Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

அரசியல்

ஓபிஎஸ்: தர்ம யுத்தம் ‘2.0’!

ஓபிஎஸ்: தர்ம யுத்தம் ‘2.0’!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
எடப்பாடி பழனிசாமி மீது உச்சக்கட்ட அதிருப்தியில் இருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எப்போது வேண்டுமானாலும் தர்ம யுத்தத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கலாம் என்ற ஊசலாட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா, ஜானகி அணி என உடைந்த கட்சி, பிறகு ஜெயலலிதா தலைமையில் வீறு கொண்டு எழுந்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என மூன்று அணிகளாக உடைந்து இருக்கிறது. டெல்லி ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இப்போது அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. ஆறு மாத காலம் தர்ம யுத்தம் நடத்தி வந்த ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் பதவியைப் பெற்றுக்கொண்டு, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டார். துணை முதல்வர் பதவி என்றபோது அவருக்குள் ஒரு சிந்தனை ஓடியிருக்க வேண்டும். ''ஜெயலலிதா 'உள்ளே' சென்றபோதெல்லாம் நாம்தான் நம்பர்-1 ஆக இருந...
மெர்சல் கருத்து: தமிழிசையை இப்படி செய்வது தகுமா?

மெர்சல் கருத்து: தமிழிசையை இப்படி செய்வது தகுமா?

அரசியல், சினிமா, சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'மெர்சல்' படத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பைப் பற்றிய வசனத்திற்கு கண்டனம் தெரிவித்த பாஜக தலைவர் தமிழிசையை, சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் கிண்டல் செய்து 'மீம்ஸ்'கள் மூலமாக 'கிழி கிழி' என்று கிழித்து தொங்கவிட்டுள்ளனர். விஜய் நடிப்பில் உருவான 'மெர்சல்' படம், கடந்த 18ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ஏற்கனவே 'ராஜாராணி', 'தெறி' மூலம் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் அட்லீயின் இந்தப்படமும் வெற்றி பெற்றுள்ளது. முன்பு இயக்கிய இரு படங்களிலும் பழைய தமிழ் சினிமாக்களின் கதை, காட்சிகளின் சாயல்கள் இருப்பதுபோல் 'மெர்சல்' படத்திலும் 'அபூர்வ சகோதரர்கள்', 'மூன்று முகம்', 'சிவாஜி', 'ரமணா' ஆகிய படங்களின் சாயல்களும் இருக்கவே செய்கின்றன. படத்தில் இடம்பெற்றுள்ள புறா காட்சிகள், ராஜநாகம் காட்சிகள் குறித்த சந்தேகங்களால் இப்படத்துக்கு தணிக்கை வாரிய சான்றிதழ், விலங்குகள் நலவாரியத்திடம்...
ஓராண்டுக்குப்பின் ‘முதல் பிள்ளை’யை பார்த்து ரசித்தார் கருணாநிதி!

ஓராண்டுக்குப்பின் ‘முதல் பிள்ளை’யை பார்த்து ரசித்தார் கருணாநிதி!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!' என்று கரகரப்பான குரலில் ஒலிக்கும் இந்த சொற்களுக்கு மயங்காத திமுக தொண்டர்களே இருக்க முடியாது. இப்படி திமுக தலைவர் கருணாநிதி பொதுக்கூட்டங்களில் சொல்லும்போது, கட்சியையும் தாண்டி அனைத்து தரப்பினரும் ரசிப்பார்கள். தொண்டர்களின் விசில் ஒலியும், கரவொலியும் அடங்க வெகுநேரம் ஆகும். திமுகவினர் சோர்வடையும் போதெல்லாம் அவர்களை உசுப்பிவிடுவது 'என் இனிய உடன்பிறப்புகளே'தான். திமுகவினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகமும், கருணாநிதியின் 'டிரெண்டி'யான இந்த பேச்சைக் கேட்டு ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. தற்போது, 94 வயதாகும் மு.கருணாநிதி, உடல்நலக்குறைவால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தொண்டையில் டிரக்கியாஸ்டமி உபகரணம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதமாக அவருடைய உடல்நலம் வேகமாக முன்னேற்றம் அடைந்து வருகிறத...
கமல் ட்வீட்: நிலவேம்பு குடிநீர் வேண்டாம்!

