Wednesday, January 21மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

சவரக்கத்தி – சினிமா விமர்சனம்;  ‘மாற்றுப்படங்களின் அட்டகாச ஆரம்பம்!’

சவரக்கத்தி – சினிமா விமர்சனம்; ‘மாற்றுப்படங்களின் அட்டகாச ஆரம்பம்!’

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
படங்களில் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களை கையாளும் மிஷ்கின் மற்றும் ராம் என்ற இரு இயக்குநர்களின் நடிப்பில் காமெடி, குடும்பம், சென்டிமென்ட், காதல் என ரசனையான கலவையில் இன்று (பிப்ரவரி 9, 2018) வெளியாகி இருக்கிறது, 'சவரக்கத்தி'. நடிப்பு: ராம், மிஷ்கின், பூர்ணா மற்றும் பலர் இசை: அரோல் குரேலி ஒளிப்பதிவு: கார்த்திக் தயாரிப்பு: லோன்லி உல்ஃப் புரடக்ஷன்ஸ் இயக்குநர்: ஜி.ஆர். ஆதித்யா கதை என்ன?: கத்தி என்றாலே அது உயிரைக்கொல்லும் ஆயுதம் என்பதாகவே மனிதர்களின் பொதுப்புத்தியில் உறைந்து கிடைக்கிறது. ஆனால், அதே கத்திதான் உயிரை பிரசவிக்கும் கருவியாகவும் பயன்படுகிறது. பொருள் ஒன்று; நோக்கம் வேறானது என்பதுதான் படத்தின் ஒரு வரி கதை. திரைமொழி: கொடூரமான ரவுடியான மங்கா (மிஷ்கின்), சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்திருக்கிறார். பரோல் விடுப்பு முடிந்து, மாலை 6 மணிக்குள் மீண்டும...
டீ குடிப்பதற்கே 68 லட்சம் ரூபாய் செலவழித்த பாஜக அரசு!

டீ குடிப்பதற்கே 68 லட்சம் ரூபாய் செலவழித்த பாஜக அரசு!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
நாமெல்லாம் நம்ம ஊர் எம்எல்ஏக்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை லட்சத்து அஞ்சாயிரமாக உசத்திட்டாலே கூச்சல் போடுகிறோம். உண்மை என்னவெனில், தமிழ்நாட்டை விட பல மாநிலங்களில் எம்எல்ஏக்களின் சம்பளம் ரொம்பவே அதிகம். ஆனால், இப்போது சொல்லப்போகும் சேதி கொஞ்சம் வித்தியாசமானது. கேட்டால், அம்மாடியோவ்! என வாய் பிளக்கும் சமாச்சாரம்தான் இது. உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜகதான் ஆட்சியில் இருக்கிறது. அதன் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத். கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஜெயித்து, ஆட்சிக்கு வந்தார்கள். அதற்குமுன்பு அங்கு காங்கிரஸ் கட்சிதான் ஆட்சியில் இருந்தது. ஆட்சிக்கு வந்த கடந்த 9 மாதத்தில் உத்தராகண்ட் மாநில அரசாங்கம், டீ, பஜ்ஜி, போண்டா, வடை, முறுக்கு, வருத்த முந்திரி போன்ற நொறுக்குத் தீனிகள் (ஸ்னேக்ஸ்), கார வகைகளுக்கு மட்டுமே 68 லட்சத்து 59 ஆயிரத்து 865 ரூபாய் செலவழிச்சிட்டாங்களாம...
நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்;  ஆதார் கார்டு அவசியம்; சிபிஎஸ்இ அறிவிப்பு

நீட் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்; ஆதார் கார்டு அவசியம்; சிபிஎஸ்இ அறிவிப்பு

இந்தியா, கல்வி, தகவல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் (National Eligibility cum Entrance Test- NEET 2018) தேர்வுக்கு இன்றுமுதல் (பிப்ரவரி 8, 2018) விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஆதார் கார்டு விவரங்கள் இருந்தால்தான் தேர்வு எழுத முடியும். மார்ச் 9ம் தேதி, கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவப்படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. கடந்த ஆண்டு முதல் தமிழகத்திலும் நீட் தேர்வு முடிவுகள் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில், நடப்பு 2018-2019ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு இன்று முதல் (பிப்ரவரி 8, 2018) விண்ணப்பிக்கலாம் என சிபிஎஸ்இ (The Central Board of Secondary Education- CBSE) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முட...
பாரதியார் பல்கலை விவகாரம்; சிபிஐ விசாரணை தேவையில்லை!; சுனில் பாலிவால்

