Friday, October 31மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

கோகுல்ராஜ் கொலை வழக்கு: புதுமனைவியின் நினைவலையில் யுவராஜ் கூட்டாளி! #Gokulraj

கோகுல்ராஜ் கொலை வழக்கு: புதுமனைவியின் நினைவலையில் யுவராஜ் கூட்டாளி! #Gokulraj

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23), கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கிடந்தது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ், உடன் படித்து வந்த கொங்குவேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த சுவாதியை காதலித்ததால் அவர் ஆணவக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தகவல் பரவியது. இது தொடர்பாக, சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.   இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 30, 2018ம் தேதி முதல் நடந்து வருகிறது. செப்டம்பர் 6ம் தேதி, கோகுல்ராஜின் அண்ணன் கலைசெல்வன...
வாங்குவதும் குற்றம்… கொடுப்பதும் குற்றம்….: எடப்பாடி சொன்னா நம்பணும்!

வாங்குவதும் குற்றம்… கொடுப்பதும் குற்றம்….: எடப்பாடி சொன்னா நம்பணும்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தேர்தலில் பணம் கொடுப்பதும் குற்றம்; வாங்குவதும் குற்றம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று (செப்டம்பர் 11, 2018) கூறினார்.   முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று காலை விமானம் மூலம் சேலம் வந்தார். வழக்கமாக வார இறுதி நாளாக பார்த்து நிகழ்ச்சிகளை திட்டமிட்டு சேலத்திற்கு வருகை தரும் முதல்வர், இந்தமுறை வாரத்தின் துவக்கத்திலேயே வந்தார். சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசுதான் காரணம். மத்திய அரசுதான் விலையை உயர்த்திக் கொண்டே போகிறது. மாநில அரசின் நிதி நெருக்கடி காரணமாக, எரிபொருள்கள் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைத்திட முடியாது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடந்தது என்பதை வைத்து மட்டுமே அவரை குற்றவாளி என்று சொல்லி விட முட...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: தடம் புரண்ட முக்கிய சாட்சி!; அரசுத்தரப்பு கடும் அதிருப்தி!! #Gokulraj #Day5

கோகுல்ராஜ் கொலை வழக்கு: தடம் புரண்ட முக்கிய சாட்சி!; அரசுத்தரப்பு கடும் அதிருப்தி!! #Gokulraj #Day5

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  தமிழகத்தை உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில், ஒரே முக்கிய சாட்சியான கோகுல்ராஜின் தோழி ஸ்வாதி நேற்று (செப்டம்பர் 10, 2018) நீதிமன்றத்தில் பிறழ் சாட்சியம் அளித்தார். இதை சற்றும் எதிர்பாராத அரசுத்தரப்பு வழக்கறிஞர், சிபிசிஐடி போலீசார் உச்சக்கட்ட அதிருப்தி அடைந்தனர்.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பி.இ., பட்டதாரி. திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இவர், தனது படிப்பை 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு செய்திருந்தார். தீவிரமாக வேலை தேடி வந்த நிலையில், 23.6.2015ம் தேதியன்று வீட்டில் இருந்து கிளம்பினார். எப்போது வெளியே சென்றாலும் தாய் சித்ராவிடம் சொல்லிவிட்டுச் செல்வதோடு, அன்று மாலைக்குள் வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் அன்று இந்த நடைமுறைகள் எதையும் கோகுல்ராஜ் பின்பற்றவில்...
பாஜக: எலி ஏன் 8 முழ வேட்டி கட்டிக்கிட்டு ஓடுது? #MannKiBaat #NarendraModi

பாஜக: எலி ஏன் 8 முழ வேட்டி கட்டிக்கிட்டு ஓடுது? #MannKiBaat #NarendraModi

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
உலகிலேயே பழமையான மொழியாக தமிழ் மொழி இருப்பதால் இந்தியாவே பெருமை கொள்கிறது என்று திடீரென்று தமிழின் மீது பாசமழை பொழிந்திருக்கிறார், பிரதமர் நரேந்திர மோடி. இதுதான் சமூக ஊடகங்களில் அண்மைய விவாதங்களில் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.   மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நரேந்திர மோடி, வானொலியில் 'மனதில் இருந்து பேசுகிறேன்' (மன் கீ பாத்) உரையாற்றி வருகிறார். கடந்த 25.8.2018ம் தேதி நடந்த ஓர் உரையாடலில்தான் தமிழை வானளாவப் புகழ்ந்திருக்கிறார்.     இப்படி அவர் உயர்தனிச் செம்மொழியாம் தமிழைப் புகழ்வது முதல் முறையல்ல. நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாதம் டெல்லி டால்கோட்ராவில் நடந்த ஒரு விவாதத்தின்போதும்கூட, 'சமஸ்கிருதத்தைவிட அழகான தமிழ்மொழியை கற்காமல் விட்டது வருத்தம் அளிக்கிறது,' என்று கூறியிருக்கிறார்.     மேடைகளில் தமிழில் சில வாக...
சேலம்: பள்ளி சீருடை கூலியில் பல கோடி ரூபாய் சுருட்டல்! #Scam #SocialWelfare

