Monday, October 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

சேலம்: நீட் தேர்வில் மஹாதர்ஷினி மாவட்ட அளவில் முதலிடம்!

சேலம்: நீட் தேர்வில் மஹாதர்ஷினி மாவட்ட அளவில் முதலிடம்!

கல்வி, சேலம், முக்கிய செய்திகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு எனப்படும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். மதிப்பெண், இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் மருத்துவப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நீட் தேர்வு நடந்தது. ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் மே 20ல் தேர்வு நடந்தது. இத்தேர்வு முடிவுகள் ஜூன் 5ல் வெளியாகின.   இத்தேர்வில், சேலம் அழகாபுரம்புதூர் ராஜாராம் நகரைச் சேர்ந்த மஹாநேருராஜ் - ராதிகா தம்பதியின் மகள் மஹாதர்ஷினி 596 மதிப்பெண்கள் பெற்று, சேலம் மாவட்ட அளவில், முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்2 முடித்த மஹாதர்ஷினி, கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் 235 மதிப்பெண்கள் பெற்றார். ஆனாலும், மருத்துவர் கன...
அரசு டாக்டர்கள் 10 பேருக்கு எம்.எஸ். பதவி உயர்வு! பீலா ராஜேஷ் உத்தரவு!!

அரசு டாக்டர்கள் 10 பேருக்கு எம்.எஸ். பதவி உயர்வு! பீலா ராஜேஷ் உத்தரவு!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் பேராசிரியர் நிலையிலான மூத்த மருத்துவர்கள் பத்து பேருக்கு, மருத்துவமனைக் கண்காணிப்பாளராக (எம்.எஸ்.) பதவி உயர்வு வழங்கி, சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் வெள்ளிக்கிழமை (ஜூன் 14, 2019) உத்தரவு பிறப்பித்துள்ளார்.   முன்னதாக, மருத்துவக் கண்காணிப்பாளராக (Medical Superintendent) பணியாற்ற விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மாநிலம் முழுவதும் 20 மூத்த மருத்துவர்கள் கண்காணிப்பாளராக பணியாற்ற இசைவு தெரிவித்து விண்ணப்பம் அளித்திருந்தனர். அவர்களில் பணிமூப்பு, நிர்வாகப் பணிகளில் முன் அனுபவம் உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் பத்து பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. பதவி உயர்வு பெற்றவர்களில் மூன்று பேர் மயக்க மருந்தியல் துறையைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களில் இருவர் கண் மருத்துவத்துறையையும், இருவர்...
சேலம் சிஇஓ மாற்றப்பட்டது ஏன்? பரபரப்பு பின்னணி தகவல்கள்!!

சேலம் சிஇஓ மாற்றப்பட்டது ஏன்? பரபரப்பு பின்னணி தகவல்கள்!!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
அதிமுக ஆட்சியில் நேர்மையான அரசு ஊழியர்கள் தொடர்ந்து பந்தாடப்பட்டு வருவது, உயர் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தி உள்ளது.   தமிழகத்தைப் பொருத்தவரை அதிமுக ஆட்சியின்போது அடிக்கடி அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவதும், ஐஏஎஸ், ஐபிஎஸ், மாவட்ட அளவிலான அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்படுவதும் மிகச்சாதாரணமான ஒன்றுதான். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அமைச்சரவையில் பெரிதாக மாற்றங்கள் நிகழாவிட்டாலும், நேர்மையான அதிகாரிகளை இடமாறுதல் செய்வது, காத்திருப்போர் பட்டியலில் வைப்பது, தகுதிக்குறைப்பு செய்வது போன்ற துக்ளக் தர்பார் காட்சிகள் இப்போதும் தொடர்கிறது. ஊழல் கறை படியாதவர்கள் மற்றும் திறமையானவர்கள் என்று பெயரெடுத்த ஐஏஎஸ் அதிகாரிகள் சகாயம், உதயச்சந்திரன், ஐபிஎஸ் அதிகாரி பொன்.மாணிக்கவேல் முதல் சில நாள்களுக்கு முன் இடமாறுதல் செய்யப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சி...
நீட் தேர்வு-2019 முடிவுகள் வெளியீடு! தமிழக மாணவர்கள் அபாரம்!!

நீட் தேர்வு-2019 முடிவுகள் வெளியீடு! தமிழக மாணவர்கள் அபாரம்!!

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று (ஜூன் 5, 2019) வெளியாகின. நாடு முழுவதும் 56.49 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.   இளங்கலை மருத்துவப்படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகியவற்றில் சேர்ந்து பயில தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு எனப்படும் நீட் தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம். நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நீட் தேர்வு நடந்தது. ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் மே 20ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வின் முடிவுகளை, தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நேற்று (ஜூன் 5, 2019) மாலை அதனுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் 14 லட்சத்து 10755 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில், அவர்களில் 7 லட்சத்து 97042 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்...
சேலம்: இலங்கை அகதி முகாம் சிறுமியின் வாழ்வில் ஒளியேற்றிய ஆட்சியர் ரோகிணி!

