Friday, January 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

அரசியல்

நிர்மலா சீதாராமன்: பாதுகாப்புத்துறை அமைச்சரான முதல் தமிழச்சி!

நிர்மலா சீதாராமன்: பாதுகாப்புத்துறை அமைச்சரான முதல் தமிழச்சி!

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடுவண் பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று பதவியேற்றுக் கொண்டார். சுதந்திர இந்தியாவில் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முதல் தமிழர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக இன்று மாற்றி அமைக்கப்பட்டது. 9 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர். மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டது. அனைவருக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் இரண்டு மாற்றங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதுவரை தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக தனி அதிகாரத்துடன் இருந்து வந்த நிர்மலா சீதாராமனுக்கு, நாட்டின் மிக இலாகாக்களில் ஒன்றான பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டு உள்ளது. சுதந்திர இந்தியாவில் இத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் தமி...
நேற்று  செங்கொடி;  இன்று அனிதா!

நேற்று செங்கொடி; இன்று அனிதா!

அரசியல், இந்தியா, கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''பொறுத்தது போதும்...புறப்படு தமிழா...'' மருத்துவர் கனவு நனவாகாத சோகத்தில் உயிர் தற்கொடையாக்கிய இளம்தளிர் அனிதாவின் மரணம், தமிழ்நாட்டின் சோகம் மட்டுமன்று; அது, இந்தியாவின் துயரம். மானுடத்தின் மீது அரச பயங்கரவாதம், தர்க்க ரீதியில் நிகழ்த்தும் அதிபயங்கர வன்முறைக்கு தன்னையே காவு கொடுத்திருக்கிறாள் அனிதா. அனிதாவின் முடிவை வேறெந்த ஒரு மாணவரும் எடுத்துவிடக் கூடாது என்பதில் இந்த அரசுகள் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வேறு வழியில்லை; நாம் மீண்டும் அரசின் கதவுகளைத்தான் தட்ட வேண்டியதிருக்கிறது. தற்கொலை என்பது ஏற்கப்படுவதற்கில்லை. அதில் நமக்கும் உடன்பாடுதான். ''அனிதாவின் தற்கொலை, பிற மாணவர்களுக்கு முன்னுதாரணம் அல்ல. கனவு நிறைவேறாவிட்டால் தற்கொலைதான் முடிவா? 'விமான ஓட்டி' கனவு நிறைவேறாதவர்தான் கலாம்,'' என்று நடிகர் விவேக் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகனை இழந்த தந்தைக்குரிய ப...
பணமதிப்பிழப்பு: காவிகளின் பெரும் தோல்வி

பணமதிப்பிழப்பு: காவிகளின் பெரும் தோல்வி

அரசியல், இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வர்த்தகம்
கருப்பு பணம் - ஊழல் ஒழிப்பு கோஷங்களை, தேர்தல் சுலோகமாக பயன்படுத்தி, அரியணையேறிய மோடி உள்ளிட்ட காவி கும்பலின், பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெரும் சறுக்கலை சந்தித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி இரவு, பிரதமர் நரேந்திர மோடி டிவியில் தோன்றி, அதுவரை புழக்கத்தில் இருந்து வந்த ரூ.1000, ரூ.500 பணத்தாள்கள் இனி செல்லாது என்று ஓர் அறிவிப்பை திடீரென்று வெளியிட்டார். இந்திய தேசத்தின் மீது இந்திய அரசாங்கமே நடத்தியிராத மிகப்பெரும் தாக்குதல் அது. மோடியின் பாணியில் சொல்வதென்றால் சொந்த நாட்டினர் மீதான 'சர்ஜிகல் ஸ்டிரைக்'. இந்த அறிவிப்பினால் சாமானியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அடுக்களையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒளித்து வைத்திருக்கும் 1000, 500 பணத்தாள்களை உடனடியாக மாற்றியாக வேண்டுமே. அவர்களின் கவலை அவர்களுக்கு. அடுத்த நாளே வங்கிகளில் தங்களிடம் உள்ள உயர்மதிப்பு பணத்தாள்களை டெபாசிட்...
மத்திய அமைச்சரவையில் அதிமுக?

