Monday, October 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Author: புதிய அகராதி

பச்சையப்பாத்திரம் – கவிதை நூல் விமர்சனம்!

பச்சையப்பாத்திரம் – கவிதை நூல் விமர்சனம்!

இலக்கியம், சேலம், புத்தகம், முக்கிய செய்திகள்
(பூவனம்)   சேலம் மோகன் நகரைச் சேர்ந்த தோழர் சுகபாலாவின் இரண்டாவது படைப்பு, 'பச்சையப்பாத்திரம்'. அள்ள அள்ளக்குறையாத அட்சயப்பாத்திரம் பற்றியே முழுமையாக அறிந்திடாத நம்மவர்க்கு, பச்சையப்பாத்திரம் சொல்லை உருவாக்கி தமிழ்மொழிக்கு கொடையளித்திருக்கிறார். இந்தச் சொல்லை உருவாக்கியதற்காகவே அவரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. இந்த நூலின் பாடுபொருள் மரம்தான். அதனூடாக காதல், மனிதர்களின் மனப்பிறழ்வு, உழைக்கும் வர்க்கத்தின் மீதான சுரண்டல், மானுட குலத்திற்கே உரிய முரண்கள் என பல கிளைகளாக கவிதைகள் விரிகின்றன. தோழரே மரமாகிறார். சிறு புல்லாகிறார். குழந்தையாகிறார். அவரே, புத்தனாகவும் மாற முயற்சிக்கிறார். வண்ணத்துப்பூச்சியை பிடித்து, பறக்கவிட்ட பிறகும் அதன் வண்ணங்கள் நம் விரல்களில் ஒட்டிக்கொண்டிருக்குமே அப்படித்தான், பச்சையப்பாத்திரம் நூலை வாசித்த பின்னரும் அதன் தாக்கம் மனதினுள் அப்பிக்கொண்டு வி...
தொரட்டி: சினிமா விமர்சனம்! ‘ஆட்டுக்கிடை போடும் கீதாரிகளின் வாழ்வியலையும் காதலையும் பேசுகிறது!!’

தொரட்டி: சினிமா விமர்சனம்! ‘ஆட்டுக்கிடை போடும் கீதாரிகளின் வாழ்வியலையும் காதலையும் பேசுகிறது!!’

சினிமா, முக்கிய செய்திகள்
தமிழ்த்திரைப்பட வரலாற்றில் இதுவரை சொல்லப்படாத ஒரு வர்க்கத்தினரின் வாழ்வியலும், அவர்களின் காதலையும் மண் மணத்துடன் சுமந்து வந்திருக்கிறது, 'தொரட்டி'.   கிராமங்களில் வழமையான சொல்வழக்கு ஒன்று உண்டு. நற்குடியில் பிறந்த ஒருவர் திடீரென்று தீய வழியில் சென்று சீரழிகையில், 'அவன் என்ன பண்ணுவான் பாவம்....சேருவரிசை சரியில்ல...' என்பார்கள். அப்படி கூடா நட்பால் கேடாய் முடிந்த இளைஞனை விரும்பி மணக்கும் அவனுடைய மனைவி, கணவனை திருத்த முயற்சிக்கிறாள். அவன் திருந்தினானா? எப்படியும் திருத்திவிடலாம் என நம்பி வந்த அவளுக்கு நேர்ந்தது என்ன? கணவனின் சேக்காலிகளுக்கு என்ன நடந்தது? என்பதை காதல், நட்பு, துரோகம், வன்மம் கலந்து, கிராமிய அழகியலுடன் பேசுகிறது, தொரட்டி. ராமநாதபுரம் மாவட்டம்தான் கதைக்களம். 1980களில் கதை நகர்கிறது. அறுவடை முடிந்த பிறகு விவசாய நிலத்தில் ஆட்டுக்கிடை போடும் பழக்கம், நெல்லை, ராமநாதப...
பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு 36200 ரூபாய் ஸ்காலர்ஷிப்!

பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு 36200 ரூபாய் ஸ்காலர்ஷிப்!

