Friday, October 31மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

யுடர்ன் – சினிமா விமர்சனம்; ”குற்றத்தின் தண்டனை, மரணம்!”

யுடர்ன் – சினிமா விமர்சனம்; ”குற்றத்தின் தண்டனை, மரணம்!”

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  தமிழில் ஹாரர், திரில்லர் வகைமை படங்களுக்கென இதுவரை ஆகிவந்த மரபுகளை முற்றாக தகர்த்து வீசிவிட்டு, வித்தியாசமான திரைமொழியில் வெளிவந்திருக்கிறது யுடர்ன்.   நடிகர்கள்: சமந்தா அக்கினேனி, 'ஈரம்' ஆதி, ராகுல் ரவீந்திரன், பூமிகா சாவ்லா, 'சித்திரம் பேசுதடி' நரேன், 'ஆடுகளம்' நரேன், சிறுமி ஆர்னா மற்றும் பலர்.   தொழில்நுட்ப கலைஞர்கள்: இசை: பூர்ணசந்திரா தேஜஸ்வி, ஒளிப்பதிவு: நிகேத் பொம்மி, எடிட்டிங்: சுரேஷ் ஆறுமுகம்   தயாரிப்பு: ஸ்ரீனிவாச சிந்தூரி மற்றும் ராம்பாபு பண்டாரு, இயக்கம்: பவன்குமார்   கதை என்ன?:   குறிப்பிட்ட ஒரு மேம்பாலத்தில் சாலையின் நடுவே இருக்கும் தடுப்புக் கற்களை அகற்றிவிட்டு யுடர்ன் எடுக்கும் வாகன ஓட்டிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைகின்றனர். அவ்வாறு ஏன் நடக்கிறது? என்பதை, ரசிகர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வந்து...
கொல்லைப்புறமாக வந்தவர் யார்?: எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

கொல்லைப்புறமாக வந்தவர் யார்?: எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கட்சியின் தலைமைப் பதவிக்கு கொல்லைப்புறமாக வந்தவர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறிவரும் குற்றச்சாட்டுக்கு சேலத்தில் இன்று (செப். 25, 2018) நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.   கண்டன பொதுக்கூட்டம்   திமுக, காங்கிரஸ் கட்சிகளைக் கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் இன்று மாலை அதிமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியது:   ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கையில் போர் நடந்தது. அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, மூன்றரை மணி நேர உண்ணாவிரத நாடகத்தை நடத்தி, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாக கூறினார். அதை நம்பி ஈழத்தில் பதுங்கு குழிகளில் இருந்த பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் என அனைவரும் வெளியே வந்தனர். அவர்கள் மீது ராஜபக்சே குண்டுமழை பொழிந்து லட்சக்கணக...
இந்தியாவில் மொபைல் சந்தாதாரர்களில் 17% பேர் மட்டுமே பெண்கள்! ‘ஆண்களின் ராஜ்ஜியம் தொடர்கிறது’

இந்தியாவில் மொபைல் சந்தாதாரர்களில் 17% பேர் மட்டுமே பெண்கள்! ‘ஆண்களின் ராஜ்ஜியம் தொடர்கிறது’

இந்தியா, தகவல், முக்கிய செய்திகள்
இந்தியாவில் அதிகரித்து வரும் மொபைல் போன் பயன்பாடு என்பது கிட்டத்தட்ட ஒரு புரட்சிபோல உருவெடுத்து உள்ளது. ஆனாலும், மொபைல் போன் சிம் கார்டு பதிவுதாரர்களில் 17.4 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள் என்பது ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது.   நடப்பு ஆண்டில் 31.3.2018ம் தேதி வரையில், இந்தியாவில் 99 கோடி மொபைல் சந்தாதாரர்கள் இருப்பதும், அவர்களில் 17.24 கோடி பெண் சந்தாதாரர்கள் என்றும் இந்திய தொலைத்தொடர்புத்துறை ஆய்வு கூறுகிறது.   அதேநேரம், மொத்தம் உள்ள 79.58 ஆண் சந்தாதாரர்களில் 2.50 கோடி சந்தாதாரர்கள் பற்றிய விவரங்கள் அடையாளம் காணப்படவில்லை என்றும் கூறுகிறது.   மொபைல் சந்தாதாரர்களில் நிலவும் பாலின இடைவெளி குறித்து ஒவ்வொரு தொலைதொடர்பு வட்டத்திலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் கிடைத்தன.   மும்பையில், மொபைல் சந்தாதாரர்களில் 11.85 சதவீதம் பேர் பெண்கள்...
சேலம்: திமுக ஆர்ப்பாட்டமும் அம்பலமான கோஷ்டி பூசலும்! #DMK #MKStalin

