Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கல்வி

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

பத்தாம் வகுப்பு மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
-தகவல்-   பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தேசிய திறனாய்வுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தமிழக அரசுத்தேர்வுகள் இயக்ககம் அழைப்பு விடுத்துள்ளது.   பள்ளி மாணவர்களிடையே அறிவியல், சமூக அறிவியல் படிப்புகளின் மீது ஆர்வத்தைத் தூண்டும் வகையில் தேசிய திறனாய்வுத்தேர்வு (NTSE - National Talent Search Examination) நடத்தப்பட்டு, உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 1963ம் ஆண்டு முதல் இத்திட்டம் அமலில் இருந்து வருகிறது. தேசியக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்குழு (NCERT) இத்தேர்வை நடத்தி வருகிறது. அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசு, தனியார், நிதியுதவி பெறும் பள்ளிகளில் தற்போது பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.   இரண்டு நிலைகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம்
பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு 36200 ரூபாய் ஸ்காலர்ஷிப்!

பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு 36200 ரூபாய் ஸ்காலர்ஷிப்!

கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
(தகவல்)   யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக  மானியக்குழு, நடப்புக் கல்வி ஆண்டில் (2019-2020) முதுநிலை படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு பிரத்யேகமாக இந்திராகாந்தி ஸ்காலர்ஷிப் திட்டத்தை அறிவித்துள்ளது.   இந்திராகாந்தி ஸ்காலர்ஷிப்: பெண் கல்வி மற்றும் சிறு குடும்ப கொள்கையை ஊக்குவிக்கும் வகையில் வீட்டில் ஒற்றை பெண் குழந்தையாக பிறந்து, பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்காக ஆண்டுதோறும் இந்திராகாந்தி ஸ்காலர்ஷிப் திட்டத்தை யுஜிசி செயல்படுத்தி வருகிறது. நடப்புக் கல்வி ஆண்டில், பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழங்களில் முதலாமாண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள், இந்த உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.   இந்த திட்டத்தில் பயனடைய ஒரு முக்கிய நிபந்தனை உண்டு. பெற்றோருக்கு ஒரே மகளாக ப
சேலம்: அம்மா உணவகமாக மாற இருந்த அரசுப்பள்ளியை மீட்டெடுத்த ஆசிரியை!

சேலம்: அம்மா உணவகமாக மாற இருந்த அரசுப்பள்ளியை மீட்டெடுத்த ஆசிரியை!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
இருத்தலுக்கும் இல்லாமைக்குமான வேறுபாடு நூலிழை அளவே என்பதே இயற்கைக் கோட்பாடு. கொஞ்சம் அசந்து இருந்தாலும் இந்நேரம் அம்மா உணவகமாக மாறி இருக்க வேண்டிய ஓர் அரசுப்பள்ளியை மீட்டெடுத்து, இன்று முந்நூருக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் பள்ளியாக உயர்த்திக் காட்டியிருக்கிறார் பெண் தலைமை ஆசிரியர். சேலம் அம்மாபேட்டை பசுபலகுருநாதன் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிதான், தலைமை ஆசிரியரின் முயற்சியால் மீண்டும் புதிய பரிணாமம் பெற்றிருக்கிறது. அத்தகைய அளப்பரிய உழைப்பிற்குச் சொந்தக்காரர், கார்த்திகேயனி (50). அப்பள்ளியின் தலைமை ஆசிரியர். நாம் அந்தப்பள்ளியில் தொடர்ச்சியாக இரு நாள்கள் பார்வையிட்டோம். ஒவ்வொரு வகுப்பறையிலும் நுழைந்து பார்த்தோம். அவை குழந்தைகள் அமர இடமின்றி பிதுங்கி வழிந்தன. அந்தளவுக்கு மாணவர் சேர்க்கை அபரிமிதமாக இருந்தது.   கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன், இதே பள்ளிதான் கடை
28 நாள் வனவாசம்: சேலம் சிஇஓ கணேஷ்மூர்த்திக்கு மீண்டும் அழைப்பு!

28 நாள் வனவாசம்: சேலம் சிஇஓ கணேஷ்மூர்த்திக்கு மீண்டும் அழைப்பு!

