Thursday, December 5மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Central Government

கருணை கொலை செய்யலாம்: உச்சநீதிமன்றம்

கருணை கொலை செய்யலாம்: உச்சநீதிமன்றம்

இந்தியா, முக்கிய செய்திகள்
தீராத, மீள முடியாத நோய்வாய்ப்பட்டவர்களை கருணை கொலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 9, 2018) தீர்ப்பு அளித்துள்ளது. மனிதர்கள் கண்ணியத்துடன் மரணத்தைத் தழுவ உரிமை உண்டு என்றும் கருத்து தெரிவித்துள்ளது. காமன் காஸ் என்ற தொண்டு நிறுவனம், கடந்த 2005ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், ''நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைய வாய்ப்பு இல்லாத நிலையில், மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் அவர்கள் உயிர் வாழச் செய்வதை தவிர்த்து, மரணத்தைத் தழுவ கருணை கொலைக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்'' என்று கோரியிருந்தது.   பல ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. கடந்த 2014ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, கருணை கொலை ...
நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்;  ஆதார் கார்டு அவசியம்; சிபிஎஸ்இ அறிவிப்பு

நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; ஆதார் கார்டு அவசியம்; சிபிஎஸ்இ அறிவிப்பு

இந்தியா, கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் (National Eligibility cum Entrance Test- NEET 2018) தேர்வுக்கு இன்றுமுதல் (பிப்ரவரி 8, 2018) விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஆதார் கார்டு விவரங்கள் இருந்தால்தான் தேர்வு எழுத முடியும். மார்ச் 9ம் தேதி, கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவப்படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஆண்டு முதல் தமிழகத்திலும் நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில், நடப்பு 2018-2019ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் (பிப்ரவரி 8, 2018) விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ (The Central Board of Secondary Education- CBSE) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முட...
தூய்மை இந்தியா ‘மணம் வீசும்’ மோடியின் சொந்த கிராமம்!

தூய்மை இந்தியா ‘மணம் வீசும்’ மோடியின் சொந்த கிராமம்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பளபளவென்று கண்ணாடி போல மின்னும் சாலைகள், கைகளால் துடைத்துவிட்டு சாலையிலேயே சோறள்ளிப் போட்டு சாப்பிடலாம்; எங்கு பார்த்தாலும் பூத்துக் குலுங்கும் மலர்ச்சோலை; மூடப்பட்ட சாக்கடைக் கால்வாய்; வீடுகள்தோறும் கழிவறைகள் என்றெல்லாம் பாராட்டலாம்தான். ஆனால், நிலைமை அப்படி இல்லையே! தூய்மை இந்தியா பிரச்சாரத்தில் முழுவீச்சில் கவனம் செலுத்தி வரும் பிரதமர் நரேந்திர மோடி, தான் பிறந்த ஊரை மட்டும் தரம் உயர்த்தாமலா இருப்பார்? என்று எல்லோருமே சாதாரணமாக கேட்டுவிட்டு நகர்ந்து விடலாம். ஆனால், களநிலவரம் அப்படி இல்லை என்கிறது. குஜராத் மாநிலம் மெக்சனா மாவட்டத்தில் இருக்கும் வாட்நகர் நகராட்சியில்தான், பிரதமர் நரேந்திர மோடி பிறந்தார். அவருடைய வாழ்வின் தொடக்கப் பகுதி அங்குதான் கழிந்தது. பிரதமரின் சொந்த ஊர் என்பதால், அதுவும் டீ விற்ற ஒருவர் உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தின் சக்கரவர்த்தியாக ஆகியிருக்கிறார் என்பத...
கீழடி அகழாய்வு ஏன் தொடர வேண்டும்?

கீழடி அகழாய்வு ஏன் தொடர வேண்டும்?

