Friday, April 26மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: சேலம்

அங்கமுத்து தற்கொலை… அகலாத மர்மம்… ஆக்ஷன் எடுப்பாரா ஆளுநர்? பெரியார் பல்கலை பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு!

அங்கமுத்து தற்கொலை… அகலாத மர்மம்… ஆக்ஷன் எடுப்பாரா ஆளுநர்? பெரியார் பல்கலை பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலையில் அகலாத மர்ம முடிச்சுகளையும், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல்கள் குறித்தும், பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையே ஏற்பட்டுள்ளது.   பட்டமளிப்பு விழா சேலம் பெரியார் பல்கலையில் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 27, 2018) நடக்கிறது. பல்கலை வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.   அதேநேரம், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல் புகார்கள் மீதும் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பேராசிரியர்கள் மத்தியில் எழாமல் இல்லை.   இது தொடர்பாக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் ஒருவரும், பல்கலை தரப்பில் பேராசிரியர்கள் சிலரும் விரிவாக நம்
மரக்கன்று நட தடை! சேலம் போலீசார் துக்ளக் தர்பார்!! #EightLaneRoad

மரக்கன்று நட தடை! சேலம் போலீசார் துக்ளக் தர்பார்!! #EightLaneRoad

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்காக அளவீடு செய்யப்பட்ட நிலத்தில் புதிதாக மரக்கன்று நட போலீசார் தடை விதித்ததால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.   எட்டு வழிச்சாலை சேலம் - சென்னை இடையே எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை திட்டத்தை செயல்படுத்துவதற்கான பூர்வாங்கப் பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டத்தின் கீழ் வரும் இந்த சாலை மொத்தம் 277.3 கி.மீ. நீளத்துக்கு அமைகிறது.   இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் 2343 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் துரித கதியில் நடந்து வந்தன. இவற்றில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நிலங்கள், ஏழை விவசாயிகளுக்குச் சொந்தமானதாகும்.   சமநிலை பாதிக்கப்படும் பசுமைவழிச்சாலை திட்டத்தால் மரங்களும், விளைநிலங்களும் அழிக்க
”சாரதாவுக்கு எல்லாம் தெரியும்…!” சிறுமியை கொன்ற தினேஷ்குமார் உளறல்!

”சாரதாவுக்கு எல்லாம் தெரியும்…!” சிறுமியை கொன்ற தினேஷ்குமார் உளறல்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
- சிறப்பு செய்தி -   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாயைச் சேர்ந்த சிறுமி ராஜலட்சுமியை (14), வீடு அருகே வசிக்கும் தினேஷ்குமார் (25), கடந்த 22.10.2018ம் தேதி இரவு கழுத்து அறுத்து படுகொலை செய்தார். தலை வேறு, உடல் வேறாக வீசியெறிந்த சம்பவம் பல்வேறு மட்டங்களிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின.   கொடுவாளால் வெட்டி கொலை முதல் தகவல் அறிக்கையில் கொலையாளி தினேஷ்குமார், சம்பவத்தன்று சிறுமியை பாலியல் உறவுக்கு அழைத்ததாகவும், அதை தன் தந்தையிடம் சொல்லி விடுவதாகக்கூறிவிட்டு சிறுமி ஓடியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொடுவாளால் வெட்டி கொலை செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.   கொலையாளியின் மனைவி சாரதாவோ, கதிர் அறுக்கும் வாகன ஓட்டுநரான தன் கணவர் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த அக். 20ம் தேதி முதல், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார் என்றும்,
ஆத்தூர் சிறுமி கொலையில் பதற வைக்கும் பின்னணி! ”சாமி வேஷம் கட்ட இருந்தவள  அநியாயமாக கொன்னுப்புட்டானே…!”

ஆத்தூர் சிறுமி கொலையில் பதற வைக்கும் பின்னணி! ”சாமி வேஷம் கட்ட இருந்தவள அநியாயமாக கொன்னுப்புட்டானே…!”

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  ஆத்தூர் அருகே பதினான்கு வயது சிறுமியை, ஆட்டை அறுப்பதுபோல் துடிக்க துடிக்க தலையை தனியாக வெட்டி வீசிய கொலைச்சம்பவம்தான், இன்றைக்கு சேலம் மாவட்ட மக்களை நெஞ்சை உறைய வைத்திருக்கிறது.   சிறுமி ராஜலட்சுமி   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாயைச் சேர்ந்தவர் சாமிவேல். இவருடைய மனைவி, சின்னப்பொண்ணு. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய இரண்டாவது மகள், ராஜலட்சுமி (14). தளவாய்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாள். இவர்களுடைய வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில், கார்த்திக் என்கிற தினேஷ்குமார் (25) வசித்து வருகிறார். இவருடைய மனைவி, சாரதா. முதலியார் சமூகத்தைச் சேர்ந்த தினேஷ்குமாரும், நாடார் சமூகத்தைச் சேர்ந்த சாரதாவும் 2013ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இரண்டரை வயதில் செல்வதரணிஷ் என்ற ஆண் குழந்த
சேலத்தில் ஒரே நாளில் 16 வட்டாட்சியர்கள் இடமாறுதல்; ஆட்சியர் ரோகிணி அதிரடி!

