Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: salem

சேலம் அரசு மருத்துவமனைக்கு புதிய முதல்வர் வந்தாச்சு!

சேலம் அரசு மருத்துவமனைக்கு புதிய முதல்வர் வந்தாச்சு!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய முதல்வராக இருதயவியல் துறை மருத்துவர் திருமால்பாபு (55) இன்று (ஜனவரி 29, 2019) பொறுப்பேற்றுக் கொண்டார்.   சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக பணியாற்றி வந்த கனகராஜ், கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, ஜூலை 5, 2018ம் தேதி, பிளாஸ்டிக் சர்ஜரி துறை மூத்த மருத்துவர் எம்.கே.ராஜேந்திரன் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்றார்.   சேலம் மட்டுமின்றி, முதல்வர் பணியிடம் காலியாக இருந்த தஞ்சாவூர், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கும் புதிதாக முழுநேர முதல்வர்களை நியமித்து, தமிழக அரசு கடந்த ஆண்டு செப். 12ம் தேதி உத்தரவிட்டது. அப்போது, சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வ
பேராசிரியரை தாக்கியதாக பெரியார் பல்கலை மாஜி துணைவேந்தர், பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு!

பேராசிரியரை தாக்கியதாக பெரியார் பல்கலை மாஜி துணைவேந்தர், பதிவாளர் உள்பட 4 பேர் மீது வழக்கு!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  ஊழல் புகார்களைத் தொடர்ந்து தற்போது உதவி பேராசிரியரை தாக்கியதாக மற்றொரு சர்ச்சையிலும் பெரியார் பல்கலை முன்னாள் துணை வேந்தர், பதிவாளர், டீன் ஆகியோர் சிக்கியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   சேலத்தை அடுத்த சித்தனூர் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் வைத்தியநாதன் (52). இவர் பெரியார் பல்கலையில் பொருளாதார துறையில் உதவி பேராசிரியராக கடந்த 2005ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவர் சேலம் மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதன் சாராம்சம்: கடந்த 29.3.2017ல் திருச்சியில் இருந்து வெளியான தினமலர் நாளிதழில் பெரியார் பல்கலையில் நடந்து வரும் ஊழல் தொடர்பாக ஒரு செய்தி வெளியானது. அந்த செய்தியில், அப்போது துணை வேந்தராக இருந்த சுவாமிநாதன், லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாகவும், பதவி
சேலத்தில் கோயிலில் ரகசிய அறை அமைத்து லஞ்சம் வசூல்: இந்துசமய அறநிலைய அதிகாரி சிக்கினார்!

சேலத்தில் கோயிலில் ரகசிய அறை அமைத்து லஞ்சம் வசூல்: இந்துசமய அறநிலைய அதிகாரி சிக்கினார்!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோயிலில் ரகசிய அறை அமைத்து ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் வாங்கிய இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரை கையும்களவுமாக காவல்துறையினர் பிடித்தனர்.   சேலத்தில் மிகவும் பழமையான சுகவனேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் குடமுழுக்குப் பணிக்காக தற்போது மராமத்துப்பணிகள், திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற பணிகளை இந்துசமய அறநிலையத்துறை ஒப்பந்ததாரர்கள் மூலம் செய்து வருகிறது.   இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஒப்பந்ததாரர்களிடம் இனாம் வழங்குமாறு இந்துசமய அறநிலைய உதவி ஆணையர் தமிழரசு கேட்டுள்ளார். அவ்வாறு இனாம் கொடுத்தால்தான், இனி வரும் காலத்திலும் கோயில் மராமத்துப்பணிகள் ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும் மிரட்டி வந்துள்ளார். லஞ்சப்பணத்தை, சேலம் தேர்வீதியில் உள்ள ராஜகணபதி கோயிலை ஒட்டியுள்ள ரகசிய அறையில் வந்து கொடுக்கும்பட
சேலம்: ஓசியில் கறி கேட்டு முதியவரிடம் வீரம் காட்டிய காக்கிகள்! இடமாற்றத்தால் மன்னிப்பு கேட்டு கெஞ்சல்!!

சேலம்: ஓசியில் கறி கேட்டு முதியவரிடம் வீரம் காட்டிய காக்கிகள்! இடமாற்றத்தால் மன்னிப்பு கேட்டு கெஞ்சல்!!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  சேலத்தில் ஓசியில் இறைச்சி தர மறுத்த முதியவரை ஏக வசனத்தில் பேசியதுடன், அடித்து உதைத்த இரண்டு எஸ்ஐக்கள் அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டனர்.   சேலத்தை அடுத்த கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் மூக்குத்தி கவுண்டர் (75). இவர், சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையம் அருகே கறிக்கடை நடத்தி வருகிறார். நேற்று (ஜனவரி 13) காலை காவல்துறை ஜீப்பில் வந்த அன்னதானப்பட்டி உதவி காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணி, வாகனத்தில் இருந்தபடியே, '2 கிலோ ஆட்டுக்கறி சீக்கிரம் வெட்டுடா....' என அதிகார தொனியில் கேட்டார். ஓரளவு கூட்டம் இருந்த நிலையில், பலர் முன்னிலையில் உதவி ஆய்வாளர் கண்ணியக்குறைவாக கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மூக்குத்தி கவுண்டர், 'ஏங்க உங்க வயசு என்ன... என்னோட வயசு என்ன... கொஞ்சமாவது வயசுக்கு மரியாதை கொடுங்க,' என்று கூறினார்.   இதனால் ஆத்திரம
துணைவேந்தரை ஏமாற்றுகிறதா பிரைடு நிர்வாகம்? குழப்பத்தின் உச்சத்தில் பெரியார் பல்கலை!!

துணைவேந்தரை ஏமாற்றுகிறதா பிரைடு நிர்வாகம்? குழப்பத்தின் உச்சத்தில் பெரியார் பல்கலை!!

கிருஷ்ணகிரி, சென்னை, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, தேர்வுக்கு அனுப்பும் வரை புத்தகங்கள் வழங்கப்படாமல் இருக்கும் விவரமே, நாங்கள் சொல்லித்தான் தெரியும் என்றும், பிரைடு நிர்வாகம் துணை வேந்தரிடம் முக்கிய தகவல்களை மறைப்பதாகவும் படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர்.   பெரியார் பல்கலை சேலம் பெரியார் பல்கலையில் 'பிரைடு' என்ற பெயரில் தொலைநிலைக் கல்வி மையம் இயங்கி வருகிறது. தொலைதூரக் கல்வித் திட்டத்தில் மாணவர்களை சேர்ப்பதற்காக, தமிழகம் முழுவதும் 110 தனியார் படிப்பு மையங்களுக்கு பல்கலை நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.   படிப்பு மையம் மட்டுமின்றி ஆன்லைன் வழியாகவும் மாணவர்கள் நேரடியாக சேரவும் அனுமதிக்கப்படுகிறது. தற்போது தொலைநிலைக் கல்வித்திட்டத்தில் 25 ஆயிரத்தக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.   பாடப்புத்தகங்கள் இது ஒருபுறம் இருக்க
கோஷ்டி பூசல்களால் தடுமாறும் ரஜினி மக்கள் மன்றம்!

கோஷ்டி பூசல்களால் தடுமாறும் ரஜினி மக்கள் மன்றம்!

அரசியல், சேலம், தமிழ்நாடு
ரஜினிகாந்த், 'போர் வரட்டும், அதுவரை காத்திருங்கள்' என்று எதை நினைத்து சொன்னாரோ... ஆனால், சேலத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்குள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கோஷ்டி பூசல் அக்கப்போர்களால் உறுப்பினர் சேர்ப்பு உள்ளிட்ட ஒட்டுமொத்த பணிகளும் அடியோடு முடங்கியுள்ளன.   கோஷ்டி பூசல்   திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற வளர்ந்த கட்சிகளுக்கே உரித்தான கோஷ்டி பூசல்களைக் காட்டிலும், இன்னும் முளை விடவே ஆரம்பிக்காத ரஜினி மக்கள் மன்றத்தில் உள்கட்சி மோதல்கள் உச்சத்தை அடைந்துள்ளன.   கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது உறுதி என்று வெளிப்படையாக அறிவித்தார். அதன்பின்னர், தனது ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றம் என மாற்றினார்.   சலசலப்பு   பாபா முத்திரை, இணையம் வழியாக புதிய உறுப்பினர் சேர்க்கை என அடுத்தடுத்த நகர்வுகளால் வேகமெடுத்தது ரஜினி ம
உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள்! பட்டமளிப்பு விழாவில் நீதிபதி அறிவுரை!!

உங்களை யாரோடும் ஒப்பிடாதீர்கள்! பட்டமளிப்பு விழாவில் நீதிபதி அறிவுரை!!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  ''உங்களை யாரோடும் ஒப்பிடவோ, யாரைப் போலவும் இருக்க வேண்டும் என்றோ முயற்சிக்க வேண்டாம்; ஒவ்வொருவரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்,'' என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ச.ஜெகதீசன் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.   சேலம் பெரியார் பல்கலையில் செவ்வாய்க்கிழமை (நவ. 27, 2018) நடந்த பதினெட்டாவது பட்டமளிப்பு விழாவில் அவர் இவ்வாறு கூறினார்.   130 பேருக்கு தங்கப்பதக்கம்: பல்கலை அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 130 மாணவ, மாணவிகளுக்கு வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் தங்கப்பதக்கம் வழங்கினார். பல்வேறு துறைகளில் பிஹெச்.டி. ஆய்வை முடித்த 130 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கி, பாராட்டினார்.   பெரியார் பல்கலை மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல்கலையில் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 49534 பேருக்கு
அங்கமுத்து தற்கொலை… அகலாத மர்மம்… ஆக்ஷன் எடுப்பாரா ஆளுநர்? பெரியார் பல்கலை பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு!

