Sunday, May 31மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: election

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம் – பொதுக்குழு தீர்மானம்

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம் – பொதுக்குழு தீர்மானம்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி, அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. சென்னையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று (செப். 12) நடந்தது. ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டங்களின்போது மேடையில் ஜெயலலிதா, அவைத்தலைவர் ஆகியோருக்கு மட்டுமே நாற்காலி போடப்பட்டு இருக்கும். இந்த முறை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இருவருடைய முக்கிய ஆதரவாளர்களுக்கும் மேடையை ஆக்கிரமித்து இருந்தனர்.   பொதுக்குழு நடந்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்த கட்&அவுட், பேனர்களில் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் படங்களுடன் முதல்வர், துணை முதல்வர் மற்றும் நிர்வாகிகள் புகைப்படங்கள் இருந்தன. முன்பு, ஜெயலலிதா, எம்ஜிஆர் படங்கள் மட்டுமே பேனர்களில் இருக்கும். இன்றைய பொதுக்குழுவில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நியனம் ரத்த...
சபரிமாலாக்களும் அரசு ஊழியர்கள் போராட்டமும்!

சபரிமாலாக்களும் அரசு ஊழியர்கள் போராட்டமும்!

ஈரோடு, கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
நீட் தேர்வுக்கு எதிராக ஆசிரியை சபரிமாலா அரசுப்பணியை ராஜினாமா செய்துவிட்டு போராட்டத்தில் இறங்கியுள்ள அதேநேரத்தில், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஊதிய உயர்வுக்காக தொடர் வேலைநிறுத்தம் செய்து வருவதால் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் வழக்கமாக தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தங்களது கோரிக்கைகளை முன்னெடுத்து போராடுவார்கள். இப்போது ஆளுங்கட்சி உள்ள நிலையில் எப்போது போராடினாலும், அவர்களுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கும், அதன்மூலம் சில பல காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்ற உள்ளார்ந்த கணக்கீடுகளும் ஜாக்டோ - ஜியோ அமைப்புக்கும் இருக்கலாம். அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ - ஜியோவின் பிரதான கோரிக்கை, பணப்பலன்களை பெறுவதே. குறிப்பாக, இப்போது அமலில் உள்ள புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வ...
தமிழகத்தின் புதிய ஆளுநர் யார்?

தமிழகத்தின் புதிய ஆளுநர் யார்?

அரசியல், தமிழ்நாடு
தமிழகத்தில் ஓராண்டுக்கு மேலாக பொறுப்பு ஆளுநர் மட்டுமே இருந்து வரும் நிலையில், விரைவில் புதிதாக முழுநேர ஆளுநர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது. அரியணையேறிய கையோடு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது நியமிக்கப்பட்டு இருந்த ஆளுநர்களை கட்டாய ஓய்வில் செல்லும்படி வற்புறுத்தியது. பாஜக, ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டனர். ஆனாலும், தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியின்போது ஆளுநராக நியமிக்கப்பட்ட ரோசய்யா, தொடர்ந்து பதவியில் இருந்து வந்தார். அவர், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்ததாலும், நரேந்திர மோடியுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த பரஸ்பர நட்பின் காரணமாகவும் ரோசய்யா பதவிக்கு எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. அவர் தனது முழு பதவிக்காலத்தையும்...
ஜெ., மனதில் என்ன இருந்தது?: நாகராஜன்

ஜெ., மனதில் என்ன இருந்தது?: நாகராஜன்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சிங்கம்போல் வாழ்ந்த ஜெயலலிதாவை அசிங்கப்படுத்தக் கூடாது என்பதற்காகவே, அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்த ஒளிப்படங்களை சசிகலா வெளியிட மறுத்துவிட்டார் என்று அதிமுகவின் கோவை எம்பி நாகராஜன் இன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளார். கோவை எம்பியும் வழக்கறிஞருமான நாகராஜன் இன்று (29/8/17) காலை திடீரென்று ஊடகங்களைச் சந்தித்தார். அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவு குறித்து அவர் பேசினார். பிரிந்து கிடக்கும் டிடிவி தினகரன் அணியினரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அழைத்துப் பேச வேண்டும் என்றார். அரசியல் என்பதே சூதுதானே. சூதில் வெற்றி பெறுவதுதான் முக்கியம் என்றார். சிலரை ஒதுக்கி வைப்பதும், பின்னர் மீண்டும் சேர்த்துக் கொள்வது எல்லாமே அரசியல் ராஜ தந்திரம். ஓபிஎஸ், இந்த ஆட்சியைப்பற்றி என்னவெல்லாமோ சொன்னார். அவரை இப்போது நாங்கள் துணை முதல்வராக ஏற்கவில்லையா? ஆர்கே நகர் தேர்தலில் ஜெயலலிதாவின...