Tuesday, April 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: teachers

குரங்கணி: ஆசிரியர்களே இது தகுமா?; செல்ஃபி மோகத்தில் கரைந்த மனிதம்!

குரங்கணி: ஆசிரியர்களே இது தகுமா?; செல்ஃபி மோகத்தில் கரைந்த மனிதம்!

ஈரோடு, சென்னை, தமிழ்நாடு, தேனி, மதுரை, முக்கிய செய்திகள்
குரங்கணி கொழுக்கு மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்பதற்காக வந்த ஹெலிகாப்டர் முன்பு ஆசிரியர் பயிற்சி மாணவிகள், ஆசிரியர்கள் ஆர்வமாக நின்று கொண்டு செல்பி, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டது உள்ளூர் மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாள்களுக்கு முன்புதான், 'அடிமேல் அடி வாங்கும் ஆசிரியர்கள்; திரும்பிய திசையெல்லாம் இடி' என்ற தலைப்பில் புதிய அகராதி இணையத்தில் ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். தொடக்கக் கல்வித்துறை மட்டுமின்றி ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட துறை அதிகாரிகளின் தலையீட்டால் ஆசிரியர்கள் கடும் மன உளைச்சளுக்கு ஆளாவது பற்றியும், அதனால் குழந்தைகளின் கல்வி நலன் பாதிக்கப்படுவது குறித்தும் விரிவாகவே எழுதியிருந்தோம். ஆசிரியர்களிடம் பரவலாக வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், குரங்கணியில் ஆசிரியர்களும், ஆசிரியர் பயிற்
‘துறுதுறு’ குழந்தைகள் ‘திருதிரு’ பெற்றோர்கள்!; ஏடிஹெச்டி செய்யும் மாயம்!!

‘துறுதுறு’ குழந்தைகள் ‘திருதிரு’ பெற்றோர்கள்!; ஏடிஹெச்டி செய்யும் மாயம்!!

அலோபதி, குழந்தைகள் நலம், சிறப்பு கட்டுரைகள், சேலம், மருத்துவம், முக்கிய செய்திகள்
''அடடடடா....உங்க மகன், ஒரு நிமிஷம்கூட கிளாஸ்ல உட்கார மாட்டேன்கிறான், மேடம். அவனுக்கு வகுப்பறை விதிகளைக் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க...'' ''நாங்களும் எவ்வளவோ கோச்சிங் கொடுத்துட்டோம். அவனால அடிப்படை கணக்குப்பாடம் கூட சரியாக செய்ய முடியறதில்ல...'' இதுபோல இன்னும் நிறைய. இப்படி எல்லாம் உங்கள் பிள்ளைகள் மீது புகார்கள் வந்திருந்தால், நிச்சயம் உங்கள் குழந்தைக்கு, 'அட்டென்ஷன் டெஃபிஸிட் ஹைப்பர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Attention Deficit Hyperactivity Disorder)' பிரச்னை இருக்கலாம், என்கிறது மருத்துவ உலகம். இது நோய் அல்ல; குறைபாடு. சுருக்கமாக ஆங்கிலத்தில், 'ADHD'. தமிழில், 'கவனக்குறைவு மற்றும் மிகுசெயல்பாடு கோளாறு'. குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படும் உளவியல் கோளாறுகள், கற்றலில் ஏற்படும் சிக்கல்களைக் களைவது குறித்து, சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் உள்ள 'டாக்டர் ராமு லைஃப்கேர் மருத்து
ஆசிரியர்களுக்கு குரல் கொடுக்கும் கமல்!

ஆசிரியர்களுக்கு குரல் கொடுக்கும் கமல்!

அரசியல், சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஆசிரியர்கள் பணிக்கு வராமல், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாட்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படாது எனில், ரிசார்ட்டில் தங்கியுள்ள குதிரைபேர எம்எல்ஏக்களுக்கு மட்டும் சம்பளம் கொடுக்கலாமா? என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக உள்கட்சி பூசல்களால் தமிழக மக்கள் நலன் பாதிக்கப்படுவது குறித்தும், ஆளுங்கட்சியின் ஊழல்கள் குறித்தும் நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அதிமுக பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது, நல்லதொரு மாற்றம் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார். 'டுவிட்டர் அரசியல்வாதி' என்று ஆளும் தரப்பும், பாஜகவும் கமல்ஹாசனை கிண்டல் அடித்தாலும், 'டுவிட்டரும் போராட்ட களம்தான்' என்று சளைக்காமல் பதிலடி கொடுத்தார். சமகால அரசியல் நகர்வுகள், சமூக பிரச்னைகள் குறித்து அவர் சமூகவலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டு வருவது, அ
அரசுப்பள்ளிகள் மேம்பட என்ன செய்ய வேண்டும்? – டான்சீன் யோசனை

அரசுப்பள்ளிகள் மேம்பட என்ன செய்ய வேண்டும்? – டான்சீன் யோசனை

கல்வி, சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி நிலையங்கள் சங்கம் (டான்சீன் - TANCEAN-Tamilnadu Catholic Educational Association ), தமிழ்வழிப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக சில யோசனைகளை தமிழ்நாடு, புதுச்சேரி மாநில அரசுகளுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் கீழ், தமிழகம், புதுவையில் 2630 கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. டான்சீன் கல்வியாளர்கள் கூட்டம் கடந்த மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகம், புதுவையில் நடந்தது. தமிழ்மொழி, தமிழர் பண்பாடு, கலாச்சாரம் காக்கப்பட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர். அந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் முக்கிய அம்சங்கள்: தமிழ்வழிப் பள்ளிகளின் இன்றைய நிலை: பொதுமக்களிடையே ஆங்கிலவழிக் கல்வி மீதான மோகம் அதிகரித்துள்ளது. ஆங்கிலத்தில் பேசுவது, படிப்பது பெருமை என மக்கள் எண்ணுகிறார்கள். மிகவும் ஏழை குழந்தைகளின் தேர்வாக மட
எஸ்மா: மீண்டும் திரும்புகிறது 2003?

