Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

மற்றவை

திரை இசையில் வள்ளுவம்: துயிலாத பெண் ஒன்று கண்டேன்…

திரை இசையில் வள்ளுவம்: துயிலாத பெண் ஒன்று கண்டேன்…

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள்
#தொடர்   இளங்கம்பன் கண்ணதாசன் பாடல்களில் கற்பனைத்திறம் மிகுந்திருப்பது காதல் பாடல்களிலா? தத்துவப் பாடல்களிலா? என ஆராய்ச்சியே மேற்கொள்ளலாம். அந்தளவுக்கு ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. காதல் இன்பத்தை மட்டுமல்ல; அதன் தோல்வியால் உண்டாகும் வலியையும் பார்வையாளனுக்கு மிக எளிதாகக் கடத்திவிடும் திறம், கண்ணதாசனின் வரிகளுக்கு உண்டு. காதலின் உச்சநிலையை, வேதனைகளை, செவிகளாலும் உணர முடியும். அதுதான் கவியரசரின் வெற்றி.   காதல் உணர்வு இருபாலருக்கும் பொதுவானதுதான். எனினும், பெண்களே காதலால் பெரும் அல்லல் படுகின்றனர் என்பது வள்ளுவப் பெருந்தகையின் கூற்று. நிகழ்கால சாட்சிகளும் அதுதானே. காதலுற்ற ஒரு பெண், காதலனுக்கு ஓயாமல் அலைபேசியில் அழைத்துப் பேசிக்கொண்டிருப்பதை இப்போதும் நாம் காண்கிறோமே. (அந்த அலைபேசிக்கு 'ரீசார்ஜ்' செய்வது என்னவோ காதலன்தானே!). பகல் நேரங்களில் காதலனை பூங்கா, கடற்கரை, தி
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே – திரை இசையில் வள்ளுவம் #தொடர்

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே – திரை இசையில் வள்ளுவம் #தொடர்

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
திரை இசைப்பாடல்களில் பொதிந்திருக்கும் குறள் இன்பத்தை வெளிக்கொணர்வதே இத்தொடரின் நோக்கம். இந்த பகுதியில் பெரும்பாலும் காதல் பாடல்களே இடம் பெற்று வந்தன. இந்த முறை அதில் சிறு மாற்றம். இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நேரம் இது. மாணவர்களுக்கு இந்தத் தொடரின் மூலம் சில செய்திகளைச் சொல்லலாம். இரண்டாவது காரணம், ஜூன் 24ம் தேதி இளங்கம்பன் கண்ணதாசன் பிறந்த தினம். நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். ''பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை'' என்ற பொய்யாமொழியன், செல்வத்தை ஒருபோதும் உடைமையாகச் சொன்னதில்லை. அது வரும்; போகும். நிலையற்றது. அவன், ஊக்கம் உடைமையைத்தான் உண்மையான உடைமை என்கிறான். அதனால்தானோ என்னவோ அய்யன் வள்ளுவன், ஊக்கமுடைமையை பொருட்பாலில் வைத்துப் பாடியிருக்கிறான். ஒருவனுடைய ஊக்கம் எப்படி இருக
‘நம்ம ஊரு ஐன்ஸ்டீன்’ ரிபாத் ஷாரூக்! கரூர் முதல் ‘நாசா’ வரை

‘நம்ம ஊரு ஐன்ஸ்டீன்’ ரிபாத் ஷாரூக்! கரூர் முதல் ‘நாசா’ வரை

இந்தியா, உலகம், கல்வி, தமிழ்நாடு, தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரிபாத் ஷாரூக், கையடக்க செயற்கைக்கோளை தயாரித்து, விண்ணில் செலுத்தியதன் மூலம் இன்று உலகத்தின் பார்வையைத் தன் பக்கம் ஈர்த்து இருக்கிறார். ரிபாத் ஷாரூக் மற்றும் அவருடைய குழுவினரின் சாதனையைப் பாராட்டி, தமிழக அரசு ரூ.10 லட்சம் பரிசு வழங்கி கவுரவித்திருக்கிறது. வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் ரிபாத். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான 'நாசா' (NASA), புதிய கண்டுபிடிப்புகளுக்கான 'கப்ஸ் இன் ஸ்பேஸ்'(Cubs in Space) என்ற போட்டி ஒன்றை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. மாணவர்கள், தங்களது ஆராய்ச்சி கட்டுரைகள், படைப்புகளை இந்தப் போட்டியில் சமர்ப்பிக்கலாம். இந்த போட்டியை, ஸ்ரீமதி கேசன் என்பவர் செயல் அதிகாரியாக இருக்கும் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்ற அமைப்புதான் இந்தியாவில் வழிநடத்துகிறது. இதில் பங்கேற்ற ரிபாத் ஷாரூக் குழுவினர், தங்களின் கையடக்க செயற
சட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா? – சுரேஷ், வழக்கறிஞர்

சட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா? – சுரேஷ், வழக்கறிஞர்

கல்வி, சென்னை, தகவல், மகளிர்
மனித சமுதாயத்தின் சட்ட திட்டங்களைக் கொண்டு அந்த மனித சமுதாயம் எப்படிப்பட்ட இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பதை கணித்து விடலாம். நாம் மனித வரலாற்றைப் புரட்டினால் சமுதாயம் மாற்றம் அடைய அடைய அதன் சட்டத்திட்டங்களும் மாற்றம் அடைந்து கொண்டே வந்திருக்கின்றது என்பதை அறியலாம். சமூகம் மாற ஆரம்பித்ததும் குற்றங்களும் நடைபெற ஆரம்பித்தன. சமூகத்தை ஒருங்கிணைக்கவும் பாதுகாக்கவும் சட்டங்கள் வரையறுக்கப்பட்டன. ஆனால் சட்ட விழிப்புணர்வு மட்டும் இன்றும் தோன்றவே இல்லை. குறிப்பாக பெண்கள், அடிப்படை சட்டங்களை அறிந்து கொள்வதின் மூலம் தன்னம்பிக்கையும், எதையும் எதிர் கொள்ளும் துணிவும் பக்குவமும் அதிகரிக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. சொத்தில் பங்கு உண்டா..? ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று சில பேருக்கு பொதுவாய் தெரிகிறது. "மகிழ்ச்சி”. ஆனால் பெண்களுக்கு என்னென்ன உரிமை இருக்கி
உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே… : திரை இசையில் வள்ளுவம்!

