Wednesday, January 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

அரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது

அரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசுப் பேருந்து பயணக் கட்டணத்தை திடீரென்று உயர்த்தி தமிழக அரசு இன்று (ஜனவரி 19, 2018) இரவு உத்தரவிட்டுள்ளது. புதிய கட்டண உயர்வு நாளை முதல் அமலாகிறது. தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, சேமநலநிதி உள்ளிட்ட பணப்பலன்களை உடனடியாக வழங்கக்கோரி போகி பண்டிகைக்கு முதல் வரை தொடர்ந்து ஐந்து நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களுக்கு முதல்கட்டமாக 750 கோடி ரூபாய் பணப்பலன்களை ஒதுக்கி அரசு அறிவித்ததை தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டனர். அந்தப் போராட்டத்திற்கு சில நாள்களுக்கு முன்பிருந்தே அரசுப்பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான பேச்சுகள் உலா வந்தன. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக கட்டண உயர்வு அறிவிப்பு தாமதம் ஆனது. இந்நிலையில், அரசுப் பேருந்து பயணக் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி தமி-ழக அரசு இன்று அறிவித்துள்ளது. போ...
கர்ப்பமாக இருப்பதாக சொன்ன பிரதமர்!

கர்ப்பமாக இருப்பதாக சொன்ன பிரதமர்!

உலகம், முக்கிய செய்திகள்
இந்தியாபோல் அல்லாமல் மேற்கு உலக நாடுகளில் பிரதமர் பதவியில் இருப்பவர்கள்கூட குடும்பத்துடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும், பொது போக்குவரத்து வாகனங்களில் பயணிப்பதும் மிக இயல்பாக அரங்கேறும் நிகழ்வுகள். இங்கிருப்பதுபோல், எந்த நேரமும் உயர் பாதுகாப்பு படையினருடன் உலா வருவது கிடையாது. தங்களைப் பற்றிய சொந்த தகவல்களையும்கூட அடிக்கடி பொதுவெளியில் பகிர்ந்து கொள்கின்றனர். இப்போது நியூஸீலாந்து பிரதமராக இருக்கும் ஜெசிந்தா ஆர்டர்ன், தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். தானும், தனது கணவருமான கிளார்க் கேஃபோர்ட்டும் தங்களுடைய குழந்தை ஜூன் மாதம் பிறக்குமென்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், அச்சமயத்தில் தான் ஆறு வாரகால விடுப்பு எடுக்கவுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார். '2017-ஆம் ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது என்று எண்ணியிருந்தோம்' என்று தனது இன்ஸ்டாகி...
ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்துதான் ஜெயித்தோம்!;  டிடிவி தினகரன் ஆதரவாளர் ஒப்புதல்

ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கன் கொடுத்துதான் ஜெயித்தோம்!; டிடிவி தினகரன் ஆதரவாளர் ஒப்புதல்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, திருச்சி, முக்கிய செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன் கொடுத்துதான் வெற்றி பெற்றோம். எல்லாமே டிடிவி தினகரனின் திட்டம்தான் என்று அவருடைய ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ தொட்டியம் ராஜசேகரன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது அரசியல் அரங்கில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் பல்வேறு கோணங்களில் புதிய கவன ஈர்ப்பை பெற்று இருந்தது. அதில் முக்கியமானது, சுயேட்சையாக பிரஷ்ஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன், ஆளுங்கட்சி வேட்பாளரை தோற்கடித்து, வெற்றி பெற்றதுதான். கடந்த 13 ஆண்டுகளில் ஓர் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி தோற்பதும் இந்த இடைத்தேர்தலில்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சி தரப்பில் ஓட்டுக்கு ரூ.6000 விநியோகிக்கப்பட்டதாக...
49 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு!

49 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு!

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 25வது அமர்வு டெல்லியில் இன்று (ஜனவரி 18, 2018) நடந்தது. மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி மற்றும் பல்வேறு மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இந்த கவுன்சில் கூட்டத்தில் 29 கைவினை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விபூதி, சர்க்கரை மிட்டாய், 20 லிட்டர் கேன் குடிநீர் உள்ளிட்ட 49 பொருட்கள் மீதான வரியை குறைத்துள்ளது. மேலும் ரியல் எஸ்டேட் துறையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வருவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டுவர ஆலோசிக்கப்பட்டது. பொழுது போக்கு பூங்கா கட்டணம் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜி.எஸ்.டி. வரி குறைப்பு. ஜனவரி-25 தேதி முதல் இந்த வரி குறைப்பு அமலுக்கு வரும்  10 நாட்களுக்கு பிறகு ஜி....
10 ரூபாய் நாணயங்கள் செல்லும்!; ஆர்பிஐ அறிவிப்பு