கல்வி, தகவல், முக்கிய செய்திகள்
(தகவல்)   யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக  மானியக்குழு, நடப்புக் கல்வி ஆண்டில் (2019-2020) முதுநிலை படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு பிரத்யேகமாக இந்திராகாந்தி ஸ்காலர்ஷிப் திட்டத்தை அறிவித்துள்ளது.   இந்திராகாந்தி ஸ்காலர்ஷிப்: பெண் கல்வி மற்றும் சிறு குடும்ப கொள்கையை ஊக்குவிக்கும் வகையில் வீட்டில் ஒற்றை பெண் குழந்தையாக பிறந்து, பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்காக ஆண்டுதோறும் இந்திராகாந்தி ஸ்காலர்ஷிப் திட்டத்தை யுஜிசி செயல்படுத்தி வருகிறது. நடப்புக் கல்வி ஆண்டில், பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழங்களில் முதலாமாண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவிகள், இந்த உதவித்தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம்.   இந்த திட்டத்தில் பயனடைய ஒரு முக்கிய நிபந்தனை உண்டு. பெற்றோருக்கு ஒரே மகளாக ப...
தேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி! கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!!

தேவதாசி முறை ஒழிப்பு போராளி முத்துலட்சுமி ரெட்டி! கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!!

சிறப்பு கட்டுரைகள், புதுக்கோட்டை, முக்கிய செய்திகள்
காலம் காலமாக சனாதன சடங்குகளின் பெயராலும், மூடநம்பிக்கைகளாலும் விலங்கிடப்பட்டு, இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பெண் குலத்தில் இருந்து தீக்குழம்பாய் பீறிட்டு வந்தவர் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி.   ஆண்கள் மட்டுமே நிறைந்திருந்த எல்லா அவைகளிலும் நுழைந்து தன்னை நிரூபித்து, மற்ற பெண்களுக்கும் இன்றளவும் நிரந்தர முன்மாதிரியாக நிலைத்துவிட்டவர், மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி. காலத்தை விஞ்சிய அவருடைய சாதனைகளுள் குறிப்பிடத்தக்க ஒன்று, தேவதாசி முறை ஒழிப்பைச் சொல்லலாம். இன்று அவருடைய 133வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு கூகுள் நிறுவனம் 'டூடுல்' வெளியிட்டு கவுரப்படுத்தி இருக்கிறது. மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியின் நினைவாக மகப்பேறு நிதியுதவித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இன்னும் ஒருபடி மேலே சென்று, அவருடைய பிறந்த நாளை, 'மருத்துவமனை தினமாக' கொண்டாடப்படும்...
எங்கள் உயிர்களை தியாகம் செய்தாவது 8 வழிச்சாலை திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம்! சேலம் கூட்டத்தில் விவசாயிகள் சபதம்!!

எங்கள் உயிர்களை தியாகம் செய்தாவது 8 வழிச்சாலை திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம்! சேலம் கூட்டத்தில் விவசாயிகள் சபதம்!!

காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
எட்டுவழிச்சாலைத் திட்டம் வந்தால் இந்த மண்ணும், மனிதர்களும் அழிந்துபோவார்கள் என்பதால், இன்னும் எத்தனை உயிர்களை தியாகம் செய்தாவது இந்த திட்டத்தை ஓட ஓட விரட்டி அடிப்போம் என்று விவசாயிகள் சபதம் எடுத்துள்ளனர். பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ், சேலம் - சென்னை இடையே எட்டுவழிச்சாலைத்திட்டம் எனப்படும் பசுமைவழி விரைவுச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்திக் கொடுக்கும் பொறுப்பு, மாநில அரசுக்கானது. மொத்தம் 277.3 கி.மீ. தூரம் அமைக்கப்பட உள்ள இந்த சாலைக்காக 2343 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இத்திட்டம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வழியாக அமைக்கப்படுகிறது. இதற்காக கையகப்படுத்தப்படும் நிலத்தின் பெரும்பகுதி, சிறு, குறு விவசாயிகளுக்குச் சொந்தமான விளை நிலங்கள் ஆகும். இ...
சேலம்: அம்மா உணவகமாக மாற இருந்த அரசுப்பள்ளியை மீட்டெடுத்த ஆசிரியை!

