Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: வாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சேலம் மாவட்டத்தில் 70.54% வாக்குப்பதிவு! பேரூராட்சி, நகராட்சிகளில் உற்சாகம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: சேலம் மாவட்டத்தில் 70.54% வாக்குப்பதிவு! பேரூராட்சி, நகராட்சிகளில் உற்சாகம்!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 70.54 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது.   தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சனிக்கிழமை (பிப். 19) தேர்தல் நடந்தது. சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சி, 31 பேரூராட்சிகள் உள்ளன.   சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும், ஆத்தூர், நரசிங்கபுரம், இடைப்பாடி, மேட்டூர், இடங்கணசாலை, தாரமங்கலம் ஆகிய நாகராட்சிகளில் உள்ள 165 வார்டுகளுக்கும், 31 பேரூராட்சிகளில் உள்ள 470 வார்டுகளுக்கும் என மொத்தம் 695 இடங்களுக்கு தேர்தல் நடந்தது.   இதற்காக மொத்தம் 1514 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.   சேலம் மாநகராட்சியில் 64.36 சதவீத வாக்குகளும், நகராட்சிகளில் 76.64 சதவீத வாக்குகளும், பேரூராட்சிகளில் 78.49 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.   மாநகர
சட்டமன்ற தேர்தல் – 2021: சேலம் மாவட்டத்தில் வாகை சூடுவது யார்? வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்…!

சட்டமன்ற தேர்தல் – 2021: சேலம் மாவட்டத்தில் வாகை சூடுவது யார்? வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்…!

அரசியல், சேலம், தேர்தல் 2021, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.   மாவட்டம் முழுவதும் 15 லட்சத்து 246 ஆண் வாக்காளர்கள், 15 லட்சத்து 15 ஆயிரத்து 19 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 204 பேர் என மொத்தம் 30 லட்சத்து 15 ஆயிரத்து 469 வாக்காளர்கள் உள்ளனர்.   கடந்த ஏப். 6ம் தேதி நடந்த தேர்தலில் 23 லட்சத்து 86 ஆயிரத்து 950 பேர் வாக்களித்துள்ளனர். அதாவது, 11 தொகுதிகளிலும் சராசரியாக 79.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தேர்தலுக்காக மொத்தம் 4280 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. நாம் மேற்கொண்ட தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுக்கும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கும் பெரிய அளவில் வித்தியாசம
ஆளுங்கட்சியினர் என்னிடம் 80 லட்சம் ரூபாய் பேரம் பேசினாங்க! முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா தடாலடி!!

ஆளுங்கட்சியினர் என்னிடம் 80 லட்சம் ரூபாய் பேரம் பேசினாங்க! முதல் திருநங்கை கவுன்சிலர் ரியா தடாலடி!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
தமிழகத்தில், அண்மையில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பணம் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தினாலும், உள்ளூரில் செல்வாக்கு படைத்த சாமானியர்களும் பரவலாக வெற்றி பெற்றிருப்பதையும் காண முடிந்தது. அதேநேரம், முதன்முறையாக மாநில கட்சிகள் அளவில், திருநங்கை ஒருவரும் ஒன்றிய கவுன்சிலராக அதிரி புதிரியாக வெற்றி பெற்று மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து இருக்கிறார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம், இரண்டாவது வார்டுக்கு உட்பட்ட கருவேப்பம்பட்டி ஊராட்சி, கடந்த இருபது ஆண்டுக்கும் மேலாக அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்திருக்கிறது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே திருநங்கையான ரியா (29), அதிமுக கோட்டையை தகர்த்தெறிந்து திமுக வசமாக்கி இருக்கிறார். ஆண் பாதி, பெண் பாதியாக காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் மண்ணில் திருநங்கையான ரியா வெற்றி பெற்றிருப்பது தர்க்க ரீதியில
சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு?

சேலம் மாவட்டத்தில் இரண்டு கட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு?

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில், இரண்டு கட்டங்களாக நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 81.50 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக டிசம்பர் 27, 2019ம் தேதி தேர்தல் நடந்தது. இரண்டாம் கட்டமாக திங்கள்கிழமை (டிச. 30, 2019) வாக்குப்பதிவு நடந்தது.   சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில், முதல்கட்டமாக 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27ம் தேதி தேர்தல் நடந்தது. அதில், 81.68 சதவீதம் பேர் வாக்களித்து இருந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் எஞ்சியுள்ள ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல், வாழப்பாடி
சேலம்: எப்படி நடந்தது முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்?

சேலம்: எப்படி நடந்தது முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல்?

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டத்தில், டிசம்பர் 27ம் தேதி நடந்த முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 81.68 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு படையெடுத்து வந்தது, வாக்குப்பதிவு அதிகரிக்க முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2016ம் ஆண்டுடன் முடிந்த நிலையிலும், இட ஒதுக்கீடு, வார்டுகள் மறு வரையறை உள்ளிட்ட நீதிமன்ற வழக்குகளால், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது காலதாமதம் ஆனது. மூன்று ஆண்டுகள் பல்வேறு வழக்குகளைக் கடந்து, தற்போது இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது.   முதல்கட்டமாக மாநிலம் மு-ழுவதும் 156 ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு டிசம்பர் 27, 2019ம் தேதி தேர்தல்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 77.68% வாக்குப்பதிவு; 24ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 77.68% வாக்குப்பதிவு; 24ம் தேதி ஓட்டு எண்ணிக்கை

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் 77.68 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. வரும் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு டிசம்பர் 5ம் தேதி, உடல்நலக் குறைவால் அவர் மரணம் அடைந்தார். இதையடுத்து, ஆர்கே நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதமே அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. பணப்பட்டுவாடா புக £ர் காரணமாக அப்போது திடீரென்று இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பின்னர், மீண்டும் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, அந்த தொகுதிக்கு இன்று (டிசம்பர் 21, 2017) வாக்குப்பதிவு நடந்தது. இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க வசதியாக 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.