”நம்புங்கள் பிரதமரே! முயலுக்கு நான்கு கால்கள்தான்!!”
பணமதிப்பிழப்பு (Demonetisation) நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில், சமூகவலைத்தளங்களில் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பலர் கேலி, கிண்டலாக மீம்ஸ்கள் மூலம் கருத்துகளை பதிவிட்டு உள்ளனர்.
இரவு நேரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த வயதிலும் அப்படி என்னதான் பற்றுதலோ தெரியவில்லை. இப்படிச் சொல்வது கொஞ்சம் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஸ்டைல் போலத் தோன்றினாலும் யாரும் அனர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். அவர் நாட்டை உலுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் இரவில்தான் அறிவிக்கிறார். பணமதிப்பிழப்பு முதல் ஜிஎஸ்டி வரை எல்லாமே இரவில்தான் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
1000 ரூபாய், 500 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்கப்படுவது குறித்து எனக்குக்கூட தெரியாது என அப்பாவியாகச் சொன்னார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி. ரிசர்வர் வங்கி ஆளுநருக்கே கூட அறிவிப்புக்கு சற்று முன்னர்தான் தெரி...