சேலம்: அம்மா உணவகமாக மாற இருந்த அரசுப்பள்ளியை மீட்டெடுத்த ஆசிரியை!

கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
இருத்தலுக்கும் இல்லாமைக்குமான வேறுபாடு நூலிழை அளவே என்பதே இயற்கைக் கோட்பாடு. கொஞ்சம் அசந்து இருந்தாலும் இந்நேரம் அம்மா உணவகமாக மாறி இருக்க வேண்டிய ஓர் அரசுப்பள்ளியை மீட்டெடுத்து, இன்று முந்நூருக்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கும் பள்ளியாக உயர்த்திக் காட்டியிருக்கிறார் பெண் தலைமை ஆசிரியர். சேலம் அம்மாபேட்டை பசுபலகுருநாதன் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளிதான், தலைமை ஆசிரியரின் முயற்சியால் மீண்டும் புதிய பரிணாமம் பெற்றிருக்கிறது. அத்தகைய அளப்பரிய உழைப்பிற்குச் சொந்தக்காரர், கார்த்திகேயனி (50). அப்பள்ளியின் தலைமை ஆசிரியர். நாம் அந்தப்பள்ளியில் தொடர்ச்சியாக இரு நாள்கள் பார்வையிட்டோம். ஒவ்வொரு வகுப்பறையிலும் நுழைந்து பார்த்தோம். அவை குழந்தைகள் அமர இடமின்றி பிதுங்கி வழிந்தன. அந்தளவுக்கு மாணவர் சேர்க்கை அபரிமிதமாக இருந்தது.   கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன், இதே பள்ளிதான் கடை...
28 நாள் வனவாசம்: சேலம் சிஇஓ கணேஷ்மூர்த்திக்கு மீண்டும் அழைப்பு!

28 நாள் வனவாசம்: சேலம் சிஇஓ கணேஷ்மூர்த்திக்கு மீண்டும் அழைப்பு!

கல்வி, சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கணேஷ்மூர்த்தி திடீரென்று காத்திருப்போர் பட்டியலுக்கு தூக்கியடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவரை அதே பணியிடத்திற்கு அமர்த்தி இருக்கிறது தமிழக பள்ளிக்கல்வித்துறை. கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக (சிஇஓ) பணியாற்றி வந்த கணேஷ்மூர்த்தி (36), கடந்த ஆண்டு ஜூலை மாதம் சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். போட்டித்தேர்வு மூலம் நேரடியாக கல்வி அலுவலர் பணியில் சேர்ந்த இவர், சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றதில் இருந்தே, அதுவரையிலும் கல்வி அலுவலகத்தையே சுற்றி வரும் காக்கா கூட்டங்களில் இருந்து காத தூரம் விலகியே இருந்தார்.   குறிப்பாக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள், அரசியல் புள்ளிகள் கொண்டு வரும் சிபாரிசுகளை தயவு தாட்சண்யமின்றி புறந்தள்ளினார். அதேநேரம், தகுதி இருக்கும் பட்சத்தில் அதன்மீது உடனுக்குடன் வி...
ஜீவி: சினிமா விமர்சனம்!; ‘சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்?’

ஜீவி: சினிமா விமர்சனம்!; ‘சோத்துக்காக கஷ்டப்படறவனையும் கடவுள் பார்த்துட்டுதானே இருக்கான்?’