கமல் ட்வீட்: நிலவேம்பு குடிநீர் வேண்டாம்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நிலவேம்பு குடிநீர், டெங்கு காய்ச்சலை தடுக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வ ஆய்வு முடிவுகள் இல்லாததால், அதை விநியோகிப்பதை நிறுத்தி வைக்குமாறு நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் இணையவாசிகள் கருத்துகள் தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சல் தாக்கம் இருந்து வருகிறது. சுமார் 12000 பேருக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். டெங்கு காய்ச்சல், இன்ன பிற இனம் காண முடியாத காய்ச்சல் காரணமாக கடந்த சில மாதங்களில் 400க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர். ஆனால், டெங்கு காரணமாக 40 பேர் மட்டுமே இறந்துள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுளது. இதற்கிடையே, நிலவேம்பு கஷாயம் குடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படுவதாகவும், ரத்தத்தில் பிளேட்டிலெட் செல்கள் அதிகரிப்பதாகவ...
இந்தியாவுக்கு ராணுவ ஆட்சிதான் வேண்டுமாம்!: சர்வே சொல்லுது

இந்தியாவுக்கு ராணுவ ஆட்சிதான் வேண்டுமாம்!: சர்வே சொல்லுது

அரசியல், இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இந்தியாவில் ஜனநாயக ஆட்சி மீது திருப்தி இருந்தாலும், ராணுவ ஆட்சி வந்தால்தான் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று அதிர்ச்சிகரமான எண்ணங்களை இந்தியர்கள் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த 'பியூ ரிசர்ச்', 38 நாடுகளில் 41955 பேரிடம் ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 16ம் தேதி முதல் மே 8ம் தேதி வரை இந்த ஆய்வை நடத்தி முடித்திருக்கிறது. இதில், இந்தியர்களின் மனவோட்டம் பற்றிய சில அதிர்ச்சிகரமான, அதேநேரம் ஆச்சர்யகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில், கடந்த 2012ம் ஆண்டு முதல் தற்போது வரை சராசரியாக 6.9 சதவீதம் பொருளாதார வளர்ச்சி இருந்து வருவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 5ல் நான்கு பேர், அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், இருப்பினும் ராணுவ ஆட்சி வந்தால் நல்லது என்றும் பெரும்பான்மையோர் கருதுவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ஆதார் ...
ஜெயலலிதா என்ன தேச விரோதியா?: நமது எம்ஜிஆர் நாளேடு கேட்கிறது!

ஜெயலலிதா என்ன தேச விரோதியா?: நமது எம்ஜிஆர் நாளேடு கேட்கிறது!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
துண்டு பிரசுரத்தில் டிடிவி தினகரன் படம் அச்சிட்டப்பட்டதற்கே தேச விரோத வழக்கு பாயுமெனில், அந்த பிரசுரத்தில் அச்சிடப்பட்டிருந்த எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா ஆகியோரும் தேச விரோதிகளா? என நமது எம்ஜிஆர் நாளேடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஈடு இணையற்ற தலைவர்களா இல்லையா என்பது விவாதத்திற்கு உரியது. ஆனால், எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்களை சந்திக்குக் கொண்டு வருவதில் இருதரப்புமே சளைத்தவர்கள் அல்ல என்பதைத்தான் அவர்களின் அரசியல் விமர்சனங்கள் உணர்த்துகிறது. தேரை இழுத்து தெருவில் விடுவது என்பார்களே, அப்படி. சேலத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியது தொடர்பாக டிவிடி தினகரன் உள்பட அவருடைய ஆதரவாளர்கள் 36 பேர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்ப...
ஓ.பன்னீர்செல்வத்தை  கதற விடும்  மீம் கிரியேட்டர்கள்!