உண்மை எது பொய் எதுன்னு ஒண்ணும் புரியலே… : திரை இசையில் வள்ளுவம்!

இலக்கியம், சினிமா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
சங்க இலக்கியங்களில் திருக்குறளில் சொல்லப்பட்ட பல பாடல்களை அடியொற்றி, அவ்வையாரும் பாடியிருக்கிறார். இதை 'கட் - காப்பி - பேஸ்ட்' என்பதா? அல்லது உயர்ந்தவர்களின் சிந்தனைகள் ஒரே மாதிரிதான் இருக்கும் என்று புரிந்து கொள்வதா?. சங்க காலத்தில் நடந்ததை இப்போது எதற்கு சர்ச்சையாக்குவானேன். என் பாட்டுக்கு ஏதோ ஒன்று சொல்வதைவிட, திரைப்பாட்டுக்கும் வள்ளுவத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பேசி விடுவதே நல்லதென படுகிறது. சங்ககாலக் கவிஞர்களின் படைப்புகளுக்குள் இருக்கும் ஒப்புமையைப் போல, திரைப்படப் பாடல் ஆசிரியர்களின் படைப்புகளுக்குள்ளும் எக்கச்சக்க ஒற்றுமைகள் உண்டு. இந்த தொடரின் ஆரம்பத்திலேயே 'நினைத்ததை முடிப்பவன்' (1975) படத்தில் கவிஞர் மருதகாசி எழுதிய, 'கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...' என்ற பாடலுக்கும், வள்ளுவத்துக்கும் உள்ள தொடர்பைப் பற்றி விரிவாகவே பார்த்திருக்கிறோம். கவிஞர் மருதகாசிக்கு முன்ப
‘காவிகளின்’ ஆட்சியில் கலவர பூமியானது இந்தியா! “பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில்தான் அதிக வன்முறையாம்”

‘காவிகளின்’ ஆட்சியில் கலவர பூமியானது இந்தியா! “பா.ஜ.க., ஆளும் மாநிலங்களில்தான் அதிக வன்முறையாம்”

அரசியல், இந்தியா, குற்றம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியா முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் இனவாத, வகுப்புவாத போராட்டங்கள், குற்றச் சம்பவங்கள் அதற்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் 41 விழுக்காடு அதிகரித்து உள்ளதாக நடுவண் அமைச்சரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். மத்திய உள்விவகாரத்துறை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர், கடந்த 2017 ஜூலை 25-ம் தேதியன்று பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். அதில் கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற வகுப்புவாத மற்றும் இனவாதக் கலவரங்கள் குறித்த புள்ளிவிவரக் கணக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை கிட்டத்தட்ட மோடி அரசின் மூன்றாண்டு ‘சாதனைகளின்’ ஒப்புதல் வாக்குமூலமாக அமைந்துள்ளது. தேசிய குற்றப் பதிவுத்துறை (NCRB) வெளியிட்டுள்ள தகவல்களின் படியே அந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதாலும், அதை மத்திய அமைச்சரே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாலும் அந்தப் புள்ளிவிவரங்களை மோடியின் பக்தாள்கள் யாரு
‘நீட்’ தேர்வு: வெளிவராத ஓர் அதிர்ச்சித் தகவல்!

‘நீட்’ தேர்வு: வெளிவராத ஓர் அதிர்ச்சித் தகவல்!

அரசியல், அலோபதி, இந்தியா, உலகம், கல்வி, தமிழ்நாடு, தொழில்நுட்பம், மருத்துவம், முக்கிய செய்திகள்
நீட் தேர்வில் வட மாநிலங்களுக்கு காட்டிய சலுகையை, தமிழ்நாட்டிற்கு மட்டும் ஓரவஞ்சனையுடன் செயல்பட்டுள்ளதாக நடுவண் பா.ஜ.க., அரசு மீது குற்றச்சாட்டு உள்ள நிலையில், அத்தேர்வு குறித்த மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் இப்போது வெளியாகி உள்ளன.  “ஒரே தேசம், ஒரே தேர்வு” என்பது நீட் தேர்வு முறைக்கு சொல்லப்பட்ட வியாக்கியானம். பீற்றிக் கொள்ளப்பட்ட “ஒரே தேர்வு” என்பது நடைமுறையில் உள்ள மற்ற தேர்வுகளை ஒழிக்கவில்லை; என்பது ஒருபுறம் இருக்கட்டும். மேற்படி தேர்வுக்கு மாணவர்கள் தங்களைத் தயாரித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளும் ஏற்றத் தாழ்வாகவே இருக்கின்றது. வசதி படைத்த மாணவர்கள், பல லட்சங்கள் செலவு செய்து சி.பி.எஸ்.இ. பாட திட்டம் கொண்ட ஐந்து நட்சத்திர பள்ளிகளில் படிப்பதோடு, மேலும் சில லட்சங்கள் செலவு செய்து நீட் தேர்வுகளுக்கும் தங்களைத் தயாரித்துக் கொண்டனர். இவர்களோடு, மாநில அரசுகளின் பாட திட்டங்களில் பயின்ற ஏழை மாணவ