Tuesday, July 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

அரசியல்

காவிரி: உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கேள்வி!

காவிரி: உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கேள்வி!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 16ம் தேதி இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இது தொடர்பாக யாரும் மேல்முறையீடு செய்ய இயலாது என்பதால், இப்போதைக்கு கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் பெரிய அளவில் கொந்தளிப்பை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை. அதற்காக உச்ச நீதிமன்றம் நடுநிலையான தீர்ப்பை வழங்கி விட்டதாக நாம் கருதிவிட முடியாது. காவிரி நீர் பங்கீட்டில் பெரிய அளவில் ஆதாயம் அடைவது கர்நாடகமும், தமிழகமும்தான். கேரளாவும், புதுச்சேரியும் சொற்ப அளவில் ஆதாயம் பெறக்கூடிய இதர மாநிலங்கள். காவிரி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 1991ம் ஆண்டு அளித்த இடைக்காலத் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி (ஒரு டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கன அடி) தண்ணீர் வழங்க வேண்டும் என்று சொல்லி இருந்தது. இந்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப...
காவிரி நீர் பங்கீடு:  தமிழகத்திற்கு ஓரவஞ்சனை;  15 டிஎம்சி வெட்டு

காவிரி நீர் பங்கீடு: தமிழகத்திற்கு ஓரவஞ்சனை; 15 டிஎம்சி வெட்டு

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காவிரி நீர் பங்கீடு வழக்கில், தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த தண்ணீர் ஒதுக்கீட்டு அளவில் இருந்து மேலும் 14.75 டிஎம்சி நீரை குறைத்து உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 16, 2018) தீர்ப்பு அளித்துள்ளது. இத்தீர்ப்பு, காவிரியை நம்பியிருக்கும் தமிழக டெல்டா விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து அதனால் பயனடையும் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. முழுமையான வாதப் பிரதிவாதங்கள் எ-டுத்து வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவராய், ஏ.எம்.கன்வல்கர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது. ...
சிங்கம் களம் இறங்கிடுச்சே!;  வைகோவை நொறுக்கும் ‘நெட்டிஸன்’கள்

சிங்கம் களம் இறங்கிடுச்சே!; வைகோவை நொறுக்கும் ‘நெட்டிஸன்’கள்

அரசியல், தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவதுதான் தனது நோக்கம் என்ற மதிமுக தலைவர் வைகோவை, சமூகவலைத்தளத்தில் கடுமையாக கிண்டல் செய்து 'மீம்'கள் பதிவிட்டுள்ளனர். பலர் திமுகவுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளனர். பேருந்து கட்டணம் உயர்வைக் கண்டித்து மதுரையில் நேற்று (பிப்ரவரி 13, 2018) பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக தலைவர் வைகோ, இரண்டு முக்கிய முழக்கங்களை முன்வைத்தார். ஒன்று, திராவிடம் இல்லாத தமிழ்நாடு என்று யார் நினைத்தாலும் அது முடியாது. மற்றொன்று, திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை தமிழகத்தின் முதலமைச்சர் ஆக்குவதுதான் என் நோக்கம் என்றும் கூறினார். சும்மாவே வைகோவை கேலி, கிண்டல் செய்யும் சமூகவலைத்தள பதிவர்களுக்கு இது போதாதா? இன்று நாள் முழுக்க அவரை கடுமையாக கிண்டல் செய்து எக்கச்சக்கமாக மீம்களை பதிவிட்டுள்ளனர். ஒரு காலத்தில் திமுகவின் மு...
இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் யார் யார்?; ஏழை முதல்வர் மாணிக் சர்க்கார்!