சேலம்: திமுக ஆர்ப்பாட்டமும் அம்பலமான கோஷ்டி பூசலும்! #DMK #MKStalin

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆளுங்கட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டம் பெரிய அளவில் கவன ஈர்ப்பைப் பெற்றிருந்தாலும், மாங்கனி மாவட்ட திமுகவில் நிலவும் கோஷ்டி பூசல்களையும் பட்டவர்த்தனமாக அம்பலமாக்கியுள்ளது.   ஆர்ப்பாட்டம்   அதிமுக அரசில் குட்கா ஊழல், பொதுப்பணித்துறை டெண்டர் ஊழல், மணல் கொள்ளை ஊழல், சத்துணவு முட்டையில் ஊழல் என எல்லா துறைகளிலும் மலிந்து கிடக்கும் ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் திமுக சார்பில் செப். 18ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடந்தது.   சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்து கொண்டு, அதிமுக அரசை வெளுத்து வாங்கினார்.   மு.க.ஸ்டாலின், திமுக தலைவராக பொறுப்பேற்ற பிறகு மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் என்றால் அது, செப். 18ம் தேதியன்று சேலத்தில் நடந்த ஆர்ப்பாட்டம்தான். ...
எட்டு வழிச்சாலை திட்டத்தில் திருட்டுத்தனம்!; நீதிமன்ற உத்தரவை மதிக்காத நெடுஞ்சாலைத்துறை!! #EightLaneRoad

எட்டு வழிச்சாலை திட்டத்தில் திருட்டுத்தனம்!; நீதிமன்ற உத்தரவை மதிக்காத நெடுஞ்சாலைத்துறை!! #EightLaneRoad

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக எந்தவித பூர்வாங்க பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், திருட்டுத்தனமாக ஜருகுமலையில் மண் பரிசோதனை பணிகளில் மத்திய மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளது விவசாயிகளிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது.   பாரத்மாலா பரியோஜனா   சேலம் முதல் சென்னை வரை புதிதாக பாரத்மாலா பரியோஜனா என்ற திட்டத்தின்கீழ், எட்டு வழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலை அமைக்கும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வருகின்றன. மொத்தம் 277.3 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைய உள்ள இந்த சாலைப்பணிகளுக்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.   சேலம் மாவட்டம் அரியானூரில் தொடங்கி காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் இந்த சாலை முடிகிறது. இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம...
கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: சுவாதியை அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சி! சிபிசிஐடி போலீசார் உற்சாகம்!! #Gokulraj #day6

கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்: சுவாதியை அடையாளம் காட்டிய அரசுத்தரப்பு சாட்சி! சிபிசிஐடி போலீசார் உற்சாகம்!! #Gokulraj #day6

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
பொறியியல் பட்டதாரி இளைஞர் கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியான கார்த்திக்ராஜா, சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பது சுவாதியும், கோகுல்ராஜூம்தான் என்று நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியிருக்கிறார். இதனால் அரசுத்தரப்பினருக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.   பொறியியல் பட்டதாரி:   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் மனைவி சித்ரா. கணவர், பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். ஏழை கூலித் தொழிலாளியான சித்ராவுக்கு இரண்டு மகன்கள். மூத்தவர், கலைச்செல்வன். இளைய மகன், கோகுல்ராஜ் (23).   திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ., படித்து வந்த கோகுல்ராஜ், 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படிப்பை நிறைவு செய்தார். ஆனாலும், அவ்வப்போது நண்பர்களை பார்க்க கல்லூரி பேருந்தில் சென்று வந்துள்ளார். அப்படித்தான், 23.6.2015ம் தேதியன்றும் ஓமலூரில் இருந்து கல...
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: சுவாதியின் தாயாரும் பல்டி! அரசுத்தரப்பு அதிருப்தி!! #Gokulraj #Day6

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: சுவாதியின் தாயாரும் பல்டி! அரசுத்தரப்பு அதிருப்தி!! #Gokulraj #Day6