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வரலாறு
சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது கீழடி கிராமம். தமிழகத்தின் குக்கிராமங்களில் ஒன்றாக கீழடியை நாம் கடந்து போய்விட முடியாது. அங்கேதான், பழந்தமிழரின் அரிய ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன. கடந்த 2015ம் ஆண்டில் இருந்து கீழடி கிராமத்தில் மைய அரசின் தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 110 ஏக்கர் பரப்பளவு நிலத்தை மைய அரசு கையகப்படுத்தியது. இரண்டு கட்ட ஆய்வு நடந்த நிலையில், திடீரென்று தொல்லியல் துறையினர் பாதியிலேயே மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு கிளம்ப, வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் கட்சியினரிடம் இருந்து அப்போது கடும் கண்டனங்கள் எழுந்தன. ஒருவழியாக உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மூன்றாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கின. ஒரு கட்ட அகழாய்வு என்பது ஓர் ஆண்டில் குறைந்தபட்சம் 10 மாதங்களாவது நடத்தப்பட வேண்டும். ஆனால், ஆறே மாதத்தில் திடீரென்று ஆய்வுப்பணிகள் முடிந்ததாகக்கூறி...
தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்து வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டது ஏன்?; பரபரப்பு தகவல்கள்

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஓராண்டாக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ் விடுவிக்கப்பட்டதன் பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன. தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற்றார். அதையடுத்து, புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மஹாராஷ்டிரா மாநில ஆளுநரான வித்யாசாகர் ராவ், தமி-ழக பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா உடல்நலக்குறைவு, அவருடைய மரணம், ஆளுங்கட்சியில் பிளவு போன்ற அரசியல் பரபரப்பு நிலவிய காலங்களில் நேரடி ஆளுநர் இருந்திருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னெப்போதும் இல்லாத நடைமுறையை நடுவண் பாஜக அரசு மேற்கொண்டது. ஒருகட்டத்தில், முதல்வர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலக்கப்பட்டு, வி.கே.சசிகலா பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது அவரை முதல்வராக பதவியேற்க ஆளுநர் முறைப்படி அழ...
அதிமுக: ‘பாபநாசம்’ பாணியில் காதில் பூ சுற்றும் அமைச்சர்கள்!

அதிமுக: ‘பாபநாசம்’ பாணியில் காதில் பூ சுற்றும் அமைச்சர்கள்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''ஜெயலலிதா, சிகிச்சையில் இருந்தபோது இட்லியும் சாப்பிடவில்லை; சட்னியும் சாப்பிடவில்லை. பொய் சொன்னதற்காக நாங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்,'' என்று ரைமிங் ஆக வசனம் பேசி அதிமுகவில் திடீரென்று குழப்ப வெடிகளை கொளுத்திப் போட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் சீனிவாசனின் இத்தகைய பேச்சை அப்போது கட்சிக்குள் யாருமே ரசிக்கவில்லை. குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக முதல்வர் இபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசனிடமே தனது அதிருப்தியை நேரிடையாகச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வராக இருந்தார். அதன் பிறகு, உட்கட்சி பூசலால் ஏற்பட்ட சலசலப்புகளால் பிரிந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது துணை முதல்வராக எடப்பாடி பழனிசாமி அணியில் அங்கம் வகிக்கிறார். தீர்க்கமான விசாரணை என்று வரும்போது, திண்டுக்கல் சீனிவாசனின் இ...
நேற்று  செங்கொடி;  இன்று அனிதா!

நேற்று செங்கொடி; இன்று அனிதா!

அரசியல், இந்தியா, கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''பொறுத்தது போதும்...புறப்படு தமிழா...'' மருத்துவர் கனவு நனவாகாத சோகத்தில் உயிர் தற்கொடையாக்கிய இளம்தளிர் அனிதாவின் மரணம், தமிழ்நாட்டின் சோகம் மட்டுமன்று; அது, இந்தியாவின் துயரம். மானுடத்தின் மீது அரச பயங்கரவாதம், தர்க்க ரீதியில் நிகழ்த்தும் அதிபயங்கர வன்முறைக்கு தன்னையே காவு கொடுத்திருக்கிறாள் அனிதா. அனிதாவின் முடிவை வேறெந்த ஒரு மாணவரும் எடுத்துவிடக் கூடாது என்பதில் இந்த அரசுகள் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வேறு வழியில்லை; நாம் மீண்டும் அரசின் கதவுகளைத்தான் தட்ட வேண்டியதிருக்கிறது. தற்கொலை என்பது ஏற்கப்படுவதற்கில்லை. அதில் நமக்கும் உடன்பாடுதான். ''அனிதாவின் தற்கொலை, பிற மாணவர்களுக்கு முன்னுதாரணம் அல்ல. கனவு நிறைவேறாவிட்டால் தற்கொலைதான் முடிவா? 'விமான ஓட்டி' கனவு நிறைவேறாதவர்தான் கலாம்,'' என்று நடிகர் விவேக் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகனை இழந்த தந்தைக்குரிய ப...