Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: அங்கமுத்து தற்கொலை

ஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர்! தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை!

ஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர்! தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
  ஆசிரியர் பணி நியமனங்களுக்கு லட்சக்கணக்கில் பட்டியல் போட்டு வசூல் வேட்டை நடத்திய பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன், வழக்கில் இருந்து தப்பிக்க ஆளுங்கட்சியில் ஐக்கியமாகிவிட்ட முன்னாள் அமைச்சர்களிடம் தஞ்சம் அடைந்துவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.   சேலத்தை அடுத்த கருப்பூரில், கடந்த 24 ஆண்டுகளாக பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலையுடன், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 113 கலை, அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன.   இப்பல்கலையின் துணைவேந்தராக கடந்த 2014 முதல் 2017 வரை சுவாமிநாதன் என்பவர் பணியாற்றி வந்தார். ஆராய்ச்சியாளர்களையும், பெரும் கல்வியாளர்களையும் உருவாக்க வேண்டிய பல்கலைக்கழகம், அவருடைய பணிக்காலத்தில்தான் ஊழல் வேட்டைக்களமாக மாறிப்போனதாக கூறுகிறார்கள்
அங்கமுத்து தற்கொலை… அகலாத மர்மம்… ஆக்ஷன் எடுப்பாரா ஆளுநர்? பெரியார் பல்கலை பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு!

அங்கமுத்து தற்கொலை… அகலாத மர்மம்… ஆக்ஷன் எடுப்பாரா ஆளுநர்? பெரியார் பல்கலை பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலையில் அகலாத மர்ம முடிச்சுகளையும், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல்கள் குறித்தும், பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையே ஏற்பட்டுள்ளது.   பட்டமளிப்பு விழா சேலம் பெரியார் பல்கலையில் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 27, 2018) நடக்கிறது. பல்கலை வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.   அதேநேரம், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல் புகார்கள் மீதும் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பேராசிரியர்கள் மத்தியில் எழாமல் இல்லை.   இது தொடர்பாக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் ஒருவரும், பல்கலை தரப்பில் பேராசிரியர்கள் சிலரும் விரிவாக நம்
ஊழல் கதவுகளை திறக்கும் பெரியார் பல்கலை.!; ஊழியர்கள் இடமாறுதலிலும் ஓரவஞ்சனை!! #PeriyarUniversity #Scam

ஊழல் கதவுகளை திறக்கும் பெரியார் பல்கலை.!; ஊழியர்கள் இடமாறுதலிலும் ஓரவஞ்சனை!! #PeriyarUniversity #Scam

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பெரியார் பல்கலையில் நேற்று நடந்த ஜம்போ இடமாறுதல் உத்தரவின் பின்னணியிலும் குறிப்பிட்ட சங்கத்தினரை ஒடுக்கும் நோக்கில் உத்தரவிடப்பட்டு உள்ளதோடு, முக்கிய கோப்புகள் மாயமான விவகாரத்தை அடியோடு முடக்கிப்போடும் உள்நோக்கம் இருப்பதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. சேலம் பெரியார் பல்கலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அமைச்சுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 376 ஊழியர்கள் தொகுப்பூதியம் / தினக்கூலி அடிப்படையில் பணிபுரிகின்றனர். இவர்கள் தவிர 62 நிரந்தர பணியாளர்களும் உள்ளனர்.   நிர்வாகம் தொய்வடையாமல் இருக்க முதுகெலும்பு போன்றவர்கள்தான் இத்தகைய அமைச்சுப்பணியாளர்கள். ஆனால் அரசு விதிகள் அல்லது பல்கலை விதிகளின்படி ஓர் ஊழியர், ஒரே பிரிவில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றக்கூடாது. நீண்ட காலமாக ஒருவர் ஒரே பிரிவில் பணியாற்றும்போது அங்கே முறைகேடுகள் அரங்கேற வாய