சினிமா, முக்கிய செய்திகள்
தமிழ் சினிமா உலகில், இந்த ஆண்டின் அண்மைய வரவுகளில் 'சூப்பர் டீலக்ஸ்', 'தடம்' ஆகிய படங்களுக்குப் பிறகு, ஆகச்சிறந்த படைப்பாக ஜீவி படத்தைச் சொல்லலாம். புதுமுக இயக்குநர் வி.ஜே.கோபிநாத், கதை - திரைக்கதை - வசனகர்த்தா பாபு தமிழ் ஆகியோர் நம்பிக்கைக்குரிய வரவாக, அறிவார்த்தமாக ஜீவியில் பதிவு செய்திருக்கின்றனர். மிக வலுவான திரைக்கதை கட்டுமானத்துடன் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற '8 தோட்டாக்கள்' குழுவின், இரண்டாவது படைப்புதான் ஜீவி.   திரைக்கலைஞர்கள்:   நடிகர்கள்: வெற்றி கருணாகரன் மோனிகா சின்னகோட்ளா ரோகிணி, ரமா, 'மைம்' கோபி   இசை: சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு: பிரவீன்குமார் எடிட்டிங்: பிரவீன் கே.எல். கதை, வசனம்: பாபு தமிழ் திரைக்கதை: பாபு தமி-ழ், வி.ஜே.கோபிநாத் இயக்கம்: வி.ஜே.கோபிநாத்   கதை என்ன?:   ...
த்தூ…! ஊடகங்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

த்தூ…! ஊடகங்களை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 23) செய்தி தொலைக்காட்சிகளை பார்த்தவர்களுக்கு நிரம்பவவே ஆயாச உணர்வை ஏற்படுத்தி இருக்கும். 'இந்த சினிமாகாரனுங்கதான் பொறந்தானுங்களா இந்தியாவுல? நாம்மலாம் தேவையில்லாம அனாவசியமா பொறந்துட்டமா...?' என்று கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி, சினிமா நடிகர்களைப் பற்றி, அவர் பாணியில் கிண்டலடித்து இருப்பார். ஜூன் 23 அன்று நடிகர் சங்க தேர்தல் செய்திகளை, 'காலை அரும்பி பகலெல்லாம் போதாகி' கணக்காக நேரலை செய்து, மக்களின் கோபத்திற்கு கிட்டத்தட்ட எல்லா தமிழ் செய்தி தொலைக்காட்சிகளுமே ஆளாகி இருந்தன. வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரம், தவித்த வாய்க்கு ஒரு மிடறு தண்ணீர்கூட தர இயலாத நிலையில் இருப்பதுதான், நிகழ்காலத் துயரம். கையில் குடங்களுடன் குழாயடிகளில் மைல் நீள வரிசையில் கொதிக்கும் வெயிலில் காத்திருக்கும் தமிழக தாய்மார்கள் ஒருபுறம்; அதேநேரம், டாஸ்மாக் கடைகளில் க...
ஆசிரியர்களுக்கு டீ, பிஸ்கட், மதிய உணவு ‘கட்’; வேணும்னா சொந்த செலவுல பண்ணிக்குங்க!!

ஆசிரியர்களுக்கு டீ, பிஸ்கட், மதிய உணவு ‘கட்’; வேணும்னா சொந்த செலவுல பண்ணிக்குங்க!!

கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'யானை வாங்கியும் அங்குசம் வாங்க காசில்லை' என்ற கதையாக, ஆசிரியர்களை உலகத்தரத்திற்கு உயர்த்தும் அரசின் நோக்கம் ஒருபுறம் இருந்தாலும், தேநீர், பிஸ்கட், மதிய உணவு போன்ற சலுகைகளை திடீரென்று நிறுத்தியது ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்தினரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.   அரசு துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு முன்பு அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் சார்பில் பிரிட்டிஷ் கவுன்சில் மூலமாக ஆங்கில பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. கடந்த கல்வி ஆண்டு முதல், அனைவருக்கும் கல்வித் திட்டமானது, 'அனைவருக்குமான ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் (சமக்ர சிக்ஷா) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் இந்தாண்டு, அரசுப்பள்ளிகளில் முதலாம் வகுப்பு ஆங்கிலப்பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு ஆங்கில எழுத்துகள், சொற்களின் ஒலிப்பு முறைகள் குறித்து சிறப்பு பய...