மத்திய அமைச்சரவையில் அதிமுக?

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆபரேஷன் தமிழ்நாட்டின் அடுத்த நகர்வாக, அதிமுகவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைத்துக்கொள்ளும் படலம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் நடைபெற உள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது அதிமுகவை சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவிகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் கால் பதிப்பதுதான் பாஜகவின் ஆகப்பெரிய சாதனையாக இருக்க முடியும். இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சிகளின் கோட்டையாகப் பார்க்கப்படும் கேரளாவில்கூட பரவலாக காவி நிறம் தென்படத் தொடங்கிவிட்டது. கர்நாடகாவிலோ காங்கிரஸ் அல்லது பாஜக என்ற இரு துருவ அரசியல் இருந்து வருகிறது. ஆந்திராவில் காலூன்ற வசதியாக, அந்த மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டுவிட்டது. தென்னிந்தியாவில் பாஜகவினர் நுழைய முடியாத எஃகு கோட்டை என்றால் இன்னமும் அது, தமிழ்நாடு மட்டும்தான். இப்போது தமிழகத்தில் ஆளும் அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி குழ...
ஜெ., மனதில் என்ன இருந்தது?: நாகராஜன்

ஜெ., மனதில் என்ன இருந்தது?: நாகராஜன்

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சிங்கம்போல் வாழ்ந்த ஜெயலலிதாவை அசிங்கப்படுத்தக் கூடாது என்பதற்காகவே, அவர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எடுத்த ஒளிப்படங்களை சசிகலா வெளியிட மறுத்துவிட்டார் என்று அதிமுகவின் கோவை எம்பி நாகராஜன் இன்று பரபரப்பைக் கிளப்பியுள்ளார். கோவை எம்பியும் வழக்கறிஞருமான நாகராஜன் இன்று (29/8/17) காலை திடீரென்று ஊடகங்களைச் சந்தித்தார். அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவு குறித்து அவர் பேசினார். பிரிந்து கிடக்கும் டிடிவி தினகரன் அணியினரை எடப்பாடி பழனிசாமி தரப்பு அழைத்துப் பேச வேண்டும் என்றார். அரசியல் என்பதே சூதுதானே. சூதில் வெற்றி பெறுவதுதான் முக்கியம் என்றார். சிலரை ஒதுக்கி வைப்பதும், பின்னர் மீண்டும் சேர்த்துக் கொள்வது எல்லாமே அரசியல் ராஜ தந்திரம். ஓபிஎஸ், இந்த ஆட்சியைப்பற்றி என்னவெல்லாமோ சொன்னார். அவரை இப்போது நாங்கள் துணை முதல்வராக ஏற்கவில்லையா? ஆர்கே நகர் தேர்தலில் ஜெயலலிதாவின...
அதிமுக: சசிகலாவை நீக்க முடியுமா?

அதிமுக: சசிகலாவை நீக்க முடியுமா?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்களில் அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா கையெழுத்திட்டு உள்ள நிலையில், அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தினகரன் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் மாறி மாறி முண்டா தட்டுவதால், உச்சக்கட்ட குழப்பத்தில் அதிமுக உள்ளது. அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (28/8/17) காலை நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் ஊடகங்களை கட்சியே ஏற்று நடத்துவது, தினகரனால் நியமிக்கப்பட்ட பதவிகள் செல்லாது, தினகரனை கட்சியை விட்டு நீக்க வேண்டும், விரைவில் பொதுக்குழு&செயற்குழுவைக் கூட்டுவது என நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானத்தில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டது தற்காலிகமானது என்றும், அவருடைய நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றும் குறிப்பிட...
ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்தால் போதுமா?

ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்தால் போதுமா?

அரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்
அதிமுகவில் ஆதாயம் தரக்கூடிய பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமே இப்போதைக்கு இணைந்திருக்கிறார்கள். ஆனால், மாவட்ட அளவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகளில் ஏற்பட்ட பிளவு இன்னும் சரிசெய்யப்படாததால், கிளைக்கழக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பதவி, பணம் போன்ற சுகபோகங்களுக்காக அடித்துக் கொள்பவர்கள் தர்ம யுத்தம், தியாக - துரோக யுத்தம் போன்ற நவீன சொல்லாடல்களில் யுத்தங்களை நடத்தி வருவது தமிழகம் அறிந்த செய்திதான். அதிமுக கட்சிக்குள் நிலவிய தர்ம யுத்தம் இப்போதைக்கு சுமூகமாக 'முடித்து வைக்கப்பட்டு' இருக்கிறது. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்ட பின்னர், அவருடன் 10 எம்எல்ஏக்கள் சென்றனர். மற்றவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து, முதல்வராக தொடர பக்கபலமாக இருந்தனர். ஓபிஎஸ் பக்கம் குறைவான எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இருந்தாலும் மாவட்ட அளவிலான கிளைக்கழக நிர்வாகிகள், குறிப்பாக எந்தப்ப...
எடப்பாடி பழனிசாமி பதவி பறிப்பு: தினகரன்

எடப்பாடி பழனிசாமி பதவி பறிப்பு: தினகரன்

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவியில் இருந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கப்பட்டதாக, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.  தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்களால் அரசு இக்கட்டான நிலையில் உள்ளது. அக்கட்சியின் 21 எம்.எல்.ஏ.க்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்கள் புதுச்சேரி விடுதியில் தங்கியுள்ளனர். தினகரனுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் டி.டி.வி. தினகரன் அதிரடி நடவடிக்கையாக கட்சி பொறுப்பில் உள்ளவர்களின் பதவியினை பறித்து வருகிறார். அதற்கு பதிலாக தன்னுடைய ஆதரவாளர்களை நியமித்து வருகிறார். திருச்சி. எம்.பி. குமார், தைரியமிருந்தால் முதல் அமைச்சரை கட்சி பதவியிலிருந்து நீக்குங்கள் என தினகரனுக்கு சவால் விடுத்திருந்தார். இந்நிலையில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ப...
நீடிக்குமா இந்த ஆட்சி?

நீடிக்குமா இந்த ஆட்சி?

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்ற கதையாக ஆளும் அதிமுகவுக்குள் உச்சக்கட்ட பூசல்கள் அரங்கேறி வருகின்றன. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அக்கட்சிக்குள் நிகழும் சம்பவங்களை வைத்துப் பார்க்கையில் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு, இந்த கட்சி ஆட்சிக்கட்டிலில் இருக்குமா என்ற சந்தேகம் பாமரனுக்கும் எழாமல் இல்லை. ஜெ., மரணத்தின் பின்னணியில் சசிகலா குடும்பம் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது ஓ.பன்னீர்செல்வம் உள்பட யாரையுமே பார்க்க அனுமதிக்காததன் பின்னணி என்ன?. இதெல்லாம், ஜெ., ஆளுமையை நேசிக்கும் வெகுஜன மக்களின் மனதில் படிந்திருக்கும் கேள்விகள். அதன் காரணமாகவே சசிகலா குடும்பத்தினர் மீது மக்களுக்கு ஒருவித வெறுப்புணர்வு இருக்கிறது. அதேநேரம், ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமான அதிமுகவை, 'எல்லா விதத்திலும்' வழிநடத்தும் 'சக்தி' மன்னார்குடி கும்பலுக்கு இருக்கிறது என்பதையும் ம...
சசிகலாவின் சீராய்வு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு

சசிகலாவின் சீராய்வு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
புதுடில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதாவின் தோழி சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று (23/8/17) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, மற்றும் சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நான்கு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஜெயலலிதா, குற்றவாளிதான் என்றாலும் அவர் மரணம் அடைந்துவிட்டதால் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், கடந்த பிப்ரவரி 15ம் தேதி அடைக்கப்பட்டனர். இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா உள்ளிட்ட மூன்று பேரும் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் அமிதவ ராய், போப்டே ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை நேற்...