10 ரூபாய் நாணயங்கள் செல்லும்!; ஆர்பிஐ அறிவிப்பு

இந்தியா, முக்கிய செய்திகள்
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 14 வகையான பத்து ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும் என்றும், வங்கிகள் அவற்றை வாங்காமல் புறக்கணிக்கக்கூடாது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய பணச்சந்தையில் 5 ரூபாய், 10 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய் நாணயங்கள் பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிடப்பட்டன. இவற்றில், 10 ரூபாய் மதிப்பில் போலி நாணயங்கள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று வதந்தி பரவியது. பாகிஸ்தான் நாட்டில் இருந்து இவ்வாறு போலி நாணயங்கள் அச்சிட்டு, இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதை இந்திய அரசும் பலமுறை மறுத்துள்ளது. எனினும், சாலையோர வியாபாரிகள், சாமானியர்கள் முதல் வங்கியாளர்கள் வரை பத்து ரூபாய் நாணயங்களை பட்டுவாடாவுக்கு ஏற்க மறுத்தனர். பத்து ரூபாய் நாணயங்களை யாரும் வாங்காமல் ...
கர்ப்பப்பையில் கட்டி…! ”ஆபத்தை அறியாத பெண்கள்”

கர்ப்பப்பையில் கட்டி…! ”ஆபத்தை அறியாத பெண்கள்”

அலோபதி, சேலம், தமிழ்நாடு, பெண்கள் நலம், மருத்துவம், முக்கிய செய்திகள், விழுப்புரம்
(நலமறிய ஆவல்) பெண்களின் கர்ப்பப்பையில் கட்டி வளருதல் என்பது, அவர்களுக்கு ஏற்படும் முக்கிய உடல்நலப் பிரச்னைகளில் ஒன்று. இப்பிரச்னை சற்று விநோதமானதும்கூட. காரணம், கர்ப்பப்பையில் கட்டி வளர்ந்திருக்கிறது என்பதே பெண்கள் பலருக்கும் தெரியாது என்கிறார்கள் மருத்துவர்கள். சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள திரு மருத்துவமனையில் ஒரு பெண்ணின் கர்ப்பப்பையில் இருந்து, சுமார் 4 கிலோ கட்டியை, லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி இருக்கிறார்கள் மருத்துவர்கள். மூத்த மருத்துவர் திருவருட்செல்வன், மகப்பேறு மருத்துவர் சரவணக்குமார், மயக்கவியல் மருத்துவர் சாய்குமார் குழுவினர் இந்த சிகிச்சையை திறம்பட செய்துள்ளனர். கர்ப்பப்பை கட்டி எதனால் ஏற்படுகிறது? காரணங்கள் என்ன? புற்றுநோயாக மாறுமா? உள்ளிட்ட கேள்விகளை மகப்பேறு மருத்துவர் சரவணக்குமாரிடம் முன்வைத்தோம். இனி, அவர்... காரணங்கள்: ஈஸ்...
பெண்கள் உடைகளுக்கு மாடலிங் செய்யும் ஆண்கள்!; ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?

பெண்கள் உடைகளுக்கு மாடலிங் செய்யும் ஆண்கள்!; ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?

இந்தியா, உலகம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஆண் குழந்தைகளுக்குக்கூட பெண் குழந்தைகளுக்கு அணிவிக்கும் உடைகளை அணிவித்து அழகு பார்ப்பது வழக்கம். காலில் கொலுசு, காதுகளில் கம்மல் குத்திவிடுவது வரை ஆண் குழந்தைகளையும் குறிப்பிட்ட வயது வரை பெண் குழந்தைகளாக பாவிக்கும் பெற்றோர்கள் இன்றும் உள்ளனர். ஓரளவு விவரம் தெரிந்ததும், பெண் குழந்தைகளின் உடைகளை அணிந்தால் வெட்கப்பட்டு ஓடும் ஆண் குழந்தைகளும் உண்டு. ஆனால், வெளிநாடுகளில் பல ஆடை விற்பனை நிறுவனங்களின் சந்தைப்படுத்தும் உத்தியோ, இந்தியா அதிலும் குறிப்பாக தமிழக கலாச்சாரத்தை பின்பற்றி வருகின்றன. ஆனால் அதில்தான் சின்ன மாற்றம். அவர்கள் பெண்கள் உடைகளை அணிவிப்பது ஆண் குழந்தைகளுக்கு அல்ல. மாறாக, வளர்ந்த ஆண்களுக்கு. நளினமான ஆண்கள் என்றெல்லாம் தேடிப்போவதில்லை. கட்டுமஸ்தான உடல்வாகு கொண்ட ஆண்களாக இருந்தாலும், பெண்கள் உடைகளுக்கான 'மாடல்கள்' ஆக வே...
சாதி மறுப்பு திருமணம் செய்தோரை பிரிக்க யாருக்கும் உரிமை இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி

சாதி மறுப்பு திருமணம் செய்தோரை பிரிக்க யாருக்கும் உரிமை இல்லை! உச்சநீதிமன்றம் அதிரடி

இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை பிரிக்க பெற்றோர் உள்பட யாருக்கும் உரிமை கிடையாது என உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 16, 2018) அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது. வட மாநிலங்களில் காப் பஞ்சாயத்து என்ற கட்டப்பஞ்சாயத்தின் பேரில் கலப்புத் திருமணம் செய்த காதலர்களை கொடூரமாக தண்டித்தல், கொலை செய்தல் போன்றவைகள் பரவலாக அரங்கேறி வருகின்றன. இதை தடுப்பது குறித்து ஒருவர் தொடர்ந்த பொது நல வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பில் மேலும் கூறியுள்ளதாவது: சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை கட்டப் பஞ்சாயத்து மூலமோ, கிராமப் பஞ்சாயத்து மூலமோ, சமுதாயப் பெரியவர்கள் என்ற பெயரிலோ யாரும் அவர்களைக் கேள்வுி கேட்கக் கூடாது. அதற்கு அவர்களுக்கு உரிமை கிடையாது. பெற்றோர்களுக்கும் கூட காத...
‘ஓ! பக்கங்களால்’ வாசகர்களை கவர்ந்த ஞாநி!

‘ஓ! பக்கங்களால்’ வாசகர்களை கவர்ந்த ஞாநி!

காஞ்சிபுரம், சிறப்பு கட்டுரைகள், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மூத்த எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன், இன்று (ஜனவரி 15, 2018) அதிகாலை திடீர் மூச்சுத்திணறலால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 64. எழுத்துலகில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த அவருடைய எழுதுகோல் நிரந்தரமாக ஓய்வெடுக்கச் சென்றுவிட்டது. ஞாநி சங்கரன், செங்கல்பட்டில் பிறந்தவர். பெற்றோர் வைத்த பெயர், சங்கரன். அவருடைய அப்பா, வேம்புசாமி. அவரும் பத்திரிகையாளர்தான். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த ஞாநி, டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில்தான் இன்று அதிகாலை 12.30 மணியளவில் அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருக்கிறது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்துள்ளார். ஞாநி என்றாலே பலருக்கு சட்டென நினைவுக்கு வருவது அவருடைய ஓ! பக்கங்கள்தான். விகடன் இதழில் அவர் எழுதி வந்த ஓ!பக்கங்கள் கட்டுரைக்கென தனி வாசகர் வட்டமே உண்டு. அதன்மூலமாக அவர் அரசியல் தளத்த...
துணை வேந்தர்கள் நியமனத்தில் சமூகநீதி புறக்கணிப்பு!; 496 பதவிகளில் 48 பேர் மட்டுமே ஓபிசி!!

துணை வேந்தர்கள் நியமனத்தில் சமூகநீதி புறக்கணிப்பு!; 496 பதவிகளில் 48 பேர் மட்டுமே ஓபிசி!!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நாடு முழுவதும் உள்ள இந்திய பல்கலைக்கழகங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட 496 துணைவேந்தர்களில் 48 பேர் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் சமூகநீதி முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதில் அய்யம் எழுந்துள்ளது. இந்தியா போன்ற பன்முகக் கலாச்சாரம் நிலவும் நாடுகளில் இடஒதுக்கீடு சட்டம் இல்லாவிட்டால், பல இனங்களே எழுத்தறிவின்றி போய்விடும். அந்த சாபம், தலைமுறை தலைமுறையாக தொடரவும் கூடும். இதை உணர்ந்ததால்தான் திராவிட இயக்கங்கள், சமூகநீதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தன. வருகின்றன. ஆனால், பாஜக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் 'கிரீமி லேயர்' குறித்து அடிக்கடி பொது விவாதத்திற்கு வருவதை அறியலாம். அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் அடிப்பொடிகள் கூட்டமோ, இட ஒதுக்கீடு என்பதை பிச்சை இடுவது அல்லது பிச்சை பெறுவதற்குச் சமம் என்பதுபோல் பேசுகின்றனர். என்னளவில் இட ஒதுக்க...