சேலம்: இலங்கை அகதி முகாம் சிறுமியின் வாழ்வில் ஒளியேற்றிய ஆட்சியர் ரோகிணி!

சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள குறுக்குப்பட்டியில் இலங்கை அகதிகளுக்கான குடியிருப்பு உள்ளது. அந்த முகாமைச் சேர்ந்த மோதிலால், அடிப்படையில் ஒரு சிற்பி. கோயில்களில் கடவுள் சிலைகளை செதுக்கி வருகிறார். என்னதான் கலை நயத்துடன் சிலை வடித்தாலும், கிடைப்பது சொற்ப கூலிதான். இவருடைய மகள் வழி பேத்தி காவினியா (13); பேரன் ரனுஷன் (14). இருவரையும் மோதிலாலும் அவருடைய மனைவி பரமேஸ்வரியும்தான் பராமரித்து வருகின்றனர்.   இந்த குழந்தைகளின் அப்பா திருமுருகன், பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. கிடைக்கின்ற கூலியை டாஸ்மாக்கிடம் கொடுத்துவிட, அதனால் மனைவி புவனேஸ்வரியுடன் அடிக்கடி தகராறு மூள, விரக்தி அடைந்த புவனேஸ்வரி குழந்தைகளை தவிக்கவிட்டு தீக்குளித்து இறந்து போனார். 2007ல் நடந்த இந்த சம்பவத்திற்கு பிறகு, குழந்தைகளை சிற்பி மோதிலால்தான் படிக்க வைத்து வருகிறார்.   சிறுமி காவினியா, தாரமங்கலத்தில் உள்ள...
”ராகதேவனுக்கு ஓவியங்களால் ஒரு காணிக்கை!” சேலம் ரசிகனின் வித்தியாச முயற்சி!!

”ராகதேவனுக்கு ஓவியங்களால் ஒரு காணிக்கை!” சேலம் ரசிகனின் வித்தியாச முயற்சி!!

சினிமா, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
(ரசிகன் பக்கம்)     இளையராஜா...   இந்த ஒற்றைப்பெயர் தமிழகத்தின் பட்டித்தொட்டி எங்குமுள்ள திரையிசை ரசிகனை மீள் உருவாக்கம் செய்த மந்திரம் என்றால் மிகையாகாது. உலக சினிமா வரலாற்றிலேயே முதன்முதலில் கதாநாயக பிம்பத்தை உடைத்து, 'இசையமைப்பாளர் இளையராஜா' என்றாலே படம் பார்க்க போகலாம் என்ற நிலையை உருவாக்கிய பெருமை, ராகதேவனையே சேரும்.   மாட்டு வண்டி போகாத பாதையில் எல்லாம்கூட ராஜாவின் பாட்டு வண்டி போய்ச்சேர்ந்தது நிகழ்கால நிதர்சனம். 'வாங்கடா வந்தனம் பண்ணுங்கடா... வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா...' என்று அவருக்கு முன்பு இருந்த இசை ஜாம்பவான்களையும், அவருக்குப் பின்னால் வந்த இசைக்கலைஞர்களையும் 'ஓரம்போ... ஓரம்போ...' என்று ஓரங்கட்டிவிட்டு, உச்சாணிக்கொம்பில் வீற்றிருக்கும் ஒரே இசைக்கலைஞன் இளையராஜா.   அவருக்கு தமிழ்த்திரையுலகம் மட்டுமின்றி உலகெங்கும் ரசிக பட்டாளங்கள் இ...
சொந்த மண்ணில் எடப்பாடி வீழ்ந்தது ஏன்? காலை வாரிய பாமக, தேமுதிக! கைவிட்ட வெற்றி விநாயகர்!!

சொந்த மண்ணில் எடப்பாடி வீழ்ந்தது ஏன்? காலை வாரிய பாமக, தேமுதிக! கைவிட்ட வெற்றி விநாயகர்!!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆளுங்கட்சியின் மீதான வெறுப்பு, பாஜகவுக்கு எதிரான மக்களின் மனநிலை மட்டுமின்றி, பெரிதும் நம்பிக்கொண்டிருந்த கூட்டணி கட்சிகளே சொந்த மண்ணில் எடப்பாடியை திட்டமிட்டு வீழ்த்தி இருப்பது தெரிய வந்துள்ளது.   பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வராக அமர்த்தப்பட்டது ஒரு விபத்து என்றாலும், அதன் பிறகு அவரின் ஒட்டுமொத்த கவனமும் கொங்கு மண்டலத்தின் மீதே குவிந்து இருந்தது. மக்களவைக்கு மட்டுமல்ல; ஒருவேளை சட்டப்பேரவை தேர்தல் வந்தாலும் கொங்கு மண்டலத்தில் தனது செல்வாக்கை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் நோக்கிலேயே மாதத்தில் இருமுறையாவது அவர் தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு வந்து விடுவார். நீரா பானம், அத்திக்கடவு அவினாசி திட்டங்கள் கொண்டு வந்ததும்கூட, அவர் சார்ந்த சமூகத்தினரின் வாக்குகளை குறிவைத்துதான். ஆனால், இந்த மக்களவை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் க...
கிடப்பில் போடப்பட்ட ‘காக்கி கருப்பு ஆடுகள்’ வழக்கு? கள்ள மவுனம் சாதிக்கும் சேலம் காவல்துறை!