எஸ்மா: மீண்டும் திரும்புகிறது 2003?

அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை, எஸ்மா / டெஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆறாவது ஊதியக்குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும் என மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ எனப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கடந்த 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான அரசு அலுவலகங்கள், அமைச்சுப்பணி ஊழியர்களின்றி முடங்கிக் கிடக்கின்றன. அனைத்து மாவட்டங்களிலும், திங்கள் கிழமைகளில் பல்வேறு பணிகளுக்காக அரசு அலுவலக
சபரிமாலாக்களும் அரசு ஊழியர்கள் போராட்டமும்!

சபரிமாலாக்களும் அரசு ஊழியர்கள் போராட்டமும்!

ஈரோடு, கல்வி, சிறப்பு கட்டுரைகள், சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விழுப்புரம்
நீட் தேர்வுக்கு எதிராக ஆசிரியை சபரிமாலா அரசுப்பணியை ராஜினாமா செய்துவிட்டு போராட்டத்தில் இறங்கியுள்ள அதேநேரத்தில், அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஊதிய உயர்வுக்காக தொடர் வேலைநிறுத்தம் செய்து வருவதால் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் வழக்கமாக தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தங்களது கோரிக்கைகளை முன்னெடுத்து போராடுவார்கள். இப்போது ஆளுங்கட்சி உள்ள நிலையில் எப்போது போராடினாலும், அவர்களுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கும், அதன்மூலம் சில பல காரியங்களை சாதித்துக் கொள்ளலாம் என்ற உள்ளார்ந்த கணக்கீடுகளும் ஜாக்டோ - ஜியோ அமைப்புக்கும் இருக்கலாம். அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ - ஜியோவின் பிரதான கோரிக்கை, பணப்பலன்களை பெறுவதே. குறிப்பாக, இப்போது அமலில் உள்ள புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வ
முதல்வர் தொகுதியில் ‘முதல்வரின்’  கோல்மால்!

முதல்வர் தொகுதியில் ‘முதல்வரின்’ கோல்மால்!

கல்வி, கிருஷ்ணகிரி, சேலம், தமிழ்நாடு, தர்மபுரி, நாமக்கல், முக்கிய செய்திகள்
பெரியார் பல்கலை உறுப்புக்கல்லூரி முதல்வர் வெங்கடேஸ்வரன், இல்லாத பாடப்பிரிவுக்கு பாடம் நடத்தியதாக முன்அனுபவச் சான்றிதழில் குறிப்பிட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதிக்கு உட்பட்ட கல்லூரியின் முதல்வரே இவ்வாறு தவறான தகவல்களை தந்துள்ளது தற்போது அம்பலமாகி உள்ளது. சேலம் பெரியார் பல்கலை, கடந்த 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்கலை தொடங்கப்பட்ட நாள் முதலே ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதிலும், இணைவு கல்லூரிகளில் புதிய துறைகள் தொடங்கப்படுவதிலும் ஊழல் நடைபெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டே உள்ளன. இப்பல்கலையின் கீழ், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட அரசு, தனியார், நிதியுதவி பெறும் கலைக்கல்லூரிகள் இணைவு பெற்று இயங்கி வருகின்றன. மேட்டூர், பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்ப
நேற்று  செங்கொடி;  இன்று அனிதா!

நேற்று செங்கொடி; இன்று அனிதா!

அரசியல், இந்தியா, கல்வி, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''பொறுத்தது போதும்...புறப்படு தமிழா...'' மருத்துவர் கனவு நனவாகாத சோகத்தில் உயிர் தற்கொடையாக்கிய இளம்தளிர் அனிதாவின் மரணம், தமிழ்நாட்டின் சோகம் மட்டுமன்று; அது, இந்தியாவின் துயரம். மானுடத்தின் மீது அரச பயங்கரவாதம், தர்க்க ரீதியில் நிகழ்த்தும் அதிபயங்கர வன்முறைக்கு தன்னையே காவு கொடுத்திருக்கிறாள் அனிதா. அனிதாவின் முடிவை வேறெந்த ஒரு மாணவரும் எடுத்துவிடக் கூடாது என்பதில் இந்த அரசுகள் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வேறு வழியில்லை; நாம் மீண்டும் அரசின் கதவுகளைத்தான் தட்ட வேண்டியதிருக்கிறது. தற்கொலை என்பது ஏற்கப்படுவதற்கில்லை. அதில் நமக்கும் உடன்பாடுதான். ''அனிதாவின் தற்கொலை, பிற மாணவர்களுக்கு முன்னுதாரணம் அல்ல. கனவு நிறைவேறாவிட்டால் தற்கொலைதான் முடிவா? 'விமான ஓட்டி' கனவு நிறைவேறாதவர்தான் கலாம்,'' என்று நடிகர் விவேக் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகனை இழந்த தந்தைக்குரிய ப