பாரதியார் பல்கலை விவகாரம்; சிபிஐ விசாரணை தேவையில்லை!; சுனில் பாலிவால்

கோயம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி நியமனங்களில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகார் குறித்து சிபிஐ விசாரணை தேவை இல்லை என்று தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் கூறியுள்ளார். கோயம்பத்தூர் பாரதியார் பல்கலை துணை வேந்தராக இருந்த கணபதியை, லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் கடந்த 3ம் தேதி கைது செய்தனர். உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். தமிழக உயர்கல்வித்துறை வரலாற்றில் பணியில் இருக்கும் துணை வேந்தர் ஒருவர், லஞ்ச புகாரில் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை. கணபதி, துணை வேந்தராக பொறுப்பேற்றதில் இருந்து நடந்த அனைத்து பணி நியமனங்களிலும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடியதாகவும், ஆட்சியாளர்களுக்கும் அதில் தொடர்பு இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் புகார்கள் கூறின. மேலும், இது தொடர்பாக சிபிஐ போலீசார் விசாரணை ந...
துணை வேந்தர் கணபதி மீது குவியும் புகார்கள்;  கட்டப்பஞ்சாயத்து  ரவுடிபோல் மிரட்டியது அம்பலம்!

துணை வேந்தர் கணபதி மீது குவியும் புகார்கள்; கட்டப்பஞ்சாயத்து ரவுடிபோல் மிரட்டியது அம்பலம்!

கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி, லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்ததாக 20 பேர் புதிதாக லஞ்ச ஒழிப்புப்பிரிவில் புகார்கள் அளித்துள்ளனர். மேலும், உதவி பேராசிரியர் சுரேஷை கட்டப்பஞ்சாயத்து ரவுடிபோல் பணம் கேட்டு கடுமையாக மிரட்டியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை பாரதியார் பல்கலை துணை வேந்தராக பணியாற்றி வந்த கணபதியை, கடந்த 3ம் தேதி லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். உதவி பேராசிரியர் சுரேஷ் என்பவரை பணி நியமனம் செய்வதற்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். இதையடுத்து, அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். கணபதிக்கு தரகு வேலை பார்த்ததாக பேராசிரியர் தர்மராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். மற்றொரு பேராசிரியர் மதிவாணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வரு...
3-வது ஒருநாள்:  சுழல் பந்து வீச்சுக்கு இரையானது தென்னாப்பிரிக்கா; இந்தியா ஹாட்ரிக் வெற்றி

3-வது ஒருநாள்: சுழல் பந்து வீச்சுக்கு இரையானது தென்னாப்பிரிக்கா; இந்தியா ஹாட்ரிக் வெற்றி

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிக்கா உடனான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், விராட் கோலியின் அசத்தலான சதம் மற்றும் சுழல் பந்து வீச்சாளர்கள் தாக்குதலால் இந்தியா 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி ஆகியோர் அரை சதம் கடந்தனர். இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் நேற்று (பிப்ரவரி 7, 2018) நடந்தது. இதில் 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆறு போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளதால், இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. அதேசமயம், தென்னாப்பிரிக்க அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ...
3வது ஒருநாள்: விராட் கோலி, ஷிகர் தவான் அரை சதம்

3வது ஒருநாள்: விராட் கோலி, ஷிகர் தவான் அரை சதம்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி ஆகியோர் அரை சதம் கடந்தனர். இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டவுன் நகரில் இன்று (பிப்ரவரி 7, 2018) தொடங்கியது. இதில் 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். ஆறு போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளிலும் வென்றுள்ளதால், இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை. அதேசமயம், தென்னாப்பிரிக்க அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விக்கெட் கீப்பராக ஹெய்ன்ரிச் கிளாசீன் என்பவரும், ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள லுங்கி நிகிடியும் முதல் முறையாக தென்னாப்பிரிக்க ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளனர். இப்போட்டியிலும் ரோ...
துணை வேந்தர் கணபதி பணியிடை நீக்கம்; ஆளுநர் உத்தரவு