சேலம்: பள்ளி சீருடை கூலியில் பல கோடி ரூபாய் சுருட்டல்! #Scam #SocialWelfare

குற்றம், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சி-ற-ப்-பு-  க-ட்-டு-ரை-   பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடை தைத்துக் கொடுத்த ஏழை பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல கோடி ரூபாய் கூலித்தொகையை சத்தமே இல்லாமல் ஏப்பம் விட்டுள்ளது எடப்பாடி பழனிசாமி அரசு. தமிழ்நாடு முழுவதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1445 அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு ஆண்டுக்கு நான்கு செட் விலையில்லா சீருடைகளை தமிழக அரசு வழங்குகிறது.   தொழில் கூட்டுறவு சங்கம்:   ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் டிரவுசரும் சட்டையும் சீருடையாக வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்குசட்டையும் ஸ்கர்ட்டும் வழங்கப்படுகிறது. 6ம் வகுப்பு மேல் பயிலும் மாணவர்களுக்கு பேன்ட், சட்டையும், மாணவிகளுக்கு சுடிதார், டாப்ஸ், பேன்ட் ஆகியவையும்...
கிருஷ்ணகிரி: லஞ்சம் வாங்கிய திட்ட அலுவலர் கைது!

கிருஷ்ணகிரி: லஞ்சம் வாங்கிய திட்ட அலுவலர் கைது!

கிருஷ்ணகிரி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலராக பணியாற்றி வருபவர் நரசிம்மன் (49). அரூரைச் சேர்ந்தவர். இதே அலுவலகத்தில், பதிவுரு எழுத்தராக சத்தியமூர்த்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.   ரூ.15 ஆயிரம் லஞ்சம்:   ஊரக வளர்ச்சி முகமைத் திட்டத்தின் கீழ், மாவட்ட நூலகம் அருகில் வணிக கடைகள் கட்டி வா-டகைக்கு விடப்படுகிறது. அதில் ஒரு கடையை தனக்கு ஒதுக்கித் தருமாறு, கிருஷ்ணகிரி டி.பி. சாலையில் வெல்ல மண்டி நடத்தி வரும் ஜெயக்குமார் என்பவர் விண்ணப்பித்து இருந்தார்.   கடை ஒதுக்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சமாக திட்ட அலுவலருக்குக் கொடுக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சி முகமை அலுவலக பதிவுரு எழுத்தர் சத்தியமூர்த்தி கூறியுள்ளார். அப்போது ஜெயக்குமாரும் பணம் கொடுக்க ஒப்புக்கொண்டாலும், லஞ்சம் கொடுத்து கடையை வாடகைக்கு எடுக்க அவர் விரும்பவில்லை....
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: யுவராஜ் தரப்பு வக்கீல் தடாலடி! தடுமாறிய முக்கிய சாட்சி!! #Day4 #Gokulraj

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: யுவராஜ் தரப்பு வக்கீல் தடாலடி! தடுமாறிய முக்கிய சாட்சி!! #Day4 #Gokulraj

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் இன்று (செப்டம்பர் 6, 2018) நடந்த குறுக்கு விசாரணையின்போது அரசுத்தரப்பு முக்கிய சாட்சியான கலைசெல்வன், குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் தரப்பு வக்கீலின் தடாலடி கேள்விகளால் நிலைகுலைந்தார்.   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் - சித்ரா தம்பதியரின் மகன் கோகுல்ராஜ் (23). பி.இ. பட்டதாரி. கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 24ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.   பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், உடன் படித்து வந்த, கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த கல்லூரி தோழி சுவாதியும் காதலிப்பதாக எண்ணிய ஒரு கும்பல் கோகுல்ராஜை ஆணவக் கொலை செய்திருப்பதாக தகவல்கள் பரவின. இந்த வழக்கில், சந்தேகத்தின்பேரில் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்...
ஆசிரியர், மாணவிகள் உள்ளம் கவர்ந்த ஆட்சியர் ரோகிணி! காலில் விழுந்து வணங்கினார்… கேக் ஊட்டினார்… கைகுலுக்கினார்…! #CollectorRohini

