Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஊரடங்கு

கொரோனா சுனாமியால் நிலைகுலைந்த குடும்பம்; தாய், தந்தையை இழந்து வாடும் 5 பிள்ளைகள்!

கொரோனா சுனாமியால் நிலைகுலைந்த குடும்பம்; தாய், தந்தையை இழந்து வாடும் 5 பிள்ளைகள்!

கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஓசூரில், கொரோனா சுனாமியால் ஒரே ஆதரவாக இருந்த தாயையும் பறிகொடுத்துவிட்டு 4 மகள்கள் உள்பட 5 பிள்ளைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.   கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையால் ஏற்பட்ட கடுமையான ஊரடங்கால் மற்றெந்த பிரிவினரையும் விட தினக்கூலித் தொழிலாளர் வர்க்கத்தினரும், சொற்ப ஊதியத்திற்கு பணியாற்றி வரும் தனியார் ஊழியர்களும் வேலையிழப்பு, பொருளாதார இழப்பால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். அதையெல்லாம் கவனத்தில் கொண்ட தமிழக அரசு, இந்தமுறை கொரோனா இரண்டாவது அலையின்போது, சற்று தளர்வுகளுடனேயே ஊரடங்கு விதிகளை அமல்படுத்தியது. ஆனாலும், கடந்த ஆண்டு ஏற்பட்ட முடக்கத்தில் இருந்தே மீளாத சாமானியர்களில் பலரை இரண்டாம் அலை கருணையின்றி காவு வாங்கிவிட்டது.   இந்த அலையில் சிக்கி சின்னாபின்னமான ஆயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்றுதான், நிவிதாவின் குடும்பமும். கிருஷ்ணகி
கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழகத்தில் ஏப். 20 முதல் இரவு நேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம்!

கொரோனா பரவல் அதிகரிப்பு: தமிழகத்தில் ஏப். 20 முதல் இரவு நேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கம்!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், வரும் ஏப். 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தி உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமுடக்கமும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 2019ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 500க்கும் கீழே குறைந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் காலத்தில் மீண்டும் தொற்றின் வேகம் முன்பை விட அதிகரித்தது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது, கட்டுப்பாடின்றி பொது இடங்களில் கூட்டம் கூட்டமாக கூடியது உள்ளிட்ட காரணங்களால் கொரோனா இரண்டாவது அலையின் பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த சில நாள்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்றின் தாக்கம் 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இது, தமிழக அரசை அதிர்ச்சி
ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! மதுக்கடைகளுக்கு அனுமதி; பள்ளிகளுக்கு தடை; தனியார் நிறுவனங்கள் முழுமையாக இயங்கலாம்!!

ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு! மதுக்கடைகளுக்கு அனுமதி; பள்ளிகளுக்கு தடை; தனியார் நிறுவனங்கள் முழுமையாக இயங்கலாம்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கொரோனா நோய் பரவல் அபாயம் காரணமாக, தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தற்போது ஆறாவது முறையாக ஊரடங்கு உத்தரவை ஜூலை 1ம் தேதி முதல் 31.7.2020ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டித்து தமிழக அரசு திங்களன்று (ஜூன் 29) உத்தரவிட்டுள்ளது.   ஜூலை மாதத்தில் 5, 12, 19, 26 ஆகிய நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும். அதன் விவரம்:   நகர்ப்புற வழிபாட்டுத் தலங்கள், பெரிய வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடுகள், அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை நீடிக்கிறது.   நீலகிரி மாவட்டத்திற்கும், கொ
சேலத்தில் நாளை முதல் தொழிற்சாலைகள் இயங்கலாம்! ஆட்சியர் அறிவிப்பு!!

சேலத்தில் நாளை முதல் தொழிற்சாலைகள் இயங்கலாம்! ஆட்சியர் அறிவிப்பு!!

சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக கடைகளை புதன்கிழமை (மே 6) முதல் இயக்க அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.   சேலம் மாவட்ட குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் சங்க பிரநிதிகள், இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று (மே 4) நடந்தது. ஆட்சியர் ராமன் கூறியதாவது:   கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு தளர்வு விதிகளுக்கு உட்பட்டு நாளை (மே 6ம் தேதி) முதல் தொழில் நிறுவனங்கள் இயங்க சில தளர்வுகள் அளித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.   பெரு நிறுவனங்கள், தங்கள் ஆலைகளை இயக்கிட சேலம் மாவட்ட ஆட்சியருக்கு slmdic@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.