Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Interim Stay Order

கோகுல்ராஜ் வழக்கை நாமக்கல் நீதிமன்றம் விசாரிக்க கூடாது! – ஹைகோர்ட்

கோகுல்ராஜ் வழக்கை நாமக்கல் நீதிமன்றம் விசாரிக்க கூடாது! – ஹைகோர்ட்

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கை, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து, உயர்நீதிமன்றம் மார்ச் 6, 2019ம் தேதி உத்தரவிட்டுள்ளது.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் (23), கடந்த 23.6.2015ம் தேதியன்று திடீரென்று காணாமல் போனார். மறுநாள் மாலையில், நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ், தலை வேறு முண்டம் வேறாக கொல்லப்பட்டுக் கிடந்தார். திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் பி.இ. படித்து வந்தபோது, தன்னுடன் ஒரே வகுப்பில் படித்து வந்த பரமத்தி வேலூரைச் சேர்ந்த சுவாதி என்பவருடன் கோகுல்ராஜ் நெருக்கமாகப் பழகி வந்தார். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியைச் சேர்ந்த சுவாதியை காதலிப்பதாக கருதிய கும்பல், அவரை சாதிய வன்மத்துடன் ஆணவக்கொலை செய்திருக்க வேண்டும் என்று அப்போது பல்வேற...
செருப்படி விவகாரம்: பேராசிரியர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை!

செருப்படி விவகாரம்: பேராசிரியர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் பெரியார் பல்கலையில் பேராசிரியர்கள் இருவர் செருப்பால் அடித்துக்கொண்ட விவகாரம் குறித்து, குறிப்பிட்ட பேராசிரியர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   இயற்பியல் துறை   சேலம் பெரியார் பல்கலையில் இயற்பியல் துறையில் குமாரதாஸ் என்பவர் முதலில் ரீடர் பணியில் சேர்ந்தார். அவர் பணியில் சேர்ந்த சில மாதங்கள் கழித்து, அன்பரசன் என்பவரும் அதே துறையில் ரீடர் பணியில் நியமிக்கப்பட்டார். ஆனால் அன்பரசன் ஏற்கனவே அரசுக்கல்லூரியில் பணியாற்றிய முன்அனுபவம் இருந்ததால், அவருக்கு முதலில் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த சில மாதங்களில் குமாரதாசும் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.   பதவி உயர்வில் சர்ச்சை   இந்நிலையில், இயற்பியல் துறைத்தலைவராக இருந்த கிருஷ்ணகுமார், பெரியார் பல்கலை டீன் பணியில் நியமிக...
எட்டு வழிச்சாலை: ஒரு மாதத்தில் நல்ல தீர்ப்பு வரும்!; அருள்வாக்கு சொன்ன விவசாயி

எட்டு வழிச்சாலை: ஒரு மாதத்தில் நல்ல தீர்ப்பு வரும்!; அருள்வாக்கு சொன்ன விவசாயி

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், இன்னும் ஒரு மாதத்திற்குள் நல்ல தீர்ப்பு வரும் என்று விவசாயி அருள்வாக்கு கூறினார்.   சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு எதிராக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். சேலம் மாவட்டத்தைப் பொறுத்தவரை 36.3 கிலோமீட்டர் தொலைவுக்கு எட்டு வழிச்சாலை வழித்தடம் அமைகிறது. இதற்காக 248 ஹெக்டேர் நிலம் கையப்படுத்தப்பட உள்ளது. இதில் 90 சதவீதம் சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். இதனால் விவசாயிகள் நிலத்தை விட்டுத்தர மறுப்பதுடன், சாமானிய மக்களுக்கு பயன் அளிக்காத எட்டு வழிச்சாலைத் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என்று போராடி வருகின்றனர்.   மின்னாம்பள்ளி, குள்ளம்பட்டி விவசாயிகள் குலதெய்வமான பெரியாண்...
நீட் தேர்வு:  பொதுப்பிரிவினர் வயது வரம்புக்கு இடைக்காலத் தடை;  சிபிஎஸ்இ-க்கு நோட்டீஸ்!

நீட் தேர்வு: பொதுப்பிரிவினர் வயது வரம்புக்கு இடைக்காலத் தடை; சிபிஎஸ்இ-க்கு நோட்டீஸ்!

இந்தியா, கல்வி, முக்கிய செய்திகள்
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுதும் பொதுப்பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த அதிகப்பட்ச வயது வரம்புக்கு இடைக்காலத் தடை விதித்து, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (பிப்ரவரி 28, 2018) உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கவும் சிபிஎஸ்இ-க்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. வரும் கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 6ம் தேதி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 8ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. மார்ச் 9ம் தேதி வரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. நீட் தேர்வை, பட்டியல் இனப்பிரிவினர் 30 வயது வரை எழுதலாம் என்றும், பொதுப்பிரிவினர்...