளைஞரை ஹிந்து தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் எரித்துக்கொல்லும் வீடியோ காட்சி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது. பாஜக ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த நிகழ்வு அது. எந்த இடம் என்று குறிப்பிடவில்லை. சமூகவலைத்தளங்களில் ரொம்பவே வைரல் ஆகி வருகிறது. ஓர் இளைஞரை, சங்பரிவார் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சரமாரியாக கோடாரியால் தாக்குகிறார். கீழே விழுந்த அந்த இளைஞர் கொல்லாதே....காப்பாத்துங்க....என்று கூக்குரலிடுகிறார். கெஞ்சுகிறார். இந்த அபயக்குரல் எதுவுமே அந்த ஹிந்து தீவிரவாத நபரிடம் எடுபடவில்லை. அப்போதும் ஆத்திரம் அடங்காதவராக அவர் ஓர் அரிவாளை எடுத்து வந்து, தரையில் குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் அந்த இளைஞரை மேலும் வெட்டுகிறார். அடுத்த சில நொடிகளில் அந்த இளைஞரின் சப்த நாடிகளும் ஒடுங்கி விடுகிறது. இதையடுத்து உடனடியாக அந்த காட்டு
கருணாநிதியை சந்தித்தபோது மோடி சொன்னது என்ன?

கருணாநிதியை சந்தித்தபோது மோடி சொன்னது என்ன?

அரசியல், சென்னை, முக்கிய செய்திகள்
பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (நவம்பர் 6, 2017) காலை சென்னை வந்தார். முன்னதாக அவர் தினத்தந்தி நாளிதழின் பவள விழாவில் கலந்து கொண்டார். அதையடுத்து அவர் திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று நேரில் சந்தித்தார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த நரேந்திர மோடி, ஓய்வு எடுப்பதற்காக டெல்லியில் உள்ள தனது இல்லத்திற்கு வருமாறு கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது கருணாநிதிக்கு தொண்டையில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அந்த உபகரணம் அகற்றப்பட்டு, தொண்டையில் தையல் போடப்பட்டு உள்ளது. இன்னும் அந்த தையல் பிரிக்கப்படவில்லை. இதனால் அவரால் உரக்கப் பேச முடியவில்லை. பணி மூப்
ஓபிஎஸ் – மோடி திடீர் சந்திப்பு; பின்னணி என்ன?; ”ஒப்புக்கு சப்பாணியாக இருக்க முடியாது”

ஓபிஎஸ் – மோடி திடீர் சந்திப்பு; பின்னணி என்ன?; ”ஒப்புக்கு சப்பாணியாக இருக்க முடியாது”

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று டெல்லியில் பிரதமர் மோடியை இன்று (அக். 12, 2017) நேரில் ச ந்தித்து இருப்பதன் பின்னணியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்டுள்ள பனிப்போர் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகக்குள் பிளவுகள் ஏற்பட்டன. சசிகலாவுக்கு எதிராக திடீரென்று போர்க்கொடி தூ க்கிய ஓ.பன்னீர்செல்வம், 12 எம்எல்ஏக்களுடன் தனி அணியாகச் செயல்பட்டார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா சிறை செல்வதற்கு முன்பாக, தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்துவிட்டுச் சென்றார். தமிழகத்தில் காலூன்ற துடித்துக் கொண்டிருந்த பாஜக, சிதறிக்கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைத்தால்தான் தனக்கு பெரிய அளவில் ஆதாயம் எனக்கருதி, இணைப்புக்கான வேலைகளில் இறங்கியது. பாஜவின் அஜன்டாவை அதிமுகவுக்குள் இருக்கும் மைத்ரேயன் எம்பி மூல
அமித் ஷா மகன் நிறுவனத்தின் வருமானம் ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு உயர்வு?

அமித் ஷா மகன் நிறுவனத்தின் வருமானம் ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு உயர்வு?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் மகன் நடத்தி வரும் நிறுவனத்தின் வர்த்தகம், நரேந்திர மோடி பிரதமர் ஆன ஒரே ஆண்டில் 16 ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா. இவருடைய மகன் ஜெய் ஷா. இவர் 'ஷா'ஸ் டெம்பிள் என்டர்பிரைசஸ்' என்ற பெயரில் ஒரு நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். சில ஆயிரங்களில் வெறும் பெயரளவில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், கடந்த 2013ம் ஆண்டில் ரூ.6230ம், 2014ம் நிதியாண்டில் ரூ.1724ம் இழப்பு கண்டதாக கம்பெனிகள் பதிவாளர் அலுவலகத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 2014-15ம் நிதியாண்டில் டெம்பிள் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.50 ஆயிரம் என்றும், அந்த ஆண்டு ரூ.18728 லாபம் அடைந்துள்ளதாகவும் நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத
ஜெ., மனதில் என்ன இருந்தது?: நாகராஜன்

ஜெ., மனதில் என்ன இருந்தது?: நாகராஜன்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சிங்கம்போல் வாழ்ந்த ஜெயலலிதாவை அசிங்கப்படுத்தக் கூடாது என்பதற்காகவே, அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்த ஒளிப்படங்களை சசிகலா வெளியிட மறுத்துவிட்டார் என்று அதிமுகவின் கோவை எம்பி நாகராஜன் இன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளார். கோவை எம்பியும் வழக்கறிஞருமான நாகராஜன் இன்று (29/8/17) காலை திடீரென்று ஊடகங்களைச் சந்தித்தார். அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவு குறித்து அவர் பேசினார். பிரிந்து கிடக்கும் டிடிவி தினகரன் அணியினரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அழைத்துப் பேச வேண்டும் என்றார். அரசியல் என்பதே சூதுதானே. சூதில் வெற்றி பெறுவதுதான் முக்கியம் என்றார். சிலரை ஒதுக்கி வைப்பதும், பின்னர் மீண்டும் சேர்த்துக் கொள்வது எல்லாமே அரசியல் ராஜ தந்திரம். ஓபிஎஸ், இந்த ஆட்சியைப்பற்றி என்னவெல்லாமோ சொன்னார். அவரை இப்போது நாங்கள் துணை முதல்வராக ஏற்கவில்லையா? ஆர்கே நகர் தேர்தலில் ஜெயலலிதாவின
எடப்பாடி பழனிசாமி பதவி பறிப்பு: தினகரன்

எடப்பாடி பழனிசாமி பதவி பறிப்பு: தினகரன்

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டதாக, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்களால் அரசு இக்கட்டான நிலையில் உள்ளது. அக்கட்சியின் 21 எம்.எல்.ஏ.க்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் புதுச்சேரி விடுதியில் தங்கியுள்ளனர். தினகரனுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் அதிரடி நடவடிக்கையாக கட்சி பொறுப்பில் உள்ளவர்களின் பதவியினை பறித்து வருகிறார். அதற்கு பதிலாக தன்னுடைய ஆதரவாளர்களை நியமித்து வருகிறார். திருச்சி. எம்.பி. குமார், தைரியமிருந்தால் முதல் அமைச்சரை கட்சி பதவியிலிருந்து நீக்குங்கள் என தினகரனுக்கு சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ப