எதிர்ப்புகளை எப்படி எதிர்கொண்டார் பெரியார்?
பெரியார் சிலைகளை தகர்ப்போம் என்ற ஹெச்.ராஜாவுக்கு கடும் கண்டனங்கள் தீக்கனலாய் பரவி வரும் நிலையில், அவரும் பாஜகவினரும் பெரியார் தன் மீதான எதிர்ப்புகளை எப்படியெல்லாம் எதிர்கொண்டு, நெஞ்சுரத்துடன் களமாடினார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் என்று யுனெஸ்கோ அமைப்பே பாராட்டிய ஒப்பற்ற சமூகப் போராளியான பெரியாரின் ஒட்டுமொத்த பயணமும் திராவிடர்களுக்கானது; தமிழர்களுக்கானது. அவருடைய பயணத்தில் அவர் எதிர்கொண்ட எதிர்ப்புகளும், அவற்றை எதிர்கொண்ட விதமும் பற்றிய சில பதிவுகள் இங்கே...
திராவிடர் கழகத்தினர், சேலத்தில் 1971ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாடு ஒன்றை நடத்தினர். அந்த மாநாட்டையொட்டி ஓர் ஊர்வலம் நடத்தப்பட்டது. அதில், திராவிடர் கழகத்தினர் ஹிந்து மத கடவுளர்களை அவமதித்ததாகக் கூறி, அவருடைய எதிர்ப்பாளர்கள் பெரியார் படத்தை எரித்தும், செருப்பால் அடித...