துணை வேந்தர் கணபதி பணியிடை நீக்கம்; ஆளுநர் உத்தரவு

குற்றம், கோயம்பத்தூர், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பணி நியமனத்திற்காக 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலை துணை வேந்தர் கணபதியை பணியிடை நீக்கம் செய்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். கோவை பாரதியார் பல்கலையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருபவர் சுரேஷ். அவரை அந்தப் பணியில் நியமனம் செய்வதற்காக பல்கலை துணைவேந்தர் கணபதி, ரூ.30 லட்சம் கேட்டுள்ளார்.   கடந்த 3ம் தேதி சுரேஷ் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி துணை வேந்தரிடம் லஞ்சப்பணத்தைக் கொடுப்பதற்காக அவருடைய வீட்டிற்குச் சென்றார். லஞ்சம் வாங்கிய துணை வேந்தர் கணபதியை, லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கணபதியின் லஞ்ச பேரத்திற்கு உடந்தையாக இருந்ததாக பாரதியார் பல்கலை பேராசிரியர் தர்மராஜ் என்பவரையும் கைது செய்தனர். கணபதி, சிறையில் அடைக்கப்பட்டு 48 மணி நேரத்திற்கு மேலாகியும் அவர் பணியிடை நீக்கம் செய...
‘வாட்ஸ் அப்’ பயனர்களை அசத்த வருகிறது புதிய வசதி!

‘வாட்ஸ் அப்’ பயனர்களை அசத்த வருகிறது புதிய வசதி!

உலகம், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்
வாட்ஸ் அப் சாட்டில், குழு அழைப்பு (குரூப் காலிங்) வசதியை அறிமுகப்படுத்திய அந்நிறுவனம் தற்போது அதில் இன்னும் மேம்படுத்தப்பட்ட வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. சமூக வலைத்தளங்களின்றி அமையாது உலகு என்ற ரீதியில், உலகம் முழுவதும் உடனுக்குடன் தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. அதிலும் குறிப்பாக, வாட்ஸ் அப் செயலியை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் செயலி நாளுக்கு நாள் புதிய புதிய அப்டேட்டுகளால் அனைவரையும் கவர்ந்து வருகிறது. ஸ்மார்ட் ஃபோன்களை வைத்திருப்பவர்களில் வாட்ஸ் அப் செயலி இல்லாத ஒருவரை, இன்றைய தொழில்நுட்ப உலகில் பார்ப்பது கடினம் என்று சொல்லிவிடலாம். அறிவியல் முன்னேற்றங்கள், புதிய கண்டுபிடிப்புகள் மனிதர்களை தொழில் நுட்பத்திற்கு அடிமையாக மாற்றி வருகிறது. வாட்ஸ் அப் செயலி மூலமாக, மெசேஜ், ஃபோட்டோ, வீடியோ, வாய்ஸ் கால்ஸ், வீடியோ கால் என எந...
கக்கூஸ் போறதுக்கும் ஜிஎஸ்டி வரியா?;  சமூகவலைத்தளங்களில் வைரல்

கக்கூஸ் போறதுக்கும் ஜிஎஸ்டி வரியா?; சமூகவலைத்தளங்களில் வைரல்

அரசியல், இந்தியா, ஈரோடு, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெருந்துறையில் உள்ள ஓர் உணவகத்தில், கழிப்பறையை பயன்படுத்திய வாடிக்கையாளரிடம் பத்து ரூபாய் கட்டணமும், அதற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியும், பார்சல் கட்டணமும் வசூலித்துள்ள நிகழ்வு, சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது. உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்துவதற்காக பெரும்பாலான உணவகங்களில் கட்டணம் வசூலிப்பதில்லை. ஆனால், ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு, சில உணவகங்கள் கழிப்பறை பயன்பாட்டுக்கும் தனியாக கட்டணம் வசூலிக்கின்றன. ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ருக்குமணி அம்மாள் ஹோட்டல் என்ற பெயரில் பிரபலமான ஓர் உணவகம் இயங்கி வருகிறது. இந்த உணவகம், ஜூனியர் குப்பண்ணா உணவக உரிமையாளர்களுக்குச் சொந்தமானது. இந்த உணவகத்திற்கு வந்த ஒரு வாடிக்கையாளர் அங்குள்ள கழிப்பறையை பயன்படுத்தியுள்ளார். அதற்காக அந்த உணவக நிர்வாகம், 10 ரூபாய் கட்டணம் வசூலித்ததோடு, அதற்கு மாநில ஜிஎஸ்டி,...