Thursday, October 30மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

முக்கிய செய்திகள்

எட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த விவசாயிகள்; முதல்வருக்கு மூக்குடைப்பு!

எட்டுவழிச்சாலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த விவசாயிகள்; முதல்வருக்கு மூக்குடைப்பு!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டுவழிச்சாலை திட்டத்துக்கு 11 சதவீதம் பேர்தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வந்த நிலையில், சேலத்தில் கிளர்ந்தெழுந்த விவசாயிகள் இத்திட்டத்துக்கு எதிராக ஆட்சேபனை மனு அளித்து, முதல்வருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்.   பாரத்மாலா பரியோஜனா:   சேலம் முதல் சென்னை வரை 'பாரத்மாலா பரியோஜனா' என்ற பெயரில், எட்டுவழிச்சாலை எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இந்த சாலை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக அமைகிறது. இதற்காக மேற்சொன்ன மாவட்டங்களில் இருந்து மொத்தம் 2343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக கடந்த மே மாதம் நிலம் அளவீடு செய்யச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கடும் தெரிவித்தனர்.   எத...
கோகுல்ராஜ் கொலை வழக்கு: கவுண்டர் பெண்களை தலித் ஆண்கள் காதலிக்க கூடாது என்று யுவராஜ் சொன்னாரா?#Gokulraj #Day13

கோகுல்ராஜ் கொலை வழக்கு: கவுண்டர் பெண்களை தலித் ஆண்கள் காதலிக்க கூடாது என்று யுவராஜ் சொன்னாரா?#Gokulraj #Day13

கரூர், குற்றம், சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் புதன்கிழமையன்று (டிசம்பர் 12, 2018) நடந்த சாட்சிகள் விசாரணையின்போது, அரசுத்தரப்பு சாட்சிகள் அடுத்தடுத்து பிறழ் சாட்சியம் அளித்ததால் சிபிசிஐடி போலீசார் அதிருப்தி அடைந்தனர். சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் கோகுல்ராஜ் (23). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இவர், திருச்செங்கோடு கேஎஸ்ஆர் கல்லூரியில் பி.இ. முடித்திருந்தார். கடந்த 24.6.2015ம் தேதியன்று, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிப்பாளையம் அருகே, ரயில் தண்டவாளத்தில் தலை வேறு, முண்டம் வேறாக கோகுல்ராஜ் சடலம் கைப்பற்றப்பட்டது. போலீசார் விசாரணையில் அவர், ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.   இது தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனத்தலைவர் யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, கார் ஓட்டுநர் அருண், சங்கர் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். ...
எட்டு வழிச்சாலைக்கு எதிராக தற்கொலை போராட்டம்! விவசாயிகளின் பிரம்மாஸ்திரம்!!

எட்டு வழிச்சாலைக்கு எதிராக தற்கொலை போராட்டம்! விவசாயிகளின் பிரம்மாஸ்திரம்!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
  எட்டு வழிச்சாலைக்கு எதிராக தற்கொலை போராட்டத்திற்கும் தயாராகி விட்டதாக விவசாயிகள் போர்ப்பறை முழங்கியுள்ளது, இப்பிரச்னையை மீண்டும் விசுவரூபம் எடுக்க வைத்துள்ளது.   2343 ஹெக்டேர்   சேலம் முதல் சென்னை வரை எட்டு வழிச்சாலையாக பசுமைவழி விரைவுச்சாலை (பாரத்மாலா பரியோஜனா) அமைக்கும் பணிகளை பணிகளை மத்திய, மாநில அரசுகள் முடுக்கி விட்டுள்ளன. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் ஊடாக சென்னை படப்பையில் முடிவடைகிறது இந்த சாலைத்திட்டம். இதற்காக மேற்சொன்னை ஐந்து மாவட்டங்களிலும் 2343 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் அந்தந்த மாவட்ட வருவாய்த்துறை இறங்கியுள்ளது.   ஒரே வாழ்வாதாரம்   இத்திட்டத்துக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களில் பெரும்பகுதி, அதாவது 90 விழுக்காடு நிலமானது ஏழை சிறு, குறு விவசாயிகள் உடையது. அவர்...
உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள்! பட்டமளிப்பு விழாவில் நீதிபதி அறிவுரை!!

உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள்! பட்டமளிப்பு விழாவில் நீதிபதி அறிவுரை!!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  ''உங்களை யாரோடும் ஒப்பிடவோ, யாரைப் போலவும் இருக்க வேண்டும் என்றோ முயற்சிக்க வேண்டாம்; ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்,'' என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ச.ஜெகதீசன் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.   சேலம் பெரியார் பல்கலையில் செவ்வாய்க்கிழமை (நவ. 27, 2018) நடந்த பதினெட்டாவது பட்டமளிப்பு விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.   130 பேருக்கு தங்கப்பதக்கம்: பல்கலை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 130 மாணவ, மாணவிகளுக்கு வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் தங்கப்பதக்கம் வழங்கினார். பல்வேறு துறைகளில் பிஹெச்.டி. ஆய்வை முடித்த 130 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கி, பாராட்டினார்.   பெரியார் பல்கலை மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்கலையில் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 49534 பேருக்கு ...
அங்கமுத்து தற்கொலை… அகலாத மர்மம்… ஆக்ஷன் எடுப்பாரா ஆளுநர்? பெரியார் பல்கலை பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு!

அங்கமுத்து தற்கொலை… அகலாத மர்மம்… ஆக்ஷன் எடுப்பாரா ஆளுநர்? பெரியார் பல்கலை பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலையில் அகலாத மர்ம முடிச்சுகளையும், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல்கள் குறித்தும், பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையே ஏற்பட்டுள்ளது.   பட்டமளிப்பு விழா சேலம் பெரியார் பல்கலையில் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 27, 2018) நடக்கிறது. பல்கலை வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.   அதேநேரம், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல் புகார்கள் மீதும் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பேராசிரியர்கள் மத்தியில் எழாமல் இல்லை.   இது தொடர்பாக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் ஒருவரும், பல்கலை தரப்பில் பேராசிரியர்கள் சிலரும் விரிவாக நம்...
செருப்படி விவகாரம்: பேராசிரியர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை!

செருப்படி விவகாரம்: பேராசிரியர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் பெரியார் பல்கலையில் பேராசிரியர்கள் இருவர் செருப்பால் அடித்துக்கொண்ட விவகாரம் குறித்து, குறிப்பிட்ட பேராசிரியர் மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   இயற்பியல் துறை   சேலம் பெரியார் பல்கலையில் இயற்பியல் துறையில் குமாரதாஸ் என்பவர் முதலில் ரீடர் பணியில் சேர்ந்தார். அவர் பணியில் சேர்ந்த சில மாதங்கள் கழித்து, அன்பரசன் என்பவரும் அதே துறையில் ரீடர் பணியில் நியமிக்கப்பட்டார். ஆனால் அன்பரசன் ஏற்கனவே அரசுக்கல்லூரியில் பணியாற்றிய முன்அனுபவம் இருந்ததால், அவருக்கு முதலில் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த சில மாதங்களில் குமாரதாசும் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார்.   பதவி உயர்வில் சர்ச்சை   இந்நிலையில், இயற்பியல் துறைத்தலைவராக இருந்த கிருஷ்ணகுமார், பெரியார் பல்கலை டீன் பணியில் நியமிக...
சேலத்தில் வன்னியர்களை ஒடுக்கும் எடப்பாடி!; ‘சர்கார்’ வேட்பாளர் தாக்கு!!

சேலத்தில் வன்னியர்களை ஒடுக்கும் எடப்பாடி!; ‘சர்கார்’ வேட்பாளர் தாக்கு!!

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சர்கார் படத்தில் தேனி தொகுதி சுயேட்சை வேட்பாளராக நடித்துள்ள வேங்கை அய்யனார், சேலம் மாவட்டத்தில் வன்னியர்களை ஒடுக்கும் வேலைகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளதாக கூறினார்.   உதவிய வரலட்சுமி:   சேலம் மாவட்டம் மல்லூர் பேரூராட்சியில் சுயேட்சையாக போட்டியிட்டு, தொடர்ந்து நான்கு முறை தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளில் வகித்திருப்பவர் வேங்கை அய்யனார். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த வேங்காம்பட்டி பூவாயம்மன் கோயில் திருவிழாவிற்கு நடிகை வரலட்சுமி சரத்குமாரை சிறப்பு அழைப்பாளராக அழைத்து வந்தார். அப்போது ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் வரலட்சுமியின் பரிந்துரையின்பேரில், அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் நடிக்க இயக்குநர் முருகதாஸிடம் வாய்ப்புப் பெற்றுத்தந்தார். அந்தப்படத்தில், 210 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களை விஜய் களமிறக்கும் காட்சி இடம் பெற்றுள்...
ரஜினியின் ‘2.ஓ’ படத்துக்காக சேலத்தில் மக்கள் மன்ற கூட்டமா?; ரசிகர்கள் சொல்வது என்ன?

ரஜினியின் ‘2.ஓ’ படத்துக்காக சேலத்தில் மக்கள் மன்ற கூட்டமா?; ரசிகர்கள் சொல்வது என்ன?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  ரஜினி, தன் படங்களை ஓட வைப்பதற்காகத்தான் அவ்வப்போது அரசியல் வருகை குறித்த செய்திகளைச் சொல்லி பரபரப்பை கூட்டுகிறார் என்ற சர்ச்சை ஒருபுறம் இருக்க, விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் '2.ஓ' படத்துக்கான டிக்கெட் விற்பனையை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்படும் என்று சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   ரஜினி மக்கள் மன்றம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அவரின் ரசிகர் மன்றங்களுக்கு, ஒரே நாளில் 'ரஜினி மக்கள் மன்றம்' என்ற புதிய நாமகரணம் சூட்டப்பட்டது. ரஜினி மக்கள் மன்றத்தின் சேலம் மாவட்ட செயலாளராக செந்தில்குமாரை கடந்த அக். 23ம் தேதி நியமித்து ரஜினிகாந்த் அறிவித்தார்.   அதிமுக முன்னாள் எம்எல்ஏ அர்ஜூனன் மகன் என்ற அடையாளம் மட்டுமின்றி, இடையில் சில ஆண்டுகள் தேமுதிக கட்சியிலும் களமாடியவர் என்பதால் அரசியல் செயல்ப...
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: கர்ஜித்த நீதிபதி…! பம்மிய வழக்கறிஞர்கள்!! #Gokulraj #Day11

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: கர்ஜித்த நீதிபதி…! பம்மிய வழக்கறிஞர்கள்!! #Gokulraj #Day11

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணையின்போது, எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் அடிக்கடி குறுக்கீடு செய்ததால் நீதிபதி அவர்களை பலமுறை கடுமையாக எச்சரித்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த எதிர்தரப்பினர், குறுக்கு விசாரணை நடத்தாமல் வாய்தா வாங்கினர். தண்டவாளத்தில் சடலம்   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் சித்ரா. ஏழைக்கூலித்தொழிலாளி. இவருடைய இளைய மகன் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ. படிப்பை நிறைவு செய்திருந்தார்.   கடந்த 23.6.2015ம் தேதியன்று தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த தோழி சுவாதியை பார்க்கச் சென்றார். அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் (24.6.2015) மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே காவேரி ஆர்எஸ் - ஆனங்கூர் இடையே ரயில் தண...
கருவை சிதைத்து… முடியை மழித்து… காதல் தம்பதி கொடூர ஆணவக்கொலை! அடங்காத சாதித்திமிர்!!

கருவை சிதைத்து… முடியை மழித்து… காதல் தம்பதி கொடூர ஆணவக்கொலை! அடங்காத சாதித்திமிர்!!

கிருஷ்ணகிரி, குற்றம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இளைஞனை கைப்பிடித்த ஒரே குற்றத்திற்காக பெற்ற மகளென்றும் பாராமல் இளம்பெண்ணின் தலைமுடியை மழித்தும், வயிற்றில் வளர்ந்த ஒன்றரை மாத கருவை உருக்குலைத்தும், அரிவாளால் வெட்டியும் ஓசூர் அருகே கொடூரமாக அரங்கேறி இருக்கிறது சாதி ஆணவக்கொலை.   காவிரி ஆற்றில் சடலம்   கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம், சிவனசமுத்திரம் நீர்வீழ்ச்சி அருகே உள்ள காவிரி ஆற்றில் ஒரு வாலிபரின் சடலமும், இளம்பெண் சடலமும் வெள்ளியன்று (நவம்பர் 16, 2018) மிதந்து வந்தது. சடலங்களின் முகங்கள் சிதைக்கப்பட்டு இருந்தன. உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்களும் கிடந்தன. சடலங்களின் கை, கால்கள் வயரால் கட்டப்பட்டிருந்தன.   இதுகுறித்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் பெலகவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் போலீசார் சடலங்களைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலமாகக் கிடந்த வாலிபர், ...