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கணேஷ்மூர்த்தி திடீரென்று காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கியடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவரை அதே பணியிடத்திற்கு அமர்த்தி இருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை. கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக (சிஇஓ) பணியாற்றி வந்த கணேஷ்மூர்த்தி (36), கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். போட்டித்தேர்வு மூலம் நேரடியாக கல்வி அலுவலர் பணியில் சேர்ந்த இவர், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றதில் இருந்தே, அதுவரையிலும் கல்வி அலுவலகத்தையே சுற்றி வரும் காக்கா கூட்டங்களில் இருந்து காத தூரம் விலகியே இருந்தார்.   குறிப்பாக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், அரசியல் புள்ளிகள் கொண்டு வரும் சிபாரிசுகளை தயவு தாட்சண்யமின்றி புறந்தள்ளினார். அதேநேரம், தகுதி இருக்கும் பட்சத்தில் அதன்மீது உடனுக்குடன் வி
ஆசிரியர்களுக்கு டீ, பிஸ்கட், மதிய உணவு ‘கட்’; வேணும்னா சொந்த செலவுல பண்ணிக்குங்க!!

ஆசிரியர்களுக்கு டீ, பிஸ்கட், மதிய உணவு ‘கட்’; வேணும்னா சொந்த செலவுல பண்ணிக்குங்க!!

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'யானை வாங்கியும் அங்குசம் வாங்க காசில்லை' என்ற கதையாக, ஆசிரியர்களை உலகத்தரத்திற்கு உயர்த்தும் அரசின் நோக்கம் ஒருபுறம் இருந்தாலும், தேநீர், பிஸ்கட், மதிய உணவு போன்ற சலுகைகளை திடீரென்று நிறுத்தியது ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தினரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.   அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்பு அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் சார்பில் பிரிட்டிஷ் கவுன்சில் மூலமாக ஆங்கில பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. கடந்த கல்வி ஆண்டு முதல், அனைவருக்கும் கல்வித் திட்டமானது, 'அனைவருக்குமான ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (சமக்ர சிக்ஷா) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் இந்தாண்டு, அரசுப்பள்ளிகளில் முதலாம் வகுப்பு ஆங்கிலப்பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு ஆங்கில எழுத்துகள், சொற்களின் ஒலிப்பு முறைகள் குறித்து சிறப்பு பய
சேலம்: நீட் தேர்வில் மஹாதர்ஷினி மாவட்ட அளவில் முதலிடம்!

சேலம்: நீட் தேர்வில் மஹாதர்ஷினி மாவட்ட அளவில் முதலிடம்!

கல்வி, சேலம், முக்கிய செய்திகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். மதிப்பெண், இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நீட் தேர்வு நடந்தது. ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் மே 20ல் தேர்வு நடந்தது. இத்தேர்வு முடிவுகள் ஜூன் 5ல் வெளியாகின.   இத்தேர்வில், சேலம் அழகாபுரம்புதூர் ராஜாராம் நகரைச் சேர்ந்த மஹாநேருராஜ் - ராதிகா தம்பதியின் மகள் மஹாதர்ஷினி 596 மதிப்பெண்கள் பெற்று, சேலம் மாவட்ட அளவில், முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்2 முடித்த மஹாதர்ஷினி, கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் 235 மதிப்பெண்கள் பெற்றார். ஆனாலும், மருத்துவர் கன
சேலம் சிஇஓ மாற்றப்பட்டது ஏன்? பரபரப்பு பின்னணி தகவல்கள்!!