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், அரசுத்தரப்பு முக்கிய சாட்சியான சுவாதியைப் போலவே, அவருடைய தாயார் செல்வியும், பிறழ் சாட்சியம் அளித்ததால் அரசுத்தரப்பினர் அதிருப்தி அடைந்தனர்.   தலை துண்டிக்கப்பட்ட நிலையில்..: சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த வெங்கடாசலம் - சித்ரா தம்பதியின் மகன் கோகுல்ராஜ் (23). பொறியியல் பட்டதாரி. திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படிப்பை நிறைவு செய்திருந்தார்.   தன்னுடன் வகுப்பில் ஒன்றாக படித்து வந்த, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள நடந்த கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகள் சுவாதியுடன் நெருங்கிப் பழகி வந்தார் கோகுல்ராஜ். கடந்த 23.6.2015ம் தேதி வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற கோகுல்ராஜ், மறுநாள் 24.6.2015ம் தேதியன்று மாலையில் நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை துண...
பெரியார் பல்கலை: புரமோஷன் வழங்குவதிலும் விதிமீறல்! சிக்கலில் ஆசிரியர்கள்!! #PeriyarUniversity

பெரியார் பல்கலை: புரமோஷன் வழங்குவதிலும் விதிமீறல்! சிக்கலில் ஆசிரியர்கள்!! #PeriyarUniversity

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கேற்ப, பெரியார் பல்கலையில் ஆசிரியர்கள் நியமனத்தில் தொடங்கிய ஊழல் முறைகேடுகள், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதிலும் தொடர்கிறது. இதனால், 22 உதவி / இணை பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.   முட்டுக்கட்டை:   முன்னத்தி ஏர்போல, முன்மாதிரி சமூகமாக விளங்க வேண்டிய சேலம் பெரியார் பல்கலைக்கழகமே, ஊழல் புரையோடிக் கிடப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதனும், முன்னாள் பதிவாளர் அங்கமுத்துவும் சிண்டிகேட் அமைத்து ஆசிரியர் நியமனங்களில் பல கோடி ரூபாய் சுருட்டினர்.   ஊழல் குட்டுகள் வெளிப்படத் தொடங்கிய பின்னர், ஒருவரை ஒருவர் காலை வாரிவிடத் தயாரானபோதுதான், அங்கமுத்து தற்கொலை செய்து கொள்ள நேர்ந்தது. கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகளின் விளைவாக, இப்போதும் பல உதவி, இணை பேராசிரியர்கள் பதவி உய...
எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் எடுக்க இடைக்கால தடை!; உயர்நீதிமன்றம் உத்தரவு!! #EightLaneRoad #GreenFieldExpressWay

எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு நிலம் எடுக்க இடைக்கால தடை!; உயர்நீதிமன்றம் உத்தரவு!! #EightLaneRoad #GreenFieldExpressWay

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த மேலும் இரண்டு வார காலத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 14, 2018) உத்தரவிட்டுள்ளது.   எட்டுவழிச்சாலை   சேலம் - சென்னை இடையே பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முனைப்பு காட்டி வந்தன. இதற்காக மொத்தம் 2343 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்த திட்டமிடப்பட்டு, மே மாதம் முதல் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.   சேலம் மாவட்டம் அரியானூரில் தொடங்கும் எட்டு வழிச்சாலை தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை வரை 277.3 கி.மீ. தூரம் வரை நீள்கிறது. இந்தத் திட்டத்துக்காக எடுக்கப்படும் நிலங்களில் 95 விழுக்காடு சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். ஏற்காடு, கல்வராயன் ம...
சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு புதிய டீன் நியமனம்! அரசு உத்தரவு!!

சேலம் அரசு மருத்துவக்கல்லூரிக்கு புதிய டீன் நியமனம்! அரசு உத்தரவு!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வேலூர்
  சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு புதிய முதல்வராக (டீன்) வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இருதயவியல் துறைத் தலைவர் திருமால் பாபு நியமிக்கப்பட்டு உள்ளார். தமிழகத்தில் சேலம், தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் முதல்வர் (டீன்) பணியிடம் காலியாக இருந்தது. இதையடுத்து அந்த இடங்களில் மூத்த பேராசிரியர்கள் பொறுப்பு முதல்வராக பணியாற்றி வருகின்றனர்.   பதவி உயர்வு:   முதல்வர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்தன. இதற்காக மாநிலம் முழுவதும் அரசு மருத்துவர்களின் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில் 11 பேர், முதல்வர் பதவி உயர்வுக்குரிய பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.   அவர்களில் காலியிடங்கள் மற்றும் மூப்பு அடிப்படையில்...