சட்டமன்றத் தேர்தல் 2026: தவெக 108 தொகுதிகளில் வெற்றி; எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லை!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தவெக 108 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் ஆட்சி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம், கேரளம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடந்தது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்,. 23ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.
இந்த தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், சிபிஐ., சிபிஎம்., விசிக, மதிமுக, தேமுதிக, ஐயுஎம்எல் உள்ளிட்ட 23 கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்கின. அதிமுக தலைமையில் பாமக, பாஜக, அமமுக, தமாகா, ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தன.
சீமானின் நாதக, நடிகர் விஜய்யின் தவெக ஆகிய கட்சிகள் தனித்து களம் கண்டன. குறிப்பிட்ட தொகுதிகளில் வி.கே.சசிகலாவின் அனைத்து இந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (அஇபுதமமுக...









