Saturday, November 8மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

காதல் மனைவிக்கு பறக்கும் முத்தம் பார்சல்…!;  இரட்டை சத நாயகன் ரோஹித் லவ்ஸ்…!!

காதல் மனைவிக்கு பறக்கும் முத்தம் பார்சல்…!; இரட்டை சத நாயகன் ரோஹித் லவ்ஸ்…!!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, மைதானத்தில் இருந்தவாறே கேலரியில் அமர்ந்திருந்த தன் காதல் மனைவிக்கு பறக்கும் முத்தத்தை அனுப்பியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி, மொஹாலியில் இன்று (டிசம்பர் 13, 2017) நடந்தது. முதலில் மட்டையை சுழற்றிய இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதலே அனல் பறக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி, இலங்கை அணியை தெறிக்கவிட்டனர். இந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி, 392 ரன்களை குவித்ததுடன், இலங்கை அணியையும் வீழ்த்தியது. ஒருமுனையில் நங்கூரம் பாய்ச்சி நின்ற தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா, அரை சதத்தை சதமாகவும், சதம் எட்டிவிட்டால் அதை இரட்டை சதம் அல்லது பெரிய அளவிலான ரன்களாகவும் மாற...
பள்ளிக்கூடம் கட்ட சொந்த நிலத்தை தானமாக வழங்கிய பெரியபாண்டியன்!

பள்ளிக்கூடம் கட்ட சொந்த நிலத்தை தானமாக வழங்கிய பெரியபாண்டியன்!

இந்தியா, சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களின் துப்பாக்கிச்சூட்டில் வீரமரணம் அடைந்த தமிழக காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன், சொந்த ஊரில் பள்ளிக்கூடம் கட்டுவதற்காக தனக்குச் சொந்தமான 10 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியவர் என்ற நெகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே பாலி மாவட்டத்தில் கொள்ளையர்களை சுற்றி வளைத்த தமிழக காவல்துறை தனிப்படையினர் மீது கொள்ளை கும்பல் இன்று (டிசம்பர் 13, 2017) துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில், சென்னை மதுரவாயல் காவல்நிலைய சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் (48) சம்பவ இடத்திலேயே பலியானார். தமிழக காவல்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, வீரமரணம் அடைந்த பெரியபாண்டியன் பற்றி நெகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரியபாண்டியனின் சொந்த ஊர், திருநெல்வேலி மா...
ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சென்னை இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை!

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சென்னை இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை!

இந்தியா, சென்னை, தமிழ்நாடு, திருநெல்வேலி, முக்கிய செய்திகள்
சென்னை மதுரவாயலைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர், ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளை கும்பலால் இன்று (டிசம்பர் 13, 2017) சுட்டுக்கொல்லப்பட்டார். வீர மரணம் அடைந்த ஆய்வாளருக்கு, சக காவல்துறையினர் இரங்கலை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த தேவர்குளம் சாலைப்புதூரைச் சேர்ந்தவர் பெரியபாண்டியன் (48). சென்னை மதுரவாயல் டி-4 காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அவர் கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதிதான் இந்த காவல் சரகத்திற்கு மாறுதல் ஆகி வந்துள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ்குமார் (37) என்பவர் புழல் புதிய லட்சுமிபுரம் என்ற பகுதியில் மஹாலட்சுமி தங்க மாளிகை என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்தார். அந்த கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், சுவரில் துளையிட்டு 3.50 கிலோ தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச்சென்றது. கடந்த நவம்பர் 16ம் தேதி இந்த துணிகரச் சம்பவம...
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 187 ஆணவ படுகொலைகள்!

தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 187 ஆணவ படுகொலைகள்!

சென்னை, தமிழ்நாடு, திருப்பூர், முக்கிய செய்திகள்
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 187 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். உடுமலை சங்கர் ஆணவ படுகொலை வழக்கில் இன்று (டிசம்பர் 12, 2017) திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் சங்கரின் மனைவியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியது: ஆணவப் படுகொலைக்கு எதிரான இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். சாதியைக் கவுரவமாகக் கருதி, சங்கரை பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 187 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. ஆனால்...
தாயின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு!; கவுசல்யா

தாயின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு!; கவுசல்யா

தமிழ்நாடு, திருப்பூர், முக்கிய செய்திகள்
உடுமலை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கில் தாய் அன்னலட்சுமி உள்பட மூன்று பேரின் விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சங்கரின் மனைவி கவுசல்யா கூறியுள்ளார். உடுமலை சங்கரும், பழனியைச் சேர்ந்த கவுசல்யாவும் கடந்த ஆண்டு சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதலுக்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையை ஏவி, கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி சங்கரை பட்டப்பகலில் பலர் முன்னிலையில் வெட்டிப் படுகொலை செய்தனர். கவுசல்யாவையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது. எனினும், தீவிர சிகிச்சை காரணமாக அவர் உயிர் பிழைத்தார். இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, கொலை வழக்கில் உதவியாக இருந்ததாக பிரசன்னா உள்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் வன்கொடு...
உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!; கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு!!

உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!; கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு!!