இந்தியாவின் கோடீஸ்வர முதல்வர்கள் யார் யார்?; ஏழை முதல்வர் மாணிக் சர்க்கார்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
தேர்தல் சீர்திருத்தத்திற்காக போராடி வரும் ஏடிஆர் அமைப்பும், தேசிய தேர்தல் கண்காணிப்பகம் அமைப்பும் இணைந்து அண்மையில் ஓர் ஆய்வை மேற்கொண்டன. இந்திய ஒன்றிய அரசில் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மொத்தமுள்ள 31 முதலமைச்சர்களைப் பற்றிய ஆய்வு அது. அவர்களின் சொத்துமதிப்பு, அவர்களுக்கு எதிரான வழக்குகள், கல்வித்தகுதி போன்ற அம்சங்களை அவ்விரு அமைப்புகளும் ஆய்வு செய்தன. இன்றைய நிலையில் 25 முதலமைச்சர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர் என்கிறது அந்த ஆய்வு. அவர்களில் இருவர், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்துக்களை வைத்திருப்பவர்கள். ஒருவர், ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. அவருடைய சொத்து மதிப்பு 177 கோடி ரூபாய். மற்றொருவர், அருணாச்சல பிரதேச மாநில முதல்வர் பீமா காண்டு. அவருடைய சொத்து மதிப்பு 129 கோடி ரூபாய். மூன்றாம் இடத்தில் இருக்கும் பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீத்தர் சிங், 48 கோ...
ஜீயர் உண்ணாவிரதமும் மோடியின் பக்கோடாவும்!

ஜீயர் உண்ணாவிரதமும் மோடியின் பக்கோடாவும்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழகத்தில் பாஜக தங்கள் இருப்பை நிலைநிறுத்துவதற்காக மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் தவிடுபொடியாகிக் கொண்டே போவதை கிண்டலடித்து, சமூகவலைத்தளங்களில் பலர் கேலியான விமர்சனங்களை பதிவிட்டுள்ளனர். நரேந்திர மோடியின் 'பக்கோடா' முதல் ஜீயர் உண்ணாவிரதம் வரை ஒவ்வொன்றையும் முடிச்சுப்போட்டு கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.   மத்தியில் அசுர பலத்தில் இருக்கும்போதே, தமிழகத்திலும் முக்கிய கட்சிகளின் வரிசையில் வந்துவிட வேண்டும் என்றுதான் பாஜக ரொம்பவே மெனக்கெடுகிறது. ஆனால், அதன் ஒவ்வொரு முயற்சியும் பிள்ளையார் பிடிக்க குரங்கான கதையாகி விடுகிறது. சாரணர் தேர்தல் முதல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நோட்டாவிடம் தோற்றது வரை பாஜகவின் பலம் என்ன என்பதை தமிழ்நாடே அறியும். அவர்கள் வெற்றி என்பதெல்லாம் இபிஎஸ், ஓபிஎஸ் கும்பலை வளைத்துப் போட்டது மட்டுமே. மங்குனி அமைச்சர்களுக்கும் விழுந்து வணங்குவதற்கு பாதங்கள...
டீ குடிப்பதற்கே 68 லட்சம் ரூபாய் செலவழித்த பாஜக அரசு!

டீ குடிப்பதற்கே 68 லட்சம் ரூபாய் செலவழித்த பாஜக அரசு!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
நாமெல்லாம் நம்ம ஊர் எம்எல்ஏக்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை லட்சத்து அஞ்சாயிரமாக உசத்திட்டாலே கூச்சல் போடுகிறோம். உண்மை என்னவெனில், தமிழ்நாட்டை விட பல மாநிலங்களில் எம்எல்ஏக்களின் சம்பளம் ரொம்பவே அதிகம். ஆனால், இப்போது சொல்லப்போகும் சேதி கொஞ்சம் வித்தியாசமானது. கேட்டால், அம்மாடியோவ்! என வாய் பிளக்கும் சமாச்சாரம்தான் இது. உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது. அதன் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத். கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெயித்து, ஆட்சிக்கு வந்தார்கள். அதற்குமுன்பு அங்கு காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்தது. ஆட்சிக்கு வந்த கடந்த 9 மாதத்தில் உத்தராகண்ட் மாநில அரசாங்கம், டீ, பஜ்ஜி, போண்டா, வடை, முறுக்கு, வருத்த முந்திரி போன்ற நொறுக்குத் தீனிகள் (ஸ்னேக்ஸ்), கார வகைகளுக்கு மட்டுமே 68 லட்சத்து 59 ஆயிரத்து 865 ரூபாய் செலவழிச்சிட்டாங்களாம...
கக்கூஸ் போறதுக்கும் ஜிஎஸ்டி வரியா?;  சமூகவலைத்தளங்களில் வைரல்