சேலத்தில் ஒரே நாளில் 16 வட்டாட்சியர்கள் இடமாறுதல்; ஆட்சியர் ரோகிணி அதிரடி!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 16 வட்டாட்சியர்களை அதிரடியாக இடமாறுதல் செய்து ஆட்சியர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார். நிர்வாக நலன் கருதி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக அவருடைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நவம்பர் 1, 2018ம் தேதி முதல் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இடமாற்றம் செய்யப்பட்ட வட்டாட்சியர்கள் பின்வருமாறு...   (புதிய பணியிடங்கள் பெயர்களுக்கு நேராகவும், பழைய பணியிடங்கள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன). 1. அ.பெ.பெரியசாமி - சேலம் விமான விரிவாக்க தனி வட்டாட்சியர் (காடையாம்பட்டி வட்டாட்சியர்)   2. ஜி.குமரன் - ஓமலூர் (சேலம் விமான விரிவாக்க தனி வட்டாட்சியர்)   3. கே.சித்ரா - சேலம் தெற்கு தனி வட்டாட்சியர் (ஓமலூர்)   4. பி.அன்புக்கரசி - பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் (தனி வட்டாட்சியர், நி.எ அலகு-1) 5. ஜி.
சேலம் – சென்னை விமான இயக்க நேரம் திடீர் மாற்றம்!

சேலம் – சென்னை விமான இயக்க நேரம் திடீர் மாற்றம்!

சென்னை, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
  பருவமழை மற்றும் பனிமூட்டம் காரணமாக சேலம் - சென்னை விமான சேவை நேரம் திடீரென்று மாற்றப்பட்டுள்ளது.   விமான போக்குவரத்து சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விமான சேவை துவக்கப்பட்டது. ஆனால், போதிய வரவேற்பு இல்லாததால், குறுகிய காலத்திலேயே விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.   இந்நிலையில், சேலம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள தொழில் அதிபர்கள் தரப்பில் இருந்து மீண்டும் விமான சேவை துவக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.   மீண்டும் விமான சேவை   இதையடுத்து, உடான் திட்டத்தின் கீழ், காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து நடப்பு ஆண்டில் மீண்டும் விமான சேவை துவக்கப்பட்டது.   அதன்படி, ட்ரூஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு விமானம் மட்டும் இப்போதைக்கு இயக்கப்பட்டு வருகிறது.
ஆத்தூர்: பள்ளி மாணவியை கொன்ற கொடூரன் அந்நியன் விக்ரம் போல மாறி மாறி பேசுவதால் போலீசார் திணறல்!

ஆத்தூர்: பள்ளி மாணவியை கொன்ற கொடூரன் அந்நியன் விக்ரம் போல மாறி மாறி பேசுவதால் போலீசார் திணறல்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  ஆத்தூர் அருகே, இரவு நேரத்தில் வீடு புகுந்து பள்ளி மாணவியை துடிக்க துடிக்க தலை துண்டித்துக் கொலை செய்த கொடூரன், அந்நியன் விக்ரம் போல மாற்றி மாற்றி பேசுவதால் வாக்குமூலம் பெறுவதில் காவல்துறையினருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.   ஆத்தூர் அருகே...   சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி சுந்தரபுரம் தெற்குக் காட்டைச் சேர்ந்தவர் குழந்தைவேல். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் மகன் தினேஷ்குமார் (25). இரண்டாவது மகன், சசிகுமார். மூத்த மகன் தினேஷ்குமார், நெல் அறுக்கும் இயந்திர ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சாரதா என்ற மனைவயும், இரண்டரை வயதில் செல்வதரணித் என்ற ஓர் ஆண் குழந்தை உள்ளனர்.   இவர்கள் வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் சாமிவேலு - சின்னப்பொண்ணு (45) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ராஜலட்சுமி (14) என்ற மகள் இருந
ஆத்தூர்: பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொலை! தலையை துண்டித்து சாலையில் வீசிய கொடூரன்!!

ஆத்தூர்: பள்ளி மாணவி கழுத்து அறுத்து கொலை! தலையை துண்டித்து சாலையில் வீசிய கொடூரன்!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
  ஆத்தூர் அருகே, வீடு புகுந்து பள்ளி மாணவியை கழுத்து அறுத்துக் கொலை செய்ததுடன், தலையை துண்டித்து சாலையில் வீசிவிட்டுச் சென்ற பயங்கர நிகழ்வு குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கூலி வேலை: சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டியை சேர்ந்தவர் குழந்தைவேல். இவருடைய மகன் தினேஷ்குமார். நெல் அடிக்கும் இயந்திர ஆபரேட்டராக கூலி வேலை செய்து வருகிறார்.   இவருடைய மனைவி சாரதா. இவர்கள் வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள தெற்குக்காடு பகுதியில் சாமிவேலு & சின்னப்பொண்ணு தம்பதியினர் வசித்து வருகின்றனர்.   இந்தத் தம்பதிக்கு ராஜலட்சுமி (14) என்ற மகள் இருந்தார். அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். திங்கள் கிழமை (அக்டோபர் 22, 2018ம் தேதி) இரவு 7.30 மணியளவில் சின்னப்பொண்ணுவும், சிறுமி ராஜலட்சுமியும் (14) வீட்டுக்குள் அமர்ந்து ப
பூவனம்: புதிய வானம்! ”வறுமையில் இருந்து மீண்ட குடும்பத்தலைவிகளின் கதை!!” #Kalanjiyam #DHANFoundation

பூவனம்: புதிய வானம்! ”வறுமையில் இருந்து மீண்ட குடும்பத்தலைவிகளின் கதை!!” #Kalanjiyam #DHANFoundation

சேலம், தமிழ்நாடு, புத்தகம், மதுரை, முக்கிய செய்திகள்
(பூவனம்)   மதுரையை தலைமை இடமாகக்கொண்டு செயல்படும் தானம் அறக்கட்டளை, ஓர் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய பல பணிகளை லாபநோக்கமின்றி செய்து வருகிறது. தானம், ஓர் இணை அரசாங்கத்தையே நடத்தி வருகிறது என்பதே சாலப்பொருந்தும். இதன் ஓர் அங்கமான சேலம் மண்டல களஞ்சியம், அக்டோபர் 2, 2018ம் தேதியன்று, 'புதிய வானம்' என்ற நூலை வெளியிட்டுள்ளது. வறுமை, கந்துவட்டி, மது உள்ளிட்ட சமூகக் கேடுகளில் இருந்தும், சமூக துயரங்களில் இருந்தும் மீண்ட 50 குடும்பத் தலைவிகளின் வெற்றிக்கதைகளை, 'புதிய வானம்' நூலில் பதிவு செய்திருக்கிறது, களஞ்சியம்.   வெற்றிக்கதைகளில் இருந்து சில... சில ஆண்டுகள் முன்புவரையிலும்கூட, விசைத்தறிக் கூடங்களில் வாரம் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டிருந்த தன் கணவரை, இன்றைக்கு மாதம் 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க வைத்திருக்கிறார் குடும்பத் தலைவி, இலஞ்சியம்.  
சேலம்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வந்தாச்சு ‘ஒன் ஸ்டாப் செண்டர்!’; எல்லா பிரச்னைக்கும் இங்கே தீர்வு!! #OneStopCentre

சேலம்: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வந்தாச்சு ‘ஒன் ஸ்டாப் செண்டர்!’; எல்லா பிரச்னைக்கும் இங்கே தீர்வு!! #OneStopCentre

காஞ்சிபுரம், கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சென்னை, சேலம், தமிழ்நாடு, திருச்சி, மதுரை, முக்கிய செய்திகள்
  - சிறப்புச்செய்தி -   குடும்பப் பிரச்னை முதல் பாலியல் தொல்லைகள் வரை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடியாக அடைக்கலம் கொடுக்கவும், உளவியல் முதல் மருத்துவம் வரை அனைத்து உதவிகளை வழங்கவும் சமூகநலத்துறை சார்பில், 'ஒன் ஸ்டாப் செண்டர்' என்ற பிரத்யேக உதவி மையம் சேலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.   பெண்களை பாதுகாக்கும் சட்டம்   புகுந்த வீட்டில் கணவர் மற்றும் மாமனார், மாமியார், கணவருடன் பிறந்த சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட குடும்ப உறவுகளால் பாதிக்கப்படும் பெண்களைப் பாதுகாக்க இந்திய அரசு ஏற்கனவே குடும்ப வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் - 2005ஐ அமல்படுத்தி உள்ளது. வரதட்சணை கொடுமைகள் குறித்த புகார்களை மட்டும் விசாரித்து வந்த இ.த.ச. பிரிவு 498ஏ-இல் இருந்து இந்த சட்டம் விரிவாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உதவுகிறது. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட