Friday, March 13மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

சேலம்

சேலம் – சென்னை வானூர்தி சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்! பயண நேரத்தில் மாற்றம்!!

சேலம் – சென்னை வானூர்தி சேவை நாளை முதல் மீண்டும் தொடக்கம்! பயண நேரத்தில் மாற்றம்!!

சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த, சேலம் - சென்னை இடையேயான பயணிகள் வானூர்தி சேவை நாளை (மே 27, புதன்கிழமை) முதல் மீண்டும் தொடங்குகிறது. பயண நேரத்தில் மட்டும் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   ஊரடங்கு:   கொரோனா வைரஸ் பரவல் அபாயம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதுவரை நான்கு கட்டங்களாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.   நோய்ப்பரவல் அபாயம் மட்டுமின்றி சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாது என்பதால் பேருந்து, ரயில், வானூர்தி சேவைகள் உள்ளிட்ட அனைத்து வகையான பொது போக்குவரத்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சேலம் காமலாபுரம் வானூர்தி நிலையத்தில் இருந்து சென்னை, திருப்பதிக்கு இயக்கப்பட்டு வந்த ட்ரூஜெட் வானூர்தி சேவையும் நிறுத்தப்பட்டது. ...
சேலத்தில் நாளை முதல் தொழிற்சாலைகள் இயங்கலாம்! ஆட்சியர் அறிவிப்பு!!

சேலத்தில் நாளை முதல் தொழிற்சாலைகள் இயங்கலாம்! ஆட்சியர் அறிவிப்பு!!

சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில் தொழில் நிறுவனங்கள், வணிக கடைகளை புதன்கிழமை (மே 6) முதல் இயக்க அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.   சேலம் மாவட்ட குறு, சிறு, நடுத்தர தொழிற்சாலைகள் சங்க பிரநிதிகள், இந்திய தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று (மே 4) நடந்தது. ஆட்சியர் ராமன் கூறியதாவது:   கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு தளர்வு விதிகளுக்கு உட்பட்டு நாளை (மே 6ம் தேதி) முதல் தொழில் நிறுவனங்கள் இயங்க சில தளர்வுகள் அளித்து உத்தரவிடப்பட்டு உள்ளது.   பெரு நிறுவனங்கள், தங்கள் ஆலைகளை இயக்கிட சேலம் மாவட்ட ஆட்சியருக்கு slmdic@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். &...
கொரோனா: முழு ஊரடங்கு காலத்தில் சேலத்தில் எது எதற்கு அனுமதி?

கொரோனா: முழு ஊரடங்கு காலத்தில் சேலத்தில் எது எதற்கு அனுமதி?

சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில் மாநகர பகுதிகளில் மட்டும் இன்று (ஏப். 26) முதல் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், எந்தெந்த சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம் விளக்கமாக வெளியிட்டுள்ளது.   ஆரம்பத்தில் சளி, இருமல், தொண்டையில் வலி, மூச்சுத்திணறல் போன்றவை கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகளாக இருந்து வந்த நிலையில், அண்மைய முடிவுகளில் இந்த அறிகுறிகள் இல்லாதோருக்கும் நோய்த்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கொரோனா நோய்த்தொற்று சமூகப் பரவலாக மாறி வருகிறதோ என்ற மருத்துவத்துறையினரின் அய்யம் காரணமாகவே, ஊரடங்கை மேலும் கடுமையாக்கி பரவலாக முழு ஊரடங்காக அமல்படுத்தி இருக்கிறது தமிழக அரசு.   சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை, ஏப். 25, 26 ஆகிய இரு நாள்கள் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு நடை...
சேலத்தில் நாளை முதல் இரு நாள்கள் முழு ஊரடங்கு! வெளியே நடமாடினால் கொரோனா பரிசோதனை!!

சேலத்தில் நாளை முதல் இரு நாள்கள் முழு ஊரடங்கு! வெளியே நடமாடினால் கொரோனா பரிசோதனை!!

சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா தொற்று சமூக பரவலாக மாறும் அபாயம் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாவட்டத்தில் நாளை (ஏப். 25), மற்றும் நாளை மறுநாள் (ஏப். 26) ஆகிய இரு நாள்களும் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.   கொரோனா வைரஸ் தொற்று அபாயம் இருப்பதால் ஊரடங்கு உத்தரவு வருகிற மே 3ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே 24 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு, அரசு அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களில் 14 பேர் குணமடைந்து, வீடு திரும்பினர்.   இதற்கிடையே, சேலத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (ஏப். 23) உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், நோய்த்தொற்று சமூக பரவலாக மாறாமல் தடுக்கும் வகையில் ஏப். 25 மற்றும் 26 ஆகிய ...
சேலம்: மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்! இன்று முதல் அமல்!!

