ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 25வது அமர்வு டெல்லியில் இன்று (ஜனவரி 18, 2018) நடந்தது. மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் பல்வேறு மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
இந்த கவுன்சில் கூட்டத்தில் 29 கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விபூதி, சர்க்கரை மிட்டாய், 20 லிட்டர் கேன் குடிநீர் உள்ளிட்ட 49 பொருட்கள் மீதான வரியை குறைத்துள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் துறையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வருவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டது.
- பொழுது போக்கு பூங்கா கட்டணம் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரி குறைப்பு.
- ஜனவரி-25 தேதி முதல் இந்த வரி குறைப்பு அமலுக்கு வரும்
- 10 நாட்களுக்கு பிறகு ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறும்.
ரியல் எஸ்டேட் துறையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வர தமிழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் ஆய்வு செய்யவும் வலியுறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.