சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது, 5 லட்சம் ரொக்கப்பரிசு! சட்டப்பேரவையில் புதிய அறிவிப்பு!!
சமூகம் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் சிறந்த பத்திரிகையாளர்களுக்கு ஆண்டுதோறும் கலைஞர் எழுதுகோல் விருது மற்றும் 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில்
தமிழ்வளர்ச்சி மற்றும்
செய்தித்துறை தொடர்பான
மானியக் கோரிக்கைகள் மீதான
விவாதத்தின்போது அமைச்சர்
மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட
அறிவிப்புகள்:
பத்திரிகையாளர்கள் நலவாரியம்:
தமிழ்நாட்டில் முதன்முதலாக,
உழைக்கும் பத்திரிகையாளர்களை
முன்களப் பணியாளர்களாக அறிவித்து
முதல்வர் பெருமை சேர்த்துள்ளார்.
அதன் அடிப்படையில்,
உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு
வழங்கப்பட்டு வரும் அனைத்துத்
திட்டங்களையும் ஒருங்கிணைத்துச்
செவ்வனே செயல்படுத்துவதோடு,
நலவாரிய உதவித்தொகைகள்
மற்றும் நலத்திட்...