Tuesday, January 20மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

ரூ.800 கோடி மோசடி: ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் கைது

ரூ.800 கோடி மோசடி: ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் கைது

இந்தியா, குற்றம், முக்கிய செய்திகள்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11400 மோடி வழக்கின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், அதேபோன்ற மற்றொரு மோசடி வழக்கில் ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரியை சிபிஐ அதிகாரிகள் இன்று (பிப்ரவரி 19, 2018) கைது செய்துள்ளனர். பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.11400 கோடி மோசடி செய்திருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து, சொத்துக்களை முடக்கியுள்ள நிலையில் நீரவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில், பிரபல பேனா நிறுவனமான ரோட்டோமேக் நிறுவனத் தலைவரான விக்ரம் கோத்தாரியும் நீரவ் மோடி போலவே வங்கிகளின் கடன் பெற்று மோசடி செய்திருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், கான்பூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது ரோட்டோமேக் நிறுவனம். அந்த நிறவனத் தல...
முதல் டி-20: இந்தியா அபார வெற்றி; புவி. 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை

முதல் டி-20: இந்தியா அபார வெற்றி; புவி. 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஜோகன்னஸ்பர்கில் இன்று (பிப்ரவரி 18, 2018) நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் 5 விக்கெட் வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ட்வென்டி-20 தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஜோகன்னஸ்பர்கில் இன்று நடந்தது. 'டாஸ்' வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டுமினி, முதலில் பந்து வீச தீர்மானித்தார். இந்திய அணியில் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, வேகப்பந்து வீச்சாளர் ஜெயதேவ் உனத்கட் இடம் பெற்றார். ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பின்னர், சுரேஷ் ரெய்னா மீண்டும் அணியில் இணைந்தார். தென்னாப்பிரிக்கா அதிரடி ஆட்டக்காரர் ஏபி டி வில்லியர்ஸ், காயம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை. கிளாசன், டாலா அறிமுகமா...
காவிரி: உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கேள்வி!

காவிரி: உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு கேள்வி!

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கடந்த 16ம் தேதி இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இது தொடர்பாக யாரும் மேல்முறையீடு செய்ய இயலாது என்பதால், இப்போதைக்கு கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் பெரிய அளவில் கொந்தளிப்பை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பு இல்லை. அதற்காக உச்ச நீதிமன்றம் நடுநிலையான தீர்ப்பை வழங்கி விட்டதாக நாம் கருதிவிட முடியாது. காவிரி நீர் பங்கீட்டில் பெரிய அளவில் ஆதாயம் அடைவது கர்நாடகமும், தமிழகமும்தான். கேரளாவும், புதுச்சேரியும் சொற்ப அளவில் ஆதாயம் பெறக்கூடிய இதர மாநிலங்கள். காவிரி விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 1991ம் ஆண்டு அளித்த இடைக்காலத் தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 205 டிஎம்சி (ஒரு டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கன அடி) தண்ணீர் வழங்க வேண்டும் என்று சொல்லி இருந்தது. இந்த நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப...
கிரிக்கெட்: கடைசி ஒருநாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா;  விராட் கோலி அபார சதம்

கிரிக்கெட்: கடைசி ஒருநாள் போட்டியிலும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா; விராட் கோலி அபார சதம்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆறாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் விராட் கோலி, ஒரு நாள் அரங்கில் 35 சதம் அடித்து அசத்தினார். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டுடன் 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இந்திய அணி ஏற்கனவே 4-1 கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ள நிலையில், 6வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 16, 2018) நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஷ்வர்குமாருக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார். தென்னாப்பிரிக்கா தரப்பில் கிறிஸ் மோரீஸ், ஸோண்டோ, இம்ரான் தாக...
கடைசி ஒருநாள்: இந்தியாவுக்கு 205 ரன்கள் இலக்கு; ஷர்துல் தாகூர் 4 விக்கெட்

கடைசி ஒருநாள்: இந்தியாவுக்கு 205 ரன்கள் இலக்கு; ஷர்துல் தாகூர் 4 விக்கெட்

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஆறாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சு காரணமாக அந்த அணி 46.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி, 205 ரன்கள் இலக்குடன் விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டுடன் 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி ஏற்கனவே 4 -1 கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், 6வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி செஞ்சுரியன் மைதானத்தில் இன்று (பிப்ரவரி 16, 2018) மாலை தொடங்கி, நடந்து வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் புவனேஷ்வர்குமாருக்கு ஓய்வளிக்க...
நாச்சியார் – சினிமா விமர்சனம்