அங்கமுத்து தற்கொலை… அகலாத மர்மம்… ஆக்ஷன் எடுப்பாரா ஆளுநர்? பெரியார் பல்கலை பேராசிரியர்கள் எதிர்பார்ப்பு!

கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
  பெரியார் பல்கலை முன்னாள் பதிவாளர் அங்கமுத்து தற்கொலையில் அகலாத மர்ம முடிச்சுகளையும், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல்கள் குறித்தும், பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையே ஏற்பட்டுள்ளது.   பட்டமளிப்பு விழா சேலம் பெரியார் பல்கலையில் பதினெட்டாவது பட்டமளிப்பு விழா, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 27, 2018) நடக்கிறது. பல்கலை வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.   அதேநேரம், பல்கலையில் மலிந்து கிடக்கும் ஊழல் புகார்கள் மீதும் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பேராசிரியர்கள் மத்தியில் எழாமல் இல்லை.   இது தொடர்பாக முன்னாள் சிண்டிகேட் உறுப்பினர் ஒருவரும், பல்கலை தரப்பில் பேராசிரியர்கள் சிலரும் விரிவாக நம்
ரஜினியின் ‘2.ஓ’ படத்துக்காக சேலத்தில் மக்கள் மன்ற கூட்டமா?; ரசிகர்கள் சொல்வது என்ன?

ரஜினியின் ‘2.ஓ’ படத்துக்காக சேலத்தில் மக்கள் மன்ற கூட்டமா?; ரசிகர்கள் சொல்வது என்ன?

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
  ரஜினி, தன் படங்களை ஓட வைப்பதற்காகத்தான் அவ்வப்போது அரசியல் வருகை குறித்த செய்திகளைச் சொல்லி பரபரப்பை கூட்டுகிறார் என்ற சர்ச்சை ஒருபுறம் இருக்க, விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் '2.ஓ' படத்துக்கான டிக்கெட் விற்பனையை கண்காணிக்க சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்படும் என்று சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   ரஜினி மக்கள் மன்றம் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததைத் தொடர்ந்து அவரின் ரசிகர் மன்றங்களுக்கு, ஒரே நாளில் 'ரஜினி மக்கள் மன்றம்' என்ற புதிய நாமகரணம் சூட்டப்பட்டது. ரஜினி மக்கள் மன்றத்தின் சேலம் மாவட்ட செயலாளராக செந்தில்குமாரை கடந்த அக். 23ம் தேதி நியமித்து ரஜினிகாந்த் அறிவித்தார்.   அதிமுக முன்னாள் எம்எல்ஏ அர்ஜூனன் மகன் என்ற அடையாளம் மட்டுமின்றி, இடையில் சில ஆண்டுகள் தேமுதிக கட்சியிலும் களமாடியவர் என்பதால் அரசியல் செயல்ப
கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: கர்ஜித்த நீதிபதி…! பம்மிய வழக்கறிஞர்கள்!! #Gokulraj #Day11

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கு: கர்ஜித்த நீதிபதி…! பம்மிய வழக்கறிஞர்கள்!! #Gokulraj #Day11

சேலம், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
  பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணையின்போது, எதிர்தரப்பு வழக்கறிஞர்கள் அடிக்கடி குறுக்கீடு செய்ததால் நீதிபதி அவர்களை பலமுறை கடுமையாக எச்சரித்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த எதிர்தரப்பினர், குறுக்கு விசாரணை நடத்தாமல் வாய்தா வாங்கினர். தண்டவாளத்தில் சடலம்   சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் சித்ரா. ஏழைக்கூலித்தொழிலாளி. இவருடைய இளைய மகன் கோகுல்ராஜ் (23). திருச்செங்கோடு கேஎஸ்ஆர் பொறியியல் கல்லூரியில் பி.இ. படிப்பை நிறைவு செய்திருந்தார்.   கடந்த 23.6.2015ம் தேதியன்று தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்து வந்த தோழி சுவாதியை பார்க்கச் சென்றார். அன்று இரவு அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் (24.6.2015) மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே காவேரி ஆர்எஸ் - ஆனங்கூர் இடையே ரயில் தண