Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: treatment

சேலம்: கேன்சர் நோயால் உயிருக்குப் போராடும் இலங்கை தமிழரின் மகன்;  ‘உதவும் உள்ளங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்’!!

சேலம்: கேன்சர் நோயால் உயிருக்குப் போராடும் இலங்கை தமிழரின் மகன்; ‘உதவும் உள்ளங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்’!!

உலகம், சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள குறுக்குப்பட்டி (அட்டை) இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் யோகராஜா. பெயிண்டர். இவருடைய மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். மகளும், மகனும் ஏற்காட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கின்றனர். இரண்டாவது மகன் பூபாலன் (16), எஸ்எஸ்எல்சி படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்த ஏராளமான தமிழர்களில் யோகராஜா குடும்பமும் ஒன்று. கடந்த 1990ம் ஆண்டு குறுக்குப்பட்டி முகாமில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்தார். பெயிண்ட் அடிக்கும் வேலைக்குச் சென்றால்தான் அன்றாடம் வீட்டில் அடுப்பெரியும். இந்த வேலையில் தினமும் அவருக்கு ரூ. 450 கூலி கிடைக்கிறது. 12 மணி நேரம் வேலை செய்தால் ரூ. 650 வரை கிடைக்கும். ஆனாலும் ஆண்டு முழுவதும் வேலை கிடைக்காது. சொற்ப கூலி, அரசு வழங்கும் உதவித்தொகை மூலம் குடும்பம் நடத்தி வந்த நில
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவும் பிரஷ்ஷர் குக்கரின் கடைசி விசிலும்!

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவும் பிரஷ்ஷர் குக்கரின் கடைசி விசிலும்!

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சாவுக்கு ஒரு ஓட்டு; நோவுக்கு ஒரு ஓட்டு என்று அரசியல் செய்வதில் அதிமுககாரர்கள் கில்லாடிகள் என்பதற்கு, அப்பல்லோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றது தொடர்பாக இன்று (டிசம்பர் 20, 2017), வெளியான வீடியோ இன்னுமொரு சான்று. ஜெயலலிதா இறந்து ஓராண்டு ஆகியும் அவருடைய மரணம் குறித்த சர்ச்சைகள் இறக்கை கட்டிப் பறந்து கொண்டுதான் இருக்கின்றன. யோசித்துப் பார்த்தால், அம்மா இட்லி சாப்பிட்டார் என்பது முதல் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரதாப் சி ரெட்டியின் அண்மைய அறிக்கை முதல் எல்லாவற்றிலும் ஒரு முரண்பாடு இருப்பதை அறிய முடியும். ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போதே சீரியஸ் நிலையில்தான் இருந்தார் என்று பிரதாப் சி ரெட்டி சொன்னதற்கு, சட்டம்&ஒழுங்கு கெட்டுவிடக்கூடாது என்பதுதான் காரணம் என நியாயம் கற்பிக்கிறார். நாளை (டிசம்பர் 21, 2017) ஆர்கே நகர்
திடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா? உடனடியாக டாக்டரை பாருங்க!

திடீர் மயக்கம், தலை பாரம், ஞாபக மறதி, கண் கட்டுதல் இருக்கிறதா? உடனடியாக டாக்டரை பாருங்க!

அலோபதி, சேலம், பெண்கள் நலம், மருத்துவம், முக்கிய செய்திகள்
இன்றைக்கும் போதிய விழிப்புணர்வு இல்லாததால், வலிப்பு நோயால் துடிக்கும் ஒருவருக்கு, சாவிக்கொத்து அல்லது ஏதேனும் இரும்பைக் கையில் திணிக்கும் போக்கே நீடிக்கிறது. ஆனால், வலிப்புக்கும் இரும்புக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்கிறது மருத்துவ உலகம். அதேநேரம், ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் வலிப்பு நோயை முற்றிலும் கட்டுப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் நம்பிக்கை அளிக்கின்றனர். எனினும், சரியான நேரத்தில் முறையான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கின்றனர். வலிப்பு நோய் எதனால் வருகிறது? அறிகுறிகள், சிகிச்சை முறைகள் குறித்து சேலம் இரண்டாம் அக்ரஹாரத்தில் உள்ள திரு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மூளை நரம்பியல் (நியூராலஜிஸ்ட்) துறை மருத்துவர் க.திருவருட்செல்வன் விரிவாக விளக்கம் அளித்தார். அவரிடம் பேசியதில் இருந்து... வலி
உறுப்பு மாற்று சிகிச்சைக்காக இளைஞர் கடத்தப்பட்டாரா?: நடராஜன் விவகாரத்தில் நடந்தது என்ன?

உறுப்பு மாற்று சிகிச்சைக்காக இளைஞர் கடத்தப்பட்டாரா?: நடராஜன் விவகாரத்தில் நடந்தது என்ன?

அரசியல், சென்னை, தஞ்சாவூர், தமிழ்நாடு, திருவாரூர், புதுக்கோட்டை, முக்கிய செய்திகள்
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்வதற்காகவே தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞரை வலுக்கட்டாயமாக சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸில் கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சசிகலாவின் கணவரும், 'புதிய பார்வை' இதழின் ஆசிரியருமான எம்.நடராஜன் (74), உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்து விட்டதாகவும், விரைவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் சில நாள்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. உறவினர்கள் வட்டாரத்தில் உறுப்பு தானம் பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையே, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூத்தாடிவயலைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற 22 வயது இளைஞர், கடந்த செப். 30ம் தேதி சாலை வி
அதிமுக: ‘பாபநாசம்’ பாணியில் காதில் பூ சுற்றும் அமைச்சர்கள்!

அதிமுக: ‘பாபநாசம்’ பாணியில் காதில் பூ சுற்றும் அமைச்சர்கள்!

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''ஜெயலலிதா, சிகிச்சையில் இருந்தபோது இட்லியும் சாப்பிடவில்லை; சட்னியும் சாப்பிடவில்லை. பொய் சொன்னதற்காக நாங்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்,'' என்று ரைமிங் ஆக வசனம் பேசி அதிமுகவில் திடீரென்று குழப்ப வெடிகளை கொளுத்திப் போட்டார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் சீனிவாசனின் இத்தகைய பேச்சை அப்போது கட்சிக்குள் யாருமே ரசிக்கவில்லை. குறிப்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக முதல்வர் இபிஎஸ், திண்டுக்கல் சீனிவாசனிடமே தனது அதிருப்தியை நேரிடையாகச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது, ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வராக இருந்தார். அதன் பிறகு, உட்கட்சி பூசலால் ஏற்பட்ட சலசலப்புகளால் பிரிந்திருந்த ஓ.பன்னீர்செல்வம் இப்போது துணை முதல்வராக எடப்பாடி பழனிசாமி அணியில் அங்கம் வகிக்கிறார். தீர்க்கமான விசாரணை என்று வரும்போது, திண்டுக்கல் சீனிவாசனின் இ