நாச்சியார் – சினிமா விமர்சனம்

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இயக்குநர் பாலாவிடம் இருந்து சற்றே மாறுபட்ட கோணத்தில், இன்று உலகம் முழுவதும் வெளிவந்திருக்கும் படம், நாச்சியார். காவல்துறை அதிகாரி அவதாரம், ஜி.வி.பிரகாஷின் குப்பத்து பையன் தோற்றம் என ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நாச்சியார், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? என்பதை பார்க்கலாம். நடிப்பு: ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் குமார், இவானா, 'ராக்லைன்' வெங்கடேஷ் மற்றும் பலர். இசை: இளையராஜா ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர் தயாரிப்பு: பி ஸ்டுடியோஸ் மற்றும் இஓஎன் ஸ்டுடியோஸ் இயக்கம்: பாலா   கதை என்ன? திருமணம் ஆகாத ஒரு மைனர் பெண் கர்ப்பிணி ஆகிறார். சந்தேகத்தின்பேரில் அந்த இளம்பெண்ணின் காதலனை காவல்துறை கைது செய்கிறது. குழந்தை பிறந்த பின்னர்தான் அந்தக் குழந்தைக்கும், கைதான இளைஞனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனத் தெரிகிறது. எனில், அந்த மைனர் பெண்ணை ஏமாற்றி கர்ப்பிணியாக்க...
காவிரி நீர் பங்கீடு:  தமிழகத்திற்கு ஓரவஞ்சனை;  15 டிஎம்சி வெட்டு

காவிரி நீர் பங்கீடு: தமிழகத்திற்கு ஓரவஞ்சனை; 15 டிஎம்சி வெட்டு

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காவிரி நீர் பங்கீடு வழக்கில், தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த தண்ணீர் ஒதுக்கீட்டு அளவில் இருந்து மேலும் 14.75 டிஎம்சி நீரை குறைத்து உச்சநீதிமன்றம் இன்று (பிப்ரவரி 16, 2018) தீர்ப்பு அளித்துள்ளது. இத்தீர்ப்பு, காவிரியை நம்பியிருக்கும் தமிழக டெல்டா விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து அதனால் பயனடையும் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. முழுமையான வாதப் பிரதிவாதங்கள் எ-டுத்து வைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமிதவராய், ஏ.எம்.கன்வல்கர் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது. ...
11400 கோடி ரூபாய் வங்கி கொள்ளை மோடிக்கு தெரிந்தே நடந்ததா? அதிர்ச்சி தகவல்கள்

11400 கோடி ரூபாய் வங்கி கொள்ளை மோடிக்கு தெரிந்தே நடந்ததா? அதிர்ச்சி தகவல்கள்

இந்தியா, குற்றம், முக்கிய செய்திகள்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 11400 கோடி ரூபாய் மோசடி செய்த பிரபல வைர வியாபாரியான நீரவ் மோடி, பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட டாவோஸ் மாநாட்டில் பங்கேற்றதன் மூலம் பாஜக மேலிடத்தின் ஆசியுடன் இந்த முறைகேடு நடந்திருக்கலாம் என்ற அய்யத்தை காங்கிரஸ் எழுப்பி இருக்கிறது. யார் இந்த நீரவ் மோடி?: குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் நீரவ் மோடி (46). 'ஃபயர் ஸ்டார் டைமண்ட்' என்ற பெயரில் கச்சா வைரங்களை கொள்முதல் செய்து, அதை ஆபரணங்களாக வடிவமைத்து உலகம் முழுவதும் விற்பனை செய்து வருவதுதான் அவருடைய தொழில். இந்தியாவில் டெல்லி, மும்பை, சூரத் ஆகிய இடங்களில் அவருக்கு பங்களாக்கள், நகைக்கடைகள் உள்ளன. தவிர, லண்டன், சிங்கப்பூர், நியூயார்க், லாஸ் வேகாஸ், ஹவாய் தீவுகள், பெய்ஜிங் ஆகிய இடங்களிலும் கடைகள் உள்ளன. பெரும்பாலும் வெளிநாட்டுப் பயணங்களிலேயே நேரத்தை செலவிடுபவர் நீரவ் மோடி. பால...
சிங்கம் களம் இறங்கிடுச்சே!;  வைகோவை நொறுக்கும் ‘நெட்டிஸன்’கள்

சிங்கம் களம் இறங்கிடுச்சே!; வைகோவை நொறுக்கும் ‘நெட்டிஸன்’கள்

அரசியல், தமிழ்நாடு, மதுரை, முக்கிய செய்திகள்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்குவதுதான் தனது நோக்கம் என்ற மதிமுக தலைவர் வைகோவை, சமூகவலைத்தளத்தில் கடுமையாக கிண்டல் செய்து 'மீம்'கள் பதிவிட்டுள்ளனர். பலர் திமுகவுக்கு அறிவுரையும் வழங்கியுள்ளனர். பேருந்து கட்டணம் உயர்வைக் கண்டித்து மதுரையில் நேற்று (பிப்ரவரி 13, 2018) பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மதிமுக தலைவர் வைகோ, இரண்டு முக்கிய முழக்கங்களை முன்வைத்தார். ஒன்று, திராவிடம் இல்லாத தமிழ்நாடு என்று யார் நினைத்தாலும் அது முடியாது. மற்றொன்று, திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலினை தமிழகத்தின் முதலமைச்சர் ஆக்குவதுதான் என் நோக்கம் என்றும் கூறினார். சும்மாவே வைகோவை கேலி, கிண்டல் செய்யும் சமூகவலைத்தள பதிவர்களுக்கு இது போதாதா? இன்று நாள் முழுக்க அவரை கடுமையாக கிண்டல் செய்து எக்கச்சக்கமாக மீம்களை பதிவிட்டுள்ளனர். ஒரு காலத்தில் திமுகவின் மு...