சேலம்: மாஸ்க் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்! இன்று முதல் அமல்!!

சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பொது இடங்களில் நடமாடுவோர் கண்டிப்பாக முகக்கவசம் (மாஸ்க்) அணியவேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த இடத்திலேயே 500 ரூபாய் உடனடி அபராதம் விதிக்கப்படும் என்றும் சேலம் மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த புதிய உத்தரவு, வியாழன் (ஏப். 16) முதல் அமலுக்கு வருகிறது.   கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வந்தாலும், இப்போதைக்கு தனிமைப்படுத்தலும், சமூக விலகல் மூலம் மட்டுமே வைரஸ் பரவலில் இருந்து ஓரளவு தற்காத்துக் கொள்ள முடியும் என்ற நிலை உள்ளது. இதற்காகவே நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக ஏப்ரல் 14 மாலை வரை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, தற்போது மே 3ம் தேதி வரை இரண்டாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.   சேலம் மாவட்டத...
கொரோனா அச்சம்! தேனிலவு ஜோடிக்கு வந்த சோதனை!!

கொரோனா அச்சம்! தேனிலவு ஜோடிக்கு வந்த சோதனை!!

சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா வைரஸ் தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், ஒட்டுமொத்த சமூகத்தின் அன்றாட நடவடிக்கைகளையும் முடக்கிப் போட்டுள்ளது. இதுவரை கோவிட்-19 தொற்றுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், சமூக விலக்கல் மட்டுமே ஆகச்சிறந்த தடுப்பு அரண் என்கிறது மக்கள் நல்வாழ்த்துறை. மார்ச் 24ம் தேதி மாலை முதல் தொடர்ந்து 21 நாள்களுக்கு 144 தடை உத்தரவு நாடெங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், வெளிநாடு சென்று ஊர் திரும்பியவர்கள் மூலமாக கோவிட்-19 தொற்று பரவ கூடுதல் வாய்ப்பு உள்ளதால், அவர்களைப் பற்றிய தகவல்களை உடனடியாக தெரிவிக்கும்படி சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் உத்தரவிட்டுள்ளார். மூன்றாம் நபர் சொல்வதற்கு முன், சம்பந்தப்பட்ட நபர்களே இதுகுறித்த தகவல்களை தெரிவித்து, மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். ஆனால...
கொரோனா எச்சரிக்கை: 144 தடை உத்தரவு அமல்; கும்பலாக கூடினால் கைது!

கொரோனா எச்சரிக்கை: 144 தடை உத்தரவு அமல்; கும்பலாக கூடினால் கைது!

சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செவ்வாய்க்கிழமை (மார்ச் 24) மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தடை உத்தரவு அமலில் உள்ள காலத்தில், கும்பலாக நடமாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறியுள்ளதாவது:   கொரோனா-19 வைரஸ் தொற்று நோய் சேலம் மாவட்டத்தில் பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973, பிரிவு 144ன் கீழ் சேலம் மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. இத்தடை உத்தரவு, மார்ச் 24 மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி நள்ளிரவு வரை 7 நாள்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் உத்தரவிடப்படுகிறது. இத்தடைக் காலத்தில், பொதுமக்கள் ஒன்றாக 5 அல்லது அத...
ஒற்றை சாக்கு மூட்டையும் ஒரு கிரவுண்டு நிலமும்! அடமானம் வைக்கப்பட்ட பெண் ஊரின் அடையாளமானார்!!

ஒற்றை சாக்கு மூட்டையும் ஒரு கிரவுண்டு நிலமும்! அடமானம் வைக்கப்பட்ட பெண் ஊரின் அடையாளமானார்!!

