Sunday, April 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: ஊழல்

சிபிஐ பிடியில் சிக்கியது சர்வோதய சங்கம்! கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது வெட்டவெளிச்சம்!!

சிபிஐ பிடியில் சிக்கியது சர்வோதய சங்கம்! கோடிக்கணக்கில் ஊழல் நடந்தது வெட்டவெளிச்சம்!!

கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சேலம், தேனி, மதுரை, முக்கிய செய்திகள்
கோவை அருகே, சர்வோதய சங்கத்தில் போலி கைத்தறி நெசவாளர்கள் பெயரில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது சிபிஐ போலீசார் விசாரணையில் வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது. விரைவில், இந்த வழக்கில் முக்கிய புள்ளிகள் மீது எப்ஐஆர் பாய்கிறது. கோவை அருகே, ரெட் ஃபீல்ட்ஸ் பகுதியில் ஆவாரம்பாளையம் சர்வோதய சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கம், 1966ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொண்டாமுத்தூர், சரவணம்பட்டி, பீளமேடு, கருமத்தம்பட்டி, வாகராயம்பாளையம், நீலாம்பூர், ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம், இடையர்பாளையம், ராம் நகர் மற்றும் ஊத்துக்குளி, ஸ்ரீவில்லிப்புத்தூர், சுப்ளாபுரம், செங்கோட்டை, தேனி ஜக்கம்பட்டி உள்பட 28 இடங்களில் இதன் கிளைகள் உள்ளன. செயலாளர், பொருளாளர், மேலாளர், எழுத்தர், தினக்கூலி பணியாளர்கள் என மொத்தம் 500 பேர் வேலை செய்து வருகின்றனர். தலைமையிடம் மற்றும் கிளைகளில் 1000 கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளதா
ஒரே நாடு ஒரே மொழி… ஆனால், இரண்டு கோமாளிகள்! பாராளுமன்றத்தில் பேசக்கூடாத சொற்களின் பட்டியல்!

ஒரே நாடு ஒரே மொழி… ஆனால், இரண்டு கோமாளிகள்! பாராளுமன்றத்தில் பேசக்கூடாத சொற்களின் பட்டியல்!

அரசியல், இந்தியா, முக்கிய செய்திகள்
பாராளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொற்களின் பட்டியலை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது.   மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், மக்களவை, மாநிலங்களவையில் பயன்படுத்தக் கூடாது சொற்களின் பட்டியலை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. ஆங்கிலம், ஹிந்தி மொழிச் சொற்கள் அதிகளவில் இடம் பிடித்துள்ளன.   தடை செய்யப்பட்டுள்ள சொற்கள்:   வெட்கக்கேடு திட்டினார் துரோகம் செய்தார் ஊழல் ஒட்டுக்கேட்பு ஊழல் கொரோனா பரப்புபவர் வாய்ஜாலம் காட்டுபவர் நாடகம் கபட நாடகம் திறமையற்றவர் அராஜகவாதி சகுனி சர்வாதிகாரம் சர்வாதிகாரி அழிவு சக்தி காலிஸ்தானி இரட்டை வேடம் பயனற்றது ரத்தக்களரி குரூரமானவர் ஏமாற்றினார் குழந்தைத்தனம் கோழை கிரிமினல் முதலைக்கண்ணீர் அவமானம் கழுதை கண்துடைப்பு ரவுடித்தனம்
ஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர்! தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை!

ஆளுங்கட்சியிடம் தஞ்சம் புகுந்த ஊழல் மாஜி துணைவேந்தர்! தோண்டி துருவும் லஞ்ச ஒழிப்புத்துறை!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள்
  ஆசிரியர் பணி நியமனங்களுக்கு லட்சக்கணக்கில் பட்டியல் போட்டு வசூல் வேட்டை நடத்திய பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன், வழக்கில் இருந்து தப்பிக்க ஆளுங்கட்சியில் ஐக்கியமாகிவிட்ட முன்னாள் அமைச்சர்களிடம் தஞ்சம் அடைந்துவிட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.   சேலத்தை அடுத்த கருப்பூரில், கடந்த 24 ஆண்டுகளாக பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இப்பல்கலையுடன், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 113 கலை, அறிவியல் கல்லூரிகள் இணைவு பெற்று செயல்பட்டு வருகின்றன.   இப்பல்கலையின் துணைவேந்தராக கடந்த 2014 முதல் 2017 வரை சுவாமிநாதன் என்பவர் பணியாற்றி வந்தார். ஆராய்ச்சியாளர்களையும், பெரும் கல்வியாளர்களையும் உருவாக்க வேண்டிய பல்கலைக்கழகம், அவருடைய பணிக்காலத்தில்தான் ஊழல் வேட்டைக்களமாக மாறிப்போனதாக கூறுகிறார்கள்
சர்வோதய சங்கங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்; நெசவாளர்களை சுரண்டும் கும்பல்! ஆதாரங்களுடன் அம்பலம்!!

