சேலத்தில் நாளை முதல் புதிய நேரக்கட்டுப்பாடு அமல்; தேநீர் கடைகள் மூடல்! ஆட்சியர் ராமன் அறிவிப்பு!!
சேலம் மாவட்டத்தில்
மீண்டும் கொரோனா
நோய்த்தொற்று பரவல்
அதிகரித்ததால், அனைத்து
வகையான கடைகளும்
நாளை முதல் (ஜூன் 24)
மாலை 4 மணி வரை மட்டுமே
இயங்க அனுமதிக்கப்படுவதாக
மாவட்ட ஆட்சியர் ராமன்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் ராமன் செவ்வாய்க்கிழமை (ஜூன் 23) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில்
கடந்த சில நாள்களாக
கொரோனா நோய்த்தொற்றின்
வேகம் அதிகரித்து வருகிறது.
பிற மாவட்டங்கள் மற்றும்
வெளி மாநிலங்களில் இருந்து
இ-பாஸ் அனுமதியின்றி
வருகை தந்தவர்கள்,
தகவல் தெரிவிக்காமலும்,
எவ்வித பரிசோதனைகளும்
செய்து கொள்ளாமல் இருந்ததால்
அவர்களுக்கு கொரோனா
நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது
தெரிய வந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில்
35 பேர் மட்டுமே ஆரம்பத்தில்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு
இருந்த நிலையில், தற்போது
185 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வெளி ...