கிடப்பில் போடப்பட்ட ‘காக்கி கருப்பு ஆடுகள்’ வழக்கு? கள்ள மவுனம் சாதிக்கும் சேலம் காவல்துறை!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆத்தூரில், காவல் ஆய்வாளரின் மிரட்டலால் நிதி நிறுவன அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த காக்கி துறைக்கும் அவப்பெயரை உண்டாக்கி இருக்கிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பில் இந்த வழக்கை கிடப்பில் போட்டதால், நிதி நிறுவன அதிபரை பறிகொடுத்த குடும்பம் கடும் அதிருப்தியில் உள்ளது.   சேலம் மாவட்டம் ஆத்தூர் வினாயகபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்த திமுக பிரமுகர் பிரேம்குமார் (49), தன் தம்பி செந்தில்குமாருடன் சேர்ந்து சொந்த ஊரில் தனலட்சுமி ஃபைனான்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். மே 14ம் தேதி, திடீரென்று அவர் வீட்டில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்து கிடந்தார். என்னமோ ஏதோ என்று பதற்றம் அடைந்த மனைவியும், இரு மகன்களும் பிரேம்குமாரை தூக்கிச்சென்று தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மறுநாள் காலையில் (மே 15) சிகிச்சை பலனின்றி பிரேம்குமா...
மக்களவை தேர்தல்: சேலத்தில் திமுக வரலாற்று வெற்றி! எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. ஆனார்!!

மக்களவை தேர்தல்: சேலத்தில் திமுக வரலாற்று வெற்றி! எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி. ஆனார்!!

அரசியல், சேலம், முக்கிய செய்திகள்
மக்களவை தேர்தலில், 39 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் தொகுதியை வசப்படுத்தி, வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது, திமுக. அக்கட்சியின் வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் அமோக வெற்றி பெற்று, எம்.பி. ஆகியுள்ளார்.   தமிழகத்தில் மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் திமுக சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபன், ஆளும் அதிமுக தரப்பில் கே.ஆர்.எஸ். சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் மட்டுமின்றி, டிடிவி தினகரனின் அமமுக தரப்பில் எஸ்.கே.செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் பிரபு மணிகண்டன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராசா அம்மையப்பன் உள்ளிட்ட 22 பேர் போட்டியிட்டனர். ஏற்கனவே கடந்த 2009, 2014 ஆகிய இரு மக்களவை தேர்தல்களிலும் சேலம் தொகுதியை அதிமுகவே கைப்பற்றி இருந்தது. அத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், எப்படியும் இந்த தேர்தலிலும் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற...
தர்மபுரி: காட்டுக்குள் வந்தால் கபளீகரம்! காதலர்களுடன் வரும் இளம்பெண்களுக்கு குறி! துப்பாக்கிக்கு இரையான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள்

தர்மபுரி: காட்டுக்குள் வந்தால் கபளீகரம்! காதலர்களுடன் வரும் இளம்பெண்களுக்கு குறி! துப்பாக்கிக்கு இரையான சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள்

குற்றம், தமிழ்நாடு, தர்மபுரி, முக்கிய செய்திகள்
  ஒகேனக்கல் அருகே காட்டுப்பகுதிக்குள் காதலனுடன் ஒதுங்கிய இளம்பெண்ணை சீரழிக்க முயன்றபோது ஏற்பட்ட தகராறில் காதலனை கருணையே இல்லாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இருந்து நான்கு கி.மீ. தொலைவில் பண்ணப்பட்டி பிரிவு சாலையில் ஒரு காப்புக்காடு இருக்கிறது. இந்தக் காட்டுப்பகுதிக்குள் அந்நியர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது. என்றாலும், ஒகேனக்கல்லுக்கு ஜோடியாக சுற்றுலா வரும் இளசுகள், இந்த காட்டுப்பகுதியில் ஒதுங்குவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆளரவமற்ற பகுதி என்பதால், எது நடந்தாலும் வெளி உலகுக்குத் தெரியாது. இந்நிலையில், கடந்த மே 1ம் தேதியன்று, தொப்பூர் அருகே உள்ள ஜருகு குரும்பட்டியான் கொட்டாயைச் சேர்ந்த பாலு மகன் முனுசாமி (25), தனது அக்காள் மகள் ரஞ்சனி (வயது 16, பெயர் மாற்றப்பட்டுள்ளது) உடன் ஒ...