Sunday, April 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

கல்வி

உயர்மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு ரத்து கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பளம்

உயர்மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு ரத்து கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்பு கம்பளம்

கல்வி, முக்கிய செய்திகள்
மருத்துவப்படிப்பில் சேர 'நீட்' தேர்வு ஒன்றே வழி சமூகத்தில் உயர் அந்தஸ்தில் வைத்துப் பார்க்கப்படும் மருத்துவர்களை சாலையில் இறக்கி தவிக்க விட்டுள்ளது, ஒரு தீர்ப்பு. கிராமப்புற அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு பட்டமேற்படிப்பில் சேர, இதுவரை வழங்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீட்டை ஒரே தீர்ப்பில் ரத்து செய்துள்ளது, சென்னை உயர்நீதிமன்றம். மருத்துவப்படிப்பில் சேர 'நீட்' தேர்வு ஒன்றே வழி, என்ற நடுவண் அரசின் தாக்குதலில் இருந்தே மீளாத தமிழகத்திற்கு, மற்றொரு சம்மட்டி அடிதான் இந்த தீர்ப்பு. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும், நீட் தேர்வு உத்தரவும் மருத்துவர்களை இனி கார்ப்பரேட் மருத்துவமனைகளை நோக்கியே உந்தித்தள்ளும் என்ற கவலையையும் அச்சத்தையும் அரசு மருத்துவர்களிடம் ஒருசேர ஏற்படுத்தி உள்ளது. பிரச்னையின் அடிநாதம் இதுதான். தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் ஒவ்வொருவரும் கிராமப்புற ஆர