சேலம், மகளிர், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் புத்தூர் அக்ரஹாரம் சந்தனக்காரன் காடு பகுதியில், 'செட்டியாரம்மா' என்றால் சின்ன குழந்தைகளும் சொல்லி விடும். ஆமாம். பண்ணாரியம்மன் களஞ்சியம் குழுவின் மூத்த உறுப்பினரான ஜெயந்தியை (50) அப்பகுதியில் 'செட்டியாரம்மா' என்றே அழைக்கிறார்கள். சத்தியமங்கலத்தில் இருந்து மூட்டை முடிச்சுகளுடன் பிழைப்புத்தேடி கைக்குழந்தைகளுடன் சேலம் வந்த அவர், சந்தனக்காரன்காடு கிராமத்தின் அடையாளமாக வளர்ந்திருக்கிறார். அந்தளவுக்கு அவர் எட்டிப்பிடித்த உயரங்கள் அளப்பரியது.   ''தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்து சோர்விலாள் பெண்'' என்ற அய்யன் வள்ளுவன் வாக்கிற்கு ஏற்ப, தன்னையும் உயர்த்திக்கொண்டு கரம் பற்றிய கணவரையும், பெற்றெடுத்த பிள்ளைகளையும் கரை சேர்த்திருக்கிறார் ஜெயந்தி. பண்ணாரியம்மன் களஞ்சியம் மகளிர் குழுவில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மே...
திரவுபதி – திரை விமர்சனம்! சரக்கு முறுக்கு பசங்க மட்டும்தான் நாடகக்காதல் செய்கிறார்களா?

திரவுபதி – திரை விமர்சனம்! சரக்கு முறுக்கு பசங்க மட்டும்தான் நாடகக்காதல் செய்கிறார்களா?

சினிமா, சேலம், முக்கிய செய்திகள்
கிராமத்தில் செல்வாக்குடன் விளங்கும் ஒரு குடும்பத்தை பழிவாங்குவதற்காக அந்த வீட்டுப் பெண்ணுக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நடந்ததாக போலியாக பதிவுச்சான்றிதழ் பெற்று சமூக வலைத்தளங்களில் உலாவவிடுகிறது ஒரு கும்பல். அதைப்பார்த்த பெண்ணின் தந்தை, அவமானம் தாளாமல் தற்கொலை செய்து கொள்கிறார். அந்தப்பெண்ணையும் அவருடைய அக்காவையும் அந்த கும்பல் கொன்றுவிட்டு, கொலைப்பழியை பெண்ணின் அக்காள் கணவர் மீது போட்டு விடுகிறது. கொலை முயற்சியில் தப்பிக்கும் அப்பெண்ணின் அக்கா திரவுபதி, தன் கணவர் மூலம் கொலைகாரர்களை பழி வாங்கினாரா? இல்லையா? என்பதுதான் திரவுபதி படத்தின் மையக்கதை.   'சாதிகள் இல்லையடி பாப்பா' என்ற மகாகவி பாரதியின் வரிகளை மறுதலித்து, 'சாதிகள் உள்ளதடி பாப்பா' என்று திரவுபதி படத்தின் டிரைலரில் குறிப்பிட்டு இருந்தார் இயக்குநர் மோகன். டிரைலரில் வந்த சில வசனங்கள...
வறுமை இருளில் இருந்து மீண்ட 20 ஆயிரம் குடும்பங்கள்! அமைதி புரட்சியில் சேலம் களஞ்சியம் பெண்கள்!!

வறுமை இருளில் இருந்து மீண்ட 20 ஆயிரம் குடும்பங்கள்! அமைதி புரட்சியில் சேலம் களஞ்சியம் பெண்கள்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகள் ஆன பின்பும்கூட இந்தியாவைப் பீடித்திருக்கும் ஏழ்மையின் பிடியில் இருந்து நம்மால் இன்னும் முற்றாக மீள இயலவில்லை. ஆனால் வறுமை ஒழிப்புத் திட்டங்களை உருவாக்குவதில் ஒவ்வொரு அரசும், முனைப்பு காட்டுகிறதே தவிர, செயலாக்கம் என்று வரும்போது நுட்பமாக பார்க்கத் தவறி விடுகிறது. அதுதான், இந்த நீடித்தத் துயரத்திற்குக் காரணம்.   வறுமையை ஒழிப்பதில் வருவாய் உருவாக்கத்தின் மையக் கருத்தை மறைந்த பிரதமர் இந்திராகாந்தி மட்டுமே முழுமையாக விளங்கிக் கொண்டார். அவர் காலத்தில் இருந்துதான் ஏழ்மை ஒழிப்புக்கான பணிகள் புது வேகம் எடுக்கத் தொடங்கின. அதாவது, 1980களில். பானர்ஜி என்பவர், 'ஏழைகளின் பொருளாதாரம்' பற்றிய தனது நூலில், வறுமை ஒழிப்பில் நடைமுறைக்குச் சாத்தியமான தீர்வுகளை பேசாமல் பிரச்னைகளை மட்டுமே பேசுவது மேம்பாட்டுக்கு உதவாது,' என்கிறார். சேலத்தில் செயல்பட்டு வரும் களஞ்சியம்...