கக்கூஸ் போறதுக்கும் ஜிஎஸ்டி வரியா?; சமூகவலைத்தளங்களில் வைரல்

அரசியல், இந்தியா, ஈரோடு, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெருந்துறையில் உள்ள ஓர் உணவகத்தில், கழிப்பறையை பயன்படுத்திய வாடிக்கையாளரிடம் பத்து ரூபாய் கட்டணமும், அதற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், பார்சல் கட்டணமும் வசூலித்துள்ள நிகழ்வு, சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்துவதற்காக பெரும்பாலான உணவகங்களில் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால், ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு, சில உணவகங்கள் கழிப்பறை பயன்பாட்டுக்கும் தனியாக கட்டணம் வசூலிக்கின்றன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ருக்குமணி அம்மாள் ஹோட்டல் என்ற பெயரில் பிரபலமான ஓர் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகம், ஜூனியர் குப்பண்ணா உணவக உரிமையாளர்களுக்குச் சொந்தமானது. இந்த உணவகத்திற்கு வந்த ஒரு வாடிக்கையாளர் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்தியுள்ளார். அதற்காக அந்த உணவக நிர்வாகம், 10 ரூபாய் கட்டணம் வசூலித்ததோடு, அதற்கு மாநில ஜிஎஸ்டி,...
ஆடிட்டர் குருமூர்த்தி இப்படி பேசலாமா?

ஆடிட்டர் குருமூர்த்தி இப்படி பேசலாமா?

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பாஜக ஆதரவாளரும், துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான ஆடிட்டர் குருமூர்த்தி, பொருளாதார அறிவு இல்லாதவர்கள்தான் பக்கோடா விற்பனை செய்வதை விமர்சிப்பார்கள் என்ற கருத்துக்கு, சமூகவலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ, மரணம் அடைந்த பிறகு அதன் செய்தி ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொண்டார் ஆடிட்டர் குருமூர்த்தி. இவர் பாஜகவின் ஊதுகுழலாக அறியப்பட்டவர். ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதி. கடந்த ஜனவரி இறுதியில் வானொலியில் 'மன் கீ பாத்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ''நாட்டில் பக்கோடா விற்பவர்கள்கூட தினமும் 200 ரூபாய் சம்பாதிக்கின்றனர். அதுவும் வேலைவாய்ப்புதானே?'' என்றார். பாஜக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கடந்த மக்களவை தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தவறான பொருளாதார கொள்கைகள், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ...
மத்திய பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்கு கம்பளம்; சாமானியருக்கு நொம்பளம்!

மத்திய பட்ஜெட்: கார்ப்பரேட்டுக்கு கம்பளம்; சாமானியருக்கு நொம்பளம்!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மக்களவையில் இன்று (பிப்ரவரி 1, 2018) தாக்கலான மத்திய பட்ஜெட், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளையும், நடுத்தரவர்க்கத்தினரை ஏழைகளாகவும் மாற்றும் வகையில் இருப்பதாக மக்களிடம் அதிருப்தி கிளம்பியுள்ளன. 2018&2019ம் ஆண்டுக்கான பட்ஜெட், மக்களவையில் இன்று தாக்கலானது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். கடந்த 2014ல் ஆட்சிக்கு வந்த பாஜக அரசு தாக்கல் செய்யும் அதன் முழு ஆண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். ஒரு பட்ஜெட் அறிக்கை என்பது, எப்போதும் அனைத்துத் தரப்பினரையும் திருப்திப்படுத்தியதாக வராற்றுச் சான்றுகள் இல்லை. மக்கள் நலனை மையப்படுத்திய பட்ஜெட்டாகவே இருந்தாலும் அதை எதிர்ப்பதுதான் எதிர்க்கட்சிகளிடையே நிலவும் பொதுவான போக்குகள். இன்று சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட், ஒட்டுமொத்தமாக மக்களுக்கு விரோதமானது என்று சொல்லிவிடலாகாது. ஆனால், அடுத்து வரவுள்ள சில மாநில சட்டப்பேரவை தேர்தல், அடு...