Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: கொரோனா நோய்த்தொற்று

பிஹெச்.டி., ‘வைவா’ தேர்வுக்கு ஓராண்டு அவகாசம் நீட்டிப்பு!

பிஹெச்.டி., ‘வைவா’ தேர்வுக்கு ஓராண்டு அவகாசம் நீட்டிப்பு!

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பி.ஹெச்டி., எம்.பில்., படித்து வரும் மாணவர்களுக்கு 'வைவா-வோஸ்' எனப்படும் வாய்மொழித் தேர்வில் கலந்து கொள்ள மேலும் ஓராண்டு காலம் அவகாசத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக உயர்கல்வித்துறை செயலர் அபூர்வா, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:   கொரோனா நோய்த்தொற்று அபாயம் காரணமாக, பல்கலைக்கழகங்களில் பிஹெச்.டி., எம்.பில்., ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொண்டு வரும் மாணவர்களுக்கு வாய்மொழித் தேர்வு நடத்தி முடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சிப் படிப்பு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் வாய்மொழித் தேர்வுக்கு பதிவு செய்திருந்த காலம் ஏற்கனவே முடிந்திருந்தால், அந்த நாளில் இருந்து மேலும் ஓராண்டு காலம் வாய்மொழித்தேர்வை முடிக்க அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.   ஆராய்ச்சி மாணவ
சேலத்தில் நாளை முதல் தொழிற்சாலைகள் இயங்கலாம்! ஆட்சியர் அறிவிப்பு!!

சேலத்தில் நாளை முதல் தொழிற்சாலைகள் இயங்கலாம்! ஆட்சியர் அறிவிப்பு!!

சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக கடைகளை புதன்கிழமை (மே 6) முதல் இயக்க அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.   சேலம் மாவட்ட குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் சங்க பிரநிதிகள், இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று (மே 4) நடந்தது. ஆட்சியர் ராமன் கூறியதாவது:   கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு தளர்வு விதிகளுக்கு உட்பட்டு நாளை (மே 6ம் தேதி) முதல் தொழில் நிறுவனங்கள் இயங்க சில தளர்வுகள் அளித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.   பெரு நிறுவனங்கள், தங்கள் ஆலைகளை இயக்கிட சேலம் மாவட்ட ஆட்சியருக்கு slmdic@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.