ஆசிரியர், மாணவிகள் உள்ளம் கவர்ந்த ஆட்சியர் ரோகிணி! காலில் விழுந்து வணங்கினார்… கேக் ஊட்டினார்… கைகுலுக்கினார்…! #CollectorRohini

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  ஆசிரியர்கள் தினத்தன்று ஒட்டுமொத்த மாணவிகள், ஆசிரியர்களின் உள்ளங்களையும் கவர்ந்து சென்றார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி.   கடந்த ஆண்டு, ஊதிய உயர்வு கேட்டு ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் இணைந்து ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஆத்தூரில் அலுவல் நிமித்தம் சுற்றுப்பயணம் சென்றிருந்தார் சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி. கருமத்தம்பாளையம் அரசுப்பள்ளியில் ஆசிரியர்கள் யாருமே இல்லாத நிலையில், குழந்தைகள் கரும்பலகையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தத் தருணத்தில் என்ன நினைத்தாரோ ரோகிணி, உடனடியாக வகுப்பறைக்குள் சென்று குழந்தைகளுக்கு பாடம் நடத்த ஆரம்பித்து விட்டார். மற்றொரு நாள், அய்யந்திருமாளிகையில் அன்னை சத்யா பெண் குழந்தைகள் காப்பக வளாகத்தில் செயல்படும் பள்ளியிலும் அதிரடியாக ஆய்வு செய்து, குழந்தைகளுடன் வாஞ்சையுடன் கொஞ்சி மகிழ்ந்தார். இன்னொரு நாள் அரசுப்பள...
தட்டச்சு தெரியாவிட்டால் டிஸ்மிஸ்! துக்ளக் தர்பார் நடத்தும் பெரியார் பல்கலை.!! #PeriyarUniversity

தட்டச்சு தெரியாவிட்டால் டிஸ்மிஸ்! துக்ளக் தர்பார் நடத்தும் பெரியார் பல்கலை.!! #PeriyarUniversity

கிருஷ்ணகிரி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  சேலம் பெரியார் பல்கலையில் அனைத்து தொகுப்பூதிய, தினக்கூலி பணியாளர்களும் தட்டச்சு (டைப்ரைட்டிங்) தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்று திடீரென்று உத்தரவிடப்பட்டு உள்ளது, பல்கலை வட்டாரத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலம் பெரியார் பல்கலையின் கீழ் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 101 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், உறுப்புக்கல்லூரிகள் இணைவு பெற்று, செயல்பட்டு வருகின்றன. பல்கலை மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் தேர்வுகளுக்குத் தேவையான பணிகளை மேற்கொள்வது, பல்கலை வரவு, செலவு கணக்குகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளுக்காக தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஒப்பந்த அடிப்படையில் 478 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 282 பணியாளர்கள் தொகுப்பூதியத்திலும், மற்றவர்கள் தினக்கூலி ஒப்பந்தத்தின் பேரிலும் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்கள...
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: ”தலை வேறு உடல் வேறாக தம்பியின் சடலம் கிடந்தது!”; அண்ணன் பரபரப்பு சாட்சியம்! #Day3 #Gokulraj

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: ”தலை வேறு உடல் வேறாக தம்பியின் சடலம் கிடந்தது!”; அண்ணன் பரபரப்பு சாட்சியம்! #Day3 #Gokulraj

குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியான அவருடைய அண்ணன் கலைச்செல்வன், ரயில் தண்டவாளத்தில் தன் தம்பி தலை துண்டமான நிலையில் சடலமாக கிடந்ததை நேரில் பார்த்ததாக பரபரப்பு நாமக்கல் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார்.   இன்ஜினியரிங் பட்டதாரி:   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாச்சலம் - சித்ரா தம்பதிக்கு இரண்டு மகன்கள். தந்தை, பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவர்களுடைய மூத்த மகன் கலைச்செல்வன். இரண்டாவது மகன் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோடு கேஎஸ்ஆர் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ., முடித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி காலையில், வீட்டில் இருந்து கிளம்பிய கோகுல்ராஜ் அன்று இரவு ஆகியும் வீடு திரும்பவில்லை. மறுநாளான 2015, ஜூன் 24ம் தேதி, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலைய...