சேலத்தில் ‘வாஷ் அவுட்’ திமுக; உள்ளடி வேலையால் ‘உள்ளதும்’ போச்சு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மற்றெந்த அரசியல் கட்சிகளுக்கும் இல்லாத கூடுதல் அனுகூலம் திமுகவுக்கு இருந்தது. ஆளுங்கட்சி அந்தஸ்து, ஜம்போ கூட்டணி, பண பலம், எண்ணற்ற நலத்திட்டங்கள் என பல சாதகமான அம்சங்கள் இருந்தும் தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. சேலம் மாவட்டத்தில் 2011க்குப் பிறகு மீண்டும் 'வாஷ் அவுட்' ஆகியிருக்கிறது திமுக.
கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளையும் வாரிச் சுருட்டியது. 2016, 2021 தேர்தல்களில் சேலம் வடக்குத் தொகுதியை மட்டும் திமுக வசப்படுத்தியது. மற்ற 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி அள்ளியது.
இந்நிலையில், 2026 தேர்தலில் சேலம் மாவட்டத்தில் கைவசம் இருந்த ஒற்றைத் தொகுதியையும் இழந்து மொத்தமாக 'வாஷ்அவுட்' ஆகியிருக்கிறது சூரியக்கட்சி. எடப்பாடி பழனிசாமி மண்ணில் அடியோடு மண்ணைக் கவ்வ நேர்ந்ததில் அறிவாலய மேலிடமோ ரொம்பவே அப்ச...