இந்தியா, தமிழ்நாடு, திருப்பூர், முக்கிய செய்திகள்
உடுமலை சங்கர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்ணின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து, திருப்பூர் சிறப்பு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 12, 2017) பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் வேலுசாமி. இவருடைய மகன் சங்கர் (22). திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யா (19). இருவரும் தனியார் பொறியியல் கல்லூரியில் பிஇ படித்து வந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில், பெண் வீட்டார் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இருதரப்பு பெற்றோரையும் எதிர்த்து அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் ஆணவப்படுகொலை செய்ய கவுசல்யாவின் தந்தை திட்டம் தீட்டினார். கடந்த ஆண்டு மார்ச் 13ம் தேதி, உடுமலைப்பேட்டை பேருந்த...
விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா ரகசிய திருமணம்!; இத்தாலியில் அமர்க்களம்

விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா ரகசிய திருமணம்!; இத்தாலியில் அமர்க்களம்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவுக்கும் இத்தாலியில் இன்று (டிசம்பர் 11, 2017) ரகசிய திருமணம் நடந்தது. இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும், பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் கடந்த பல ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இருவரின் பெற்றோரும் அவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். இதையடுத்து, இந்த ஜோடி திருமண நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தது. கடந்த ஜனவரி மாதமே திருமணம் நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அப்போது அதை அவர்கள் இருவருமே மறுத்து இருந்தனர். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் ட்வென்டி-20 போட்டிகளில் இருந்து விலகிய விராட் கோலி, சொந்த காரணங்களுக்காக விடுப்பில் செல்வதாக அறிவித்தார். அப்போதே, அனுஷ்கா ஷர்மாவை அவர் கரம் பிடிக்கப் போகிறார் என்ற யூகங்கள் ஊடகங்களில் கிளம்பின. அதன்படி, இன்று விராட் கோலிக...
காங்கிரஸ் கட்சித் தலைவரானார் ராகுல் காந்தி!

காங்கிரஸ் கட்சித் தலைவரானார் ராகுல் காந்தி!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். வரும் 16ம் தேதி அவர் முறைப்படி தலைவர் பொறுப்பை ஏற்கிறார். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக கடந்த 19 ஆண்டுகளாக இருந்து வருபவர் சோனியா காந்தி. சீதாராம் கேசரிக்குப் பிறகு, நேரு குடும்பத்தில் இருந்து அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்கட்சியின் தேசிய துணைத்தலைவராக கடந்த 2013ல் நியமிக்கப்பட்டார் ராகுல் காந்தி. தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை இழந்து வந்த காங்கிரஸ் கட்சி, கடந்த 2014ல் நடந்த மக்களவை தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்தது. கடந்த 2004, 2009 என தொடர்ந்து இரு மக்களவை தேர்தல்களிலும் வெற்றி பெற்று மத்தியில் தொடர்ந்து ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி, அண்மைக் காலங்களில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் ராகுல் காந்தியை நியமிக்...
பிரபல இயற்பியல் விஞ்ஞானிக்கு கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!

பிரபல இயற்பியல் விஞ்ஞானிக்கு கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!

உலகம், கல்வி, முக்கிய செய்திகள், விஞ்ஞானம்
குவாண்டம் இயக்கவியல் துறையில் அளப்பரிய சாதனை படைத்த இயற்பியலாளர் மேக்ஸ் பார்ன்-ன் 135வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு கூகுள் நிறுவனம் இன்று (டிசம்பர் 11, 2017) டூடுல் வெளியிட்டு கவுரவம் சேர்த்துள்ளது. ஜெர்மனி நாட்டில் உள்ள பிரெஸ்லூ நகரில், 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிறந்தவர் மேக்ஸ் பார்ன். இப்போது, இந்த பிரெஸ்லூ நகரம் போலந்து நாட்டில் உள்ளது. பிரெஸ்லூவில் உள்ள கோட்டிங்கென் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி ஆய்வை நிறைவு செய்தார். இயற்பியல், கணிதம் ஆகிய துறைகளில் ஆர்வமிக்க மேக்ஸ் பார்ன் இல்லாவிட்டால், இன்றைக்கு மருத்துவத்துறையில் நமக்கெல்லாம் எம்ஆர்ஐ ஸ்கேன், லேசர் சாதனங்கள் கிடைத்திருக்காது. அல்லது, இன்னும் வெகுகாலம் ஆகியிருக்கலாம். கருத்தியல் இயற்பியல், குவாண்டம் இயக்கவியலில் மட்டுமின்றி, கணித சமன்பாடுகளை உருவாக்குவதிலும் கெட்டிக்காரர். தனிநபர் கணினி பயன்பாட்டிற்கும் இவருடைய பல ...
‘நாறும்’ முதலமைச்சரின் மாநகரம்!; ‘இருட்டை தேடும்’ பெண்கள்!!

‘நாறும்’ முதலமைச்சரின் மாநகரம்!; ‘இருட்டை தேடும்’ பெண்கள்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலம் மாநகரத்திலேயே போதிய பொதுக்கழிப்பறை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் ரயில் தண்டவாளம், இருட்டு நேரத்தில் முள் புதரோரங்களில் 'அவசரத்துக்கு ஒதுங்கும்' அவல நிலை நீடிப்பதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ) புகார் தெரிவித்துள்ளது. சேலம் நகராட்சி, 1994ம் ஆண்டில் மாநகராட்சியாக நிலை உயர்த்தப்பட்டது. தமிழகத்தின் ஐந்தாவது பெரிய மாநகரமாக இருந்து வருகிறது. ஆனாலும், அதற்குரிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்னும் முழுமை பெறவில்லை. தனிநபர் வருவாய் உயர்விலும் மோசமான நிலையில் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை முன்னெடுக்கும் வகையில், சேலம் மாநகராட்சி நிர்வாகம் தனிநபர் கழிப்பறை திட்டம் குறித்து தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறது. மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 கோட்டங்களில் 52 கோட்டங்களில் திறந்தவெள...