சேலம் சிஇஓ மாற்றப்பட்டது ஏன்? பரபரப்பு பின்னணி தகவல்கள்!!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுக ஆட்சியில் நேர்மையான அரசு ஊழியர்கள் தொடர்ந்து பந்தாடப்பட்டு வருவது, உயர் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தி உள்ளது.   தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக ஆட்சியின்போது அடிக்கடி அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவதும், ஐஏஎஸ், ஐபிஎஸ், மாவட்ட அளவிலான அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்படுவதும் மிகச்சாதாரணமான ஒன்றுதான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அமைச்சரவையில் பெரிதாக மாற்றங்கள் நிகழாவிட்டாலும், நேர்மையான அதிகாரிகளை இடமாறுதல் செய்வது, காத்திருப்போர் பட்டியலில் வைப்பது, தகுதிக்குறைப்பு செய்வது போன்ற துக்ளக் தர்பார் காட்சிகள் இப்போதும் தொடர்கிறது. ஊழல் கறை படியாதவர்கள் மற்றும் திறமையானவர்கள் என்று பெயரெடுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சகாயம், உதயச்சந்திரன், ஐபிஎஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் முதல் சில நாள்களுக்கு முன் இடமாறுதல் செய்யப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சி
நீட் தேர்வு-2019 முடிவுகள் வெளியீடு! தமிழக மாணவர்கள் அபாரம்!!

நீட் தேர்வு-2019 முடிவுகள் வெளியீடு! தமிழக மாணவர்கள் அபாரம்!!

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று (ஜூன் 5, 2019) வெளியாகின. நாடு முழுவதும் 56.49 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.   இளங்கலை மருத்துவப்படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகியவற்றில் சேர்ந்து பயில தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம். நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நீட் தேர்வு நடந்தது. ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் மே 20ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகளை, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நேற்று (ஜூன் 5, 2019) மாலை அதனுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 14 லட்சத்து 10755 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில், அவர்களில் 7 லட்சத்து 97042 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்
நீட் தேர்வு எப்படி இருந்தது? மாணவர்கள் சொல்வது என்ன?

நீட் தேர்வு எப்படி இருந்தது? மாணவர்கள் சொல்வது என்ன?

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நீட் தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிமையாக இருந்ததால், இந்த ஆண்டு தமிழகத்தில் அதிகமானோர் தேர்ச்சி பெற வாய்ப்பு உள்ளதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.   இளநிலை மருத்துவப்படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் போட்டித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றாக வேண்டும். இதற்காக நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 5) தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில் இருந்து இந்தாண்டு 1.50 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 14 நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் முழு கை வைத்த சட்டை அணிந்து வரக்கூடாது, அடர்த்தியான நிற உடைகள் அணியக்கூடாது, எந்த விதமான எழுதுபொருள்களும் கொண்டு மையத்திற்குள் கொண்டு செல்லக்கூடாது, மாணவிகள் கொலுசு, வளையல் உள்ளிட
பிளஸ்-2க்குப் பிறகு என்ன படிக்கலாம்? சிஎம்ஏ படிப்புக்கு வளமான எதிர்காலம்! விழிப்புணர்வு தொடர்#2

பிளஸ்-2க்குப் பிறகு என்ன படிக்கலாம்? சிஎம்ஏ படிப்புக்கு வளமான எதிர்காலம்! விழிப்புணர்வு தொடர்#2

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பிளஸ்-2க்கு பிறகு, பட்டப்படிப்பில் எதை தேர்வு செய்வது? என்ற குழப்பத்தில் உள்ள மாணவர்களுக்கான குறுந்தொடர் இது. கோர் ஏரியா என்று சொல்லக்கூடிய முதன்மைப் படிப்புகளைத் தவிர்த்த பிற வாய்ப்புள்ள பாடப்பிரிவுகள் குறித்த இந்த தொடரில் பார்க்கலாம். சிஎம்ஏ என்பதும் தொழில் படிப்புதானா?   பட்டய கணக்காளர் படிப்பு எந்தளவுக்கு மிகவும் தனித்துவமான தொழில்படிப்போ அதற்கு சற்றும் குறைவில்லாதது சிஎம்ஏ எனப்படும் 'செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காயர்' படிப்பு ஆகும். இதை ஆங்கிலத்தில் Cost and Management Accountant (CMA) எனலாம். இந்தியாவில் மிக உயரிய பாடப்பிரிவுகளுள் சிஎம்ஏ தொழிற்படிப்பும் ஒன்றாகும்.   இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அண்டு மேனேஜ்மென்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா என்பது ஒரு தன்னாட்சி பெற்ற, சட்ட ரீதியான நிறுவனம். சுருக்கமாக ஐசிஎம்ஏஐ. இந்நிறுவனம் 1959ம் ஆண்டு மே மாதம் 28ம்