சர்வோதய சங்கங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்; நெசவாளர்களை சுரண்டும் கும்பல்! ஆதாரங்களுடன் அம்பலம்!!

குற்றம், கோயம்பத்தூர், சென்னை, தூத்துக்குடி, தேனி, முக்கிய செய்திகள், வேலூர்
தமிழகத்தில், சர்வோதய சங்கங்களில் கைத்தறி நெசவாளர்கள் பெயரில் போலி உறுப்பினர்களைச் சேர்த்து, பல ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உண்மையான கைத்தறி நெசவாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய கூலி, போனஸ் தொகையை காலங்காலமாக ஒரு கும்பல் கூட்டு சேர்ந்து சுரண்டி வந்துள்ளன.   மத்திய அரசின் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) கீழ், தமிழ்நாட்டில் மொத்தம் 70 சர்வோதய சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த துறை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கட்டுப்பாட்டில் உள்ளது. கையால் நூற்ற நூலை, கையாலும் காலாலும் நெய்யப்படும் துணிதான் கதர். அப்படியான கதர் துணி நெசவாளர்கள் மற்றும் கிராம கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சந்தைப்படுத்த சர்வோதய சங்கங்கள் தொடங்கப்பட்டன. மொத்தமுள்ள சங்கங்களில் நாலைந்து தவிர ஏனைய சர்வோதய சங்கங்கள் கதர் து
தண்டனைக்கு தப்பிய குற்றவாளிகள்! தீர்ப்புகள் திருத்தப்படலாம்!!

தண்டனைக்கு தப்பிய குற்றவாளிகள்! தீர்ப்புகள் திருத்தப்படலாம்!!

சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் (63), நாடறிந்த வழக்கறிஞர் மட்டுமல்ல; மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த வழக்கறிஞர் சாந்தி பூஷணின் மகன்களுள் ஒருவரும்கூட. பொதுநல வழக்குகளில் எப்போதும் ஆர்வம் செலுத்தி வரும் பிரசாந்த் பூஷண், மனதில் பட்டதை அப்பட்டமாகப் பேசிவிடக் கூடியவர். அவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பற்றி, கடந்த ஜூன் 27, 2020ல் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை வெளியிட்டு இருந்தார். அதில், கொரோனா காலத்தில் புலம் பெயர் தொழிலாளர்கள் வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கையாண்ட விதம், விசாரணை நடத்திய முறை குறித்தும், பீமா கோரேகான் வழக்கில் கைதாகியுள்ள சமூக செயல்பாட்டாளர்கள் வரவரராவ், சுதா பரத்வாஜ் ஆகியோருக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாததையும், நீதிபதிகள் அதைக் கண்டிக்காமல் இருப்பதையும் கேள்விக்கு உட்படுத்தி இருந்தார்.
சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஊழல்! நெசவாளர்களின் ரத்தத்தையும் உறிஞ்சிய அதிமுக பிரமுகர்கள்!!

சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஊழல்! நெசவாளர்களின் ரத்தத்தையும் உறிஞ்சிய அதிமுக பிரமுகர்கள்!!

குற்றம், சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், பட்டு நெசவாளர்கள் கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் சரக்கு விற்பனை இருப்பில் 1.10 கோடி ரூபாய்க்கு மேல் போலி முறைகேடு செய்திருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த நூதன மோசடி மூலம் ஆளும் அதிமுக பிரமுகர்கள் நெசவாளர்களின் ரத்தத்தையும் உறிஞ்சி குடித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.   சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில், 'சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட்' என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனம் 1956ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கைத்தறியால் நெய்யப்பட்ட வெண்பட்டு வேட்டி, சட்டை, அங்கவஸ்திரத்திற்கு உலகளவில் பெயர் பெற்றது இந்நிறுவனம். இதில் தற்போது, 1558 நெசவாளர்கள் 'ஏ' வகுப்பு உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில், 1150 நெசவாளர்கள் தொடர்ந்து வெண்பட்டு உருப்படிகளை நெய்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் ஆண்டு விற்பனை சராசரியாக 12 கோடி ரூபாய். கடைசிய
தமிழ்நாட்டில் ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது! பழ.கருப்பையா சொல்கிறார்!!

தமிழ்நாட்டில் ஊழலை ஊழலே இடப்பெயர்ச்சி செய்கிறது! பழ.கருப்பையா சொல்கிறார்!!

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கடந்த 2011 முதல் 2016 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் பழ.கருப்பையா (76). அவருடைய மறைவுக்குப் பிறகு திமுகவில் இணைந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, அக்கட்சியில் இருந்தும் வெளியேறி இருக்கிறார் பழ.கருப்பையா. பழ.கருப்பையா, ஒரு கட்சியில் இருந்து கொண்டே எப்போது அந்தக் கட்சியையே எதிர்மறையாக விமர்சிக்கிறாரோ அதையடுத்து அவர் அக்கட்சியைவிட்டு விலகி வேறு கட்சியில் சேரப்போகிறார் என்பது அவருடைய கடந்த கால அரசியல் செயல்பாடுகளை உற்றுக் காண்பவர்களுக்கு நன்றாகவே தெரியும்.   இந்திய தேசிய காங்கிரஸ், சிண்டிகேட் காங்கிரஸ், ஜனதா கட்சி, திமுக, மதிமுக மீண்டும் காங்கிரஸ், பின்னர் அதிமுக, திமுக என கடந்த 50 ஆண்டுகளில் அவர் போகாத அரசியல் கட்சிகள் இல்லை. நாளையே அவர் மீண்டும் திமுகவில் இணைந்தாலும், சேர்த்துக் கொள்ள அக்கட்சியும் மறுக்காது. ஆனாலும், தரம
பெரியார் பல்கலையில் 28 கோடி ரூபாய் ஊழல்! தொடரும் தில்லுமுல்லு; தணிக்கையில் அம்பலம்!!

பெரியார் பல்கலையில் 28 கோடி ரூபாய் ஊழல்! தொடரும் தில்லுமுல்லு; தணிக்கையில் அம்பலம்!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் பெரியார் பல்கலையில் போலி ஆசிரியர்கள் நியமனம், தவறான ஊதிய நிர்ணயம் உள்ளிட்ட புகார்கள் மட்டுமின்றி, 28 கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கலாம் என்று 2016-2017ம் ஆண்டின் தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.   ஒரு பல்கலைக்கழகம் எப்படி எல்லாம் இருக்கக்கூடாதோ அப்படி எல்லாமுமாக இருந்து வருகிறது சேலம் பெரியார் பல்கலைக்கழகம். இன்னும் சில ஆண்டுகளில் வெள்ளிவிழாவை எதிர்நோக்கி இருக்கும் இப்பல்கலை, யுஜிசி, பல்கலை விதிகள், உயர்கல்வித்துறை என எதன் சட்ட வரையறைக்குள்ளும் அகப்படாமல் தான்தோன்றித்தனமான செயல்பாடுகளால், கடும் சீர்கேடுகளை அடைந்திருக்கிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை மெய்ப்பிக்கும் நோக்கில் 1997ல் தொடங்கப்பட்டதுதான் பெரியார் பல்கலை. இந்நான்கு மாவட்டங்களிலும் த
விடைத்தாள் டெண்டரில் ஊழல்! பெரியார் பல்கலை மீது புது புகார்; விஜிலன்ஸ் விசாரணை!!

விடைத்தாள் டெண்டரில் ஊழல்! பெரியார் பல்கலை மீது புது புகார்; விஜிலன்ஸ் விசாரணை!!

குற்றம், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆசிரியர் நியமனத்தில் ஊழல், போலி சான்றிதழ் விவகாரங்களில் சிக்கித் திணறி வரும் பெரியார் பல்கலையில் விடைத்தாள் கொள்முதல் செய்ததிலும் பல லட்ச ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக புதிதாக மேலும் ஒரு புகார் எழுந்துள்ளது.   சேலம் பெரியார் பல்கலையில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளை படித்து வருகின்றனர். தவிர, இப்பல்கலையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் எடப்பாடி, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய நான்கு இடங்களில் உறுப்புக்கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அரசு, நிதியுதவி பெறும் மற்றும் சுயநிதி கலைக்கல்லூரிகள் என 101 கல்லூரிகள் இப்பல்கலையுடன் இணைவு பெற்றுள்ளன. பல்கலை மற்றும் உறுப்புக்கல்லூரிகள், இணைவு கல்லூரிகள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படி
சேலம்: பள்ளி சீருடை கூலியில் பல கோடி ரூபாய் சுருட்டல்! #Scam #SocialWelfare

சேலம்: பள்ளி சீருடை கூலியில் பல கோடி ரூபாய் சுருட்டல்! #Scam #SocialWelfare

குற்றம், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
-சி-ற-ப்-பு-  க-ட்-டு-ரை-   பள்ளிக் குழந்தைகளுக்கு விலையில்லா சீருடை தைத்துக் கொடுத்த ஏழை பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல கோடி ரூபாய் கூலித்தொகையை சத்தமே இல்லாமல் ஏப்பம் விட்டுள்ளது எடப்பாடி பழனிசாமி அரசு. தமிழ்நாடு முழுவதும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் 1445 அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 1.25 லட்சத்துக்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்களுக்கு ஆண்டுக்கு நான்கு செட் விலையில்லா சீருடைகளை தமிழக அரசு வழங்குகிறது.   தொழில் கூட்டுறவு சங்கம்:   ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் டிரவுசரும் சட்டையும் சீருடையாக வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்குசட்டையும் ஸ்கர்ட்டும் வழங்கப்படுகிறது. 6ம் வகுப்பு மேல் பயிலும் மாணவர்களுக்கு பேன்ட், சட்டையும், மாணவிகளுக்கு சுடிதார், டாப்ஸ், பேன்ட் ஆகியவையும்