ஓ.பன்னீர்செல்வத்தை கதற விடும் மீம் கிரியேட்டர்கள்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம் டுவிட்டர் பக்கத்தில் 'அம்மா ஆட்சி' என்று ஒரு பதிவுதான் பதிவிட்டார். மீம் கிரியேட்டர்கள் அவரை நொந்து நூடுல்ஸ் ஆக்கி, அழ வைக்கும் அளவுக்கு கேலி, கிண்டல் என கருத்துகளை பதிவிட்டுள்ளனர். டுவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்&ஆப் போன்ற சமூக வலைத்தளங்களே இப்போது சாமானிய மக்களின் நேரடி மேடையாகி விடுகிறது. கையில் ஒரு மொபைல் ஃபோன் இருந்தால்போதும், எதிரில் நிற்பவர் யாரென்றெல்லாம் பார்ப்பதில்லை. உடனுக்குடன் கருத்துகளை வரவேற்றோ, பகடி செய்தோ, அல்லது தர்ம அடியோ கொடுக்கும் விதமாக பதிலடி கொடுத்து விடுகின்றனர். அது அமெரிக்க அதிபர் டிரம்ப்பாக இருந்தாலும் சரி. பிரதமர் மோடியோ அல்லது தமிழக முதல்வரோ யாராக இருந்தாலும் இணையவாசிகளுக்கு ஒரே அளவுகோல்தான். அதேநேரம் நல்லதை வரவேற்கவும் தயங்குவதில்லை. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று (அக். 14, 2017), '...
ஜெயலலிதா தொகுதியில் டிசம்பர் 31க்குள் இடைத்தேர்தல்; ஆணையம் அறிவிப்பு

ஜெயலலிதா தொகுதியில் டிசம்பர் 31க்குள் இடைத்தேர்தல்; ஆணையம் அறிவிப்பு

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ரத்து: அப்போது அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகள் இருந்தன. இபிஎஸ் அணியின் சார்பில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் அணி தரப்பில் மதுசூதனன், பிற கட்சி வேட்பாளர்கள் உள்பட 62 பேர் போட்டியிட்டனர். டிடிவி தினகரன் தரப்பில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக ஆயிரக்கணக்கில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் கிளம்பின. அந்த புகாரின்பேரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் சோதனை நடந்தது. அந்த சோதனையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கான சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. உரிய நேரத்தில் தேர்தல் நட...
ஓபிஎஸ் – மோடி திடீர் சந்திப்பு; பின்னணி என்ன?; ”ஒப்புக்கு சப்பாணியாக இருக்க முடியாது”

ஓபிஎஸ் – மோடி திடீர் சந்திப்பு; பின்னணி என்ன?; ”ஒப்புக்கு சப்பாணியாக இருக்க முடியாது”

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென்று டெல்லியில் பிரதமர் மோடியை இன்று (அக். 12, 2017) நேரில் ச ந்தித்து இருப்பதன் பின்னணியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்டுள்ள பனிப்போர் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.   ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுகக்குள் பிளவுகள் ஏற்பட்டன. சசிகலாவுக்கு எதிராக திடீரென்று போர்க்கொடி தூ க்கிய ஓ.பன்னீர்செல்வம், 12 எம்எல்ஏக்களுடன் தனி அணியாகச் செயல்பட்டார். ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா சிறை செல்வதற்கு முன்பாக, தனது ஆதரவாளரான எடப்பாடி பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் அமர வைத்துவிட்டுச் சென்றார். தமிழகத்தில் காலூன்ற துடித்துக் கொண்டிருந்த பாஜக, சிதறிக்கிடக்கும் அதிமுகவை ஒன்றிணைத்தால்தான் தனக்கு பெரிய அளவில் ஆதாயம் எனக்கருதி, இணைப்புக்கான வேலைகளில் இறங்கியது. பாஜவின் அஜன்டாவை அதிமுகவுக்குள் இருக்கும் மைத்ரேயன் எம்பி மூல...
”அக்காவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது” – சசிகலா சாபம்

”அக்காவின் ஆன்மா அவர்களை மன்னிக்காது” – சசிகலா சாபம்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா, கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய கணவர் நடராஜன், உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கடந்த வாரம் கல்லீரல், சிறுநீரகம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த நிலையில்தான், கணவரைக் காண்பதற்காக 15 நாள்கள் அவசரகால பரோல் விடுப்பு கேட்டு சசிகலா, கர்நாடகா மாநில சிறைத்துறைக்கு விண்ணப்பித்தார். சிறைத்துறை நிர்வாகம், அவருக்கு 5 நாள்கள் மட்டும் பரோல் விடுப்பு அனுமதி வழங்கியது. கடந்த 6ம் தேதி மாலை 3 மணியளவில் சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, அன்று இரவு சென்னைக்கு வந்து சேர்ந்தார். சிறைக்கு வெளியே கர்நாடகா அதிமுகவினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். சென்னையிலும் அவரு...