Monday, August 10மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: turnout

சட்டமன்ற தேர்தல் 2026: தமிழகத்தில் 85.10 சதவீதம் வாக்குப்பதிவு

சட்டமன்ற தேர்தல் 2026: தமிழகத்தில் 85.10 சதவீதம் வாக்குப்பதிவு

அரசியல், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப். 23ம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம், கடந்த மார்ச் 15ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அந்த நிமிடத்தில் இருந்தே மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்த தேர்தலில், திமுக தலைமையில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஐ., சிபிஎம்., மதிமுக, ஐயுஎம்எல் உள்ளிட்ட 25 கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கண்டன. அதிமுக தலைமையில் பாஜக., அமமுக, தமாகா., உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்த இரு கூட்டணிகள் தவிர, நாம் தமிழர் கட்சி, புதிய வரவான நடிகர் விஜய்யின் தவெக., ஆகிய கட்சிகளும் தேர்தல் களம் கண்டன. மாநிலம் முழுவதும் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டது. குறிப்பிட்ட தொகுதிகளில் வி.கே.சசிகலாவின் அஇபுதமமுக கட்சியும், டாக்டர் ராமதாஸின் அணி கட்சியும் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்தது. கடைசி நேரத்தில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி...
மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குப்பதிவு

மக்களவை தேர்தல்: தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குப்பதிவு

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 69.72 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆண்களை விட பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் அதிகளவில் வாக்களித்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கும், புதுச்சேரி மக்களவை தொகுதிக்கும் என மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இத்துடன் தமிழகத்தில் காலியாக இருந்த விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் அதேநாளில் இடைத்தேர்தல் நடந்தது. வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக தமிழகம் முழுவதும் 68321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 950 